மாநபி சிறப்பை விவரிக்கும் ஏழாவது நூல் வெளியீடு
அஸ்ஸலாமு அலைக்கும்..
#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #ஏழாவது_நூல்_வெளியீடு.
அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது மீலாத் விழாவை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.
இந்த சங்கையான மாநபியின்
1500_ மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
(SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
#ஹலீமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) கண்ட அதிசயங்கள் எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டிய
செவிலித்தாய் ஹலீமா அம்மையார் குறித்து விவரிக்கும் புத்தகம் இன்றைய தினம் குளச்சல் நகரில் சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா அரபிக் கல்லூரியில் வைத்து நடைபெற்ற *முப்பெரும் விழாவில்*
வெளியிடப்பட்டது..
ஹலீமத்துஸ் ஸஃதிய்யா அரபிக் மத்ரசாவின் முதல்வர் மெளலானா மெளலவி S.ஷரஃபுத்தீன் அஸ்ஹரி ஹஸ்ரத் அவர்கள் நூல் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்கள்..
நூலின் முதல் பிரதியை
மெளலானா மெளலவி அப்துல் கரீம் அன்வரி ஹஸ்ரத் அவர்கள்
வெளியிட சாஹுல் ஹமீத் அண்ணன்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
இரண்டாவது பிரதியை
சுவாமியார் மடம்
ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மெளலானா மெளலவி
நெளஃபல் ஸகாஃபி ஹஸ்ரத் அவர்கள் வெளியிட மார்த்தாண்டம் இர்ஷாதுத் தாலிபீன் அரபிக் மத்ரஸா பேராசிரியர்
மெளலானா மெளலவி
J. செய்யித் அன்வரி பெற்றுக் கொண்டார்கள்.
மூன்றாவது பிரதியை
ஷாஃபி அவர்கள் வெளியிட கல்லூரி துணை முதல்வர்
மெளலானா மெளலவி
அப்துர்ரஹ்மான் அன்வரி ஹஸ்ரத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
இந்த மகத்தான முப்பெரும் விழா மஜ்லிஸில் ஏராளமான தாய்மார்கள், சகோதரிகள்,.
கல்லூரி மாணவிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...
இன்னும் மாநபியின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக
ஆமீன் யா றப்பல் ஆலமீன்
அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..