ஒபாமா நோபல் பரிசுக்கு தகுதி வாய்ந்தவரா..?
ஓபாமா நோபல் பரிசுக்கு
தகுதி வாய்ந்தவரா?
ஜார்ஜ் டபுள்யு புஷ்ஷின் எட்டு வருட கொடுங்கோல் ஆட்சிக்கு பிறகு பாரக் ஒபாமா ஹுஸைன் சமாதான தூதுவராக வெள்ளை மாளிகையில் நடந்து வந்த போது உலக மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அன்று முதல் போரும் சமாதானமும் என்ற விஷயத்தைப் பற்றியுள்ள சொற்பொழிவில் வெற்றி
பெற்றாரைத் தவிர நடப்பில்
ஒரு துளிக் கூட கொண்டுவரவில்லை.
அறிமுகம் வாய்ந்த கியாண்டனமோ சிறைச்சாலையை அடைத்து பூட்டுவேன். போருக்கு முற்றுப்புள்ளி வைத்து ஈராக்கை விடுதலை செய்வேன். ஈரானோடு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என வாக்குறுதிகளை சொல்லி சொல்லி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்த ஒபாமா
அமெரிக்காவின்
தலைமையிடத்தில்
ஜனவரி-20-ல் அமர்ந்து கொண்டார்.
நோபல் பரிசின் பெயர் பரிந்துரை செய்வதின் கடைசிநாள் பிப்ரவரி 1 பன்னிரண்டு நாட்களில் பரிசு வாங்குவதற்க்கு தகுதி வாய்ந்த எதை செய்து முடித்தார் ஒபாமா?
ஜனவரி 20-ல் பதவிஏற்பு அணிவகுப்பு பார்வையிடுதல், விருந்து,
21-ல் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்,
வெள்ளை மீண்டும் மாளிகையில் விருந்து 22-ல் தொழிலாளிகள் ஒழுங்கு நடவடிக்கை உறுதிமொழி
எடுக்க உத்தரவு பிறப்பித்தார். கைதிகளோடு கேள்வி கேட்கும் விதத்தைப்பற்றி
ராணுவ மானவல் உறுதி செய்தார்.
கியாண்டனமோ சிறைச்சாலை சந்திக்க வேண்டுமென்று அதிகாரிகளோடு கூறினார்.
23 வெளிநாட்டு அமெரிக்காரர்கள் ஆரோக்கியஉதவி சம்பந்தமான உத்தரவில் கையெழுத்து பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் 25-ல் ஞாயிறு விடுமுறை 26-ல் கலந்துரையாடல் 27-ரிபப்பலிக் தலைவர்களுடன் நேர்காணல் ஒஹாயோவில் ஒரு சொற்பொழிவு 28-பொருளாதார விஷயத்திலுள்ள கூட்டங்கள்,
ராணுவ விடுப்பின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் 29-ல் கூலி சம்பந்தமான ஒரு சட்ட நிர்மாணத்தில் ஒப்புவைத்தல்,
விருந்து.
பைடனுடன் சர்ச்சை
30-ல் பொருளாதார விஷயம் சம்பந்தமான கலந்துரையாடல் சொற்பொழிவு. அதிகாரிகளுடன் ராணுவ கலந்து ஆலோசனை 31-ல் ஒய்வு எடுத்தார்.
பிப்ரவரி ஒன்று ஞாயிறு விடுமுறை பார்ட்டி நடத்தினார்.
பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது.
இதில் எந்த விஷயத்திற்காக இருக்கும்?
நோபல் பரிசுகள் அதிலும் முக்கியமாக சமாதானப் பரிசு இது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யித்ஸாக் ரபினும் ஷிமோன் பெரஸினும் அது
கொடுத்த வேளையில் மக்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள்.
இது சமாதானத்திற்குரிய பரிசா?
அல்லது போருக்குள்ள பரிசா? யார் என்ன சொன்னாலும் ஒபாமாவின் ஒரு மகத்துவம் அவர் ஜார்ஜ் புஷ் அல்ல என்பதுதான்.
ஒரு வேளை இந்த ஒரு உண்மைக்காக சமாதானக்கமிட்டி அவரை தேர்ந்தெடுத்திருக்கலாம்
புஷ்ஷினுடையை சில சட்டங்களை இராக்கிலிருந்து
மாற்றி ராணுவ வீரர்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி அந்த நாட்டுக்கு பூரண சமாதானத்தை அளிப்பேனென்று கூறி இருந்தார்.
தீவிரவாத எதிர்ப்பு போராட்டத்தின் பெயரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறாது. கைதிகளோடு விசாரணை செய்யும் ரீதியில் மாற்றங்கள் உண்டாகும்.
அபூகரீப், காகுண்டனோமா போன்ற பேய்
முகங்களுள்ள சிறைச்சாலையை அடைத்து பூட்டுவேன்.
ஒரு சில மாதங்கள் மட்டும்அதிகாரத்தில் இருந்துள்ள ஒபாமாவுக்கு வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்ற முடியவில்லை.
வேறு சில காரியங்களில் ஏமாற்றத்தையும் அளித்துள்ளார். ஈராக்கிலிருந்து இராணுவ வீரர்களை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பவதற்கு பதில் அதிவேகமாக ஆப்கானிஸ்தானில் கூடுதல் இராணுவ வீரர்களை அனுப்பி இருக்கிறார்.
அங்கே சிவிலியன் கேம்ப்களில் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவிக்கிறார். கியாண்டனோமாவை அடைத்து பூட்டுவதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் இருக்கிறார்.
ஆனால் ஒபாமா சாமர்த்தியமாக சொல்லி வருகின்ற ஒரு உண்மை உண்டு.
அதுதான் எதிர்பார்ப்பு இன்றைய போர்முக நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தைப்பற்றியுள்ள ஒரு எதிர்பார்ப்பைத் தருகிறார்.
கனவுகள் ஒரு நாள் உலகில் நிகழ்வதற்குத்தான். இந்த நோபல் பரிசு. பாலஸ்தீனத்தில், முஸ்லிம் அட்டூழியத்தில் இப்படி
பலவற்றிலும் ஒரு மாற்றம் சம்பவிக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறார் ஒபாமா..
ஆனால் எதிர்பார்ப்பை கொண்டு எவ்வளவு காலம் வாழ முடியும்? எங்களுடைய குடியேற்றம் இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து கொண்டல்லவா இருக்கிறார்களென்று பாலஸ்தீன கேட்கிறார்கள்.
மக்கள் எங்களுக்கு எப்போது ஒரு சுதந்திர நாடு உருவாகும்? அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்போது எங்களுடைய நாட்டை விட்டு வெளியேறுவார்களென்று ஈராக் நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
அதை கேள்வியை ஆப்கான் மக்களும் கேட்கிறார்கள்.
ஒபாமா அதிகாரத்திலிருந்த ஒன்பது மாதமும் அமெரிக்காவின் கொடூர முகத்தைத்தான் ஆப்கான், ஈராக் பாலஸ்தீன், ஈரான், பாகிஸ்தான் வெனிஸிலா, பொளவியா, சோமலியா, கியூபா, தென் கொரியா, இக்கோடார் ஹோண்டுரோஸ், நிக்கார,போன்ற நாடுகளிலுள்ள மக்கள் அனுபவித்தார்கள் ஆனால் எதிர் பார்ப்பு உண்டு. அந்த எதிர்பார்ப்புக்குத்தான் இந்த நோபல் பரிசு.
யார் என்ன சொன்னாலும் ஒபாமா இன்னும் அவரது தகுதியை நிருபிக்கவில்லை அவர் நோபல் பரிசுக்கு
தகுதியற்றவராக இருந்தாலும் புஷ்ஷூக்கு கொடுக்கப்பட்ட காலணிப் பரிசை வாங்கமாட்டார் என்று எதிர்பார்ப்போம் எதிர்பார்ப்புக்கல்லவா அனைத்து பரிசுகளும்.
நன்றி-மாத்யமம்-வீக்லீ
தமிழில்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி