இஸ்லாத்தில் தீவிரவாதமா...?

இஸ்லாத்தில் தீவிரவாதமா...?

Sirajudheen Ahsani
எழுத்தாளர்


இஸ்லாத்தில் தீவிரவாதமா..?

தீவிரவாதம் என்ற பெயரை கேட்டால் சிலருக்கு நினைவு வருவது தலைப்பாகையும், தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் களையும், இஸ்லாமையும் தான்.
தீவிரவாத சம்பவங்களை முஸ்லிம் இயக்கத்தின் மீதும் முஸ்லிமின் மீதும்
சுமத்தப்பட்டு முஸ்லிம்களையும் இஸ்லாமையும் கொச்சைப்படுத்துவதின் மீது சிலரின் தந்திரமும் மற்றும் சிலருக்கு பேராசையாகவும் இருக்கிறது.

செப்டம்பர் 11- க்கு பிறகு அமெரிக்காவுடைய தலைமையில் துவங்கி வைத்த தீவிரவாத எதிர்ப்பு போராட்டம் என்ற பொய் வேஷம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டு குடிமகனின் சுதந்திரமும் கருத்தும் தாறுமாறாக்கப்பட்ட ஒரு காலகட்டம் நவீன உலக வரலாற்றில் காண இயலாது.
ஹிட்லர் யூதர்களுக்கு விளைவித்த கொடூரங்களை விட அதிபயங்கரம் என்று சொல்லலாம்.

இன்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருப்பது என்ன-?
அணு ஆயுதமல்லாத மற்றும் அனைத்து விதமான ஆயுதங்கள் பயன்படுத்தி ஒரு நாட்டு மக்களை அவர்கள் குழந்தையன்றோ பெண்களன்றோ வயதானவர்களன்றோ பாராமல் கொடூரமாக கொன்றுகுவிக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் தலைமையிடம் என்று சொல்லி பைலட் இல்லாத போர் விமானங்களை பயன்படுத்தி டன் கணக்கில் குண்டுகளை நிறைத்துவிட்டு பறக்கின்ற விமானங்களிலுள்ள குண்டுகளை குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று பாராமல் மழையாக பொழிகின்றார்கள்
அரக்கர்கள்.

எங்கிருந்தோ வந்த இவர்கள் ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் குடிமகனின் சுதந்திரத்தையும்
தடை செய்வதற்கு, பறிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? ஜப்பானிலோ,
பிரான் ஸிலோ அமெரிக்காவிலோ சென்று ஒரு நாட்டு இராணுவ வீரன் அவர்களை கொன்றான் என்றால் அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்று மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஆப்கானிகளுக்கும் ? — ஈராக்கிகளுக்கும் மாபெரும் கொடுமையாளர்களான (அவர்கள் பாஷையில்) உஸாமா பின் லேடனையும், சர்க்காவியையும், முல்லா உமரையும் பிடித்து தருபவர்களுக்கு அல்லது அவர்களின் இருப்பிடத்தை அறிவித்து தருபவர்களுக்கு இலட்சம் டாலர்கள் விலைபேசும் அமெரிக்கா,
கொடும் அட்டூழியங்களை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் செய்து அங்குள்ள மக்களை கொன்று குவித்து அவர்களின் பொன்னான கலாச்சாரங்களை தூக்கி எறிந்து நல்லவர்கள் என்று நடித்து வாழும் கொடுமையாளன புஷ்ஷுக்கும். டோனிபிளேருக்கும் விலை பேசுவது யார்?

இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டிய
சிலக் காரியங்கள் இருக்கிறது.
அதாவது முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல இஸ்லாம் சமாதானத்தின் மதம் என்றெல்லாம் நாம் மேடைகள் தோறும் சொற்பொழிவுகள் நடத்தினாலும் அதனால் நமக்கு பலன் ஏற்பட போவதில்லை. ஏனென்றால் யூதனின் தந்திரமும், அமெரிக்காவின் பின்பலமும் மீடியாக்களின் சூழ்ச்சியும்தான் இங்கே மிகைத்து நிற்கிறது அவர்களின் கையில் தான் செய்தி ஊடகங்கள் இருக்கிறது.

