தரஜத்துன் ரஃபீஆ
அஸ்ஸலாமு அலைக்கும்..
மாநபி_சிறப்பை_விவரிக்கும் ஒன்பதாவது_நூல்_வெளியீடு.
அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது மீலாத் விழாவை
உலக முஸ்லிம்கள் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.
இந்த சங்கையான மாநபியின்
1500_ மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
(SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
#தரஜத்துன்_ரஃபீஆ எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கின் தனித்துவமான சிறப்புக்களை விவரிக்கும் புத்தகம் வெள்ளிக்கிழமை தினம் மஃரிப் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியா மஸ்ஜிதுந்நபவிக்கு அருகில் உள்ள மஸ்ட் அல் புஸ்தான் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற
மவ்லித் மஜ்லிஸில் வைத்து வெளியிடப்பட்டது..
துவக்கத்தில் நூல் மொழிபெயர்ப்பாளர் மெளலானா மெளலவி
#சிராஜுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் நூல் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்கள்..
பின்னர் நூலின் முதல் பிரதியை
திருவனந்தபுரம் மாவட்ட ஸமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமா செயலாளர் மெளலானா மெளலவி
#ஜாபிர்_ஃபாழிலி_உஸ்தாத்
அவர்கள்
வெளியிட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் அல்ஹாபிழ் மெளலானா மெளலவி M.#முஹம்மது_அன்வரி_ஹஸ்ரத்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
இரண்டாவது பிரதியை
கொல்லம் காதிஸிய்யா ஹஜ் உம்ரா சர்வீஸ் மேனேஜர்
#நிஸாம்_முஸ்லியார் அவர்கள்
வெளியிட
முஹிப்புல் உலமா இனயம்
#ஜலாலுதீன் (ஜனாப்)அண்ணன் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த மகத்தான மவ்லித் மஜ்லிஸில் ஆலிம்கள்
சகோதரர்கள்
தாய்மார்கள், சகோதரிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...
இன்னும் மாநபியின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக..
நாம் அனைவருக்கும் மதீனா பூந்தோட்டத்தில் சென்று
வர இறைவன் பாக்கியம் வழங்கியருள்வானாக....
ஆமீன் யா றப்பல் ஆலமீன்
அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..