சமாதான மதத்தை எடுத்து கூற இவைகள் தடையாக எதிரில் நிற்கிறதே என்று பயந்து யாரும் பின் வாங்ககூடாது.

சாந்தியின் மதமான இஸ்லாமை மக்கள் முன்பும் சமூகத்தின் முன்பும் எந்தவிதமான தொல்லைகள் இருந்தாலும் துன்புறுத்தலுகள் வந்தாலும் இஸ்லாமை எடுத்து சொல்லுவதற்கு தயங்கக்கூடாது. எவர்கள் நம்மை தீவிரவாதிகள் என்று சொன்னார்களோ அவர்கள் முன் இஸ்லாத்தின் வரலாறுகள்! இஸ்லாத்தின் கொள்கைகள்,
நபியின் வாழ்கையையும் இஸ்லாம் கற்றுத் தந்த யுத்த வழிமுறையையும் எதற்காக யுத்தம் செய்யவேண்டும் என்ற உண்மைகளை எல்லாம் நாம் எங்கும் பரப்ப வேண்டும்.

தீவிரவாதம் என்பதற்கு பல அர்த்தங்கள் நாம் கொடுக்கலாம் அதில் ஒன்றுதான்
தன்னுடைய மதம். கொள்கை மட்டுமே இங்கு பூமியில இருக்க வேண்டும் மக்கள் அனைவரும் அதில் அணி சேர வேண்டும் இல்லையெனில் அவர்களை தீர்த்துக் கட்டவேண்டும் என்ற உறுதியான கொள்கைப்பாடுள்ளவன் இவன் தனக்கும் தன்னுடைய மக்களுக்கும் தீங்கு இழைப்பான் என்பதில் சந்தேகமில்லை இவைதான் அமெரிக்கா பிரிட்டன் போன்ற மதவெறியர்களின் கொள்கை ஆனால் இதற்கு முற்று புள்ளி வைக்கும் முகமாக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

(இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை வழிகேட்டிலிருந்து விலகி நேர்வழி எவ்வாறன்று தெளிவாகி விட்டது) இஸ்லாம் என்பது சமாதானத்தின் கோட்டை எவரும் நுழையலாம்,
எவரும் நுழைய வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது.

அதிலிருந்து படிக்கலாம் சமாதானத்தின் பூக்களை நுகரலாம் அங்கு கட்டாயம் இல்லை

சஹாபிகளில் ஒருவர் தன்னுடைய மகள் இஸ்லாம் மார்க்கத்தில் சேரவில்லையே என துக்கத்திலிருக்கும் வேளையில் இறங்கிய ஆயத்துதான் மேலே சொன்னது.

இஸ்லாத்தில் தீவிரவாதத்தின் பதவி...

இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு எள்ளளவும் இடம் கிடையாது.
ஒரு மனிதன் தீவிரவாதி ஆகுவதற்கு பலவிதமான காரணங்கள் நமக்கு
கூற முடியும் அதிலொன்றுதான் மேலே கூறப்பட்டது
இனி மதவெறியினால் ஏற்படக்கூடிய தீவிரவாதத்தை குர்ஆனில் இறைவன் எதிர்ப்பதை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான்.

நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம். (சூரத்துஷ் ஷுஅரா. 4)

இனி மேலும் வேறு ஒரு வசனத்தில் ரசூலுல்லாஹ்வோடு அவர்களை (காபிர்களை) இஸ்லாத்தின் பால் அழைக்கும் முறைப்பார்ப்போம்.

நபியே! நீர் மனிதர்களை நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக அன்றி அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் நீர் கண்ணியமான அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான் நேரான வழியிலிருப்போர் யார் என்றும் அவன் அறிவான்.
(அந்நஹ்ல் 125)

தமிழில்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி..