மழலையர்களின் நபிதின கொண்டாட்டம்

மழலையர்களின் நபிதின கொண்டாட்டம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#மழலையர்களின்_நபிதின #கொண்டாட்டம்

தெமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு அழகிய கடற்கரை கிராமம்
புத்தன் துறை..
(P.P.S புரம்)

ரபீஉல் மாதத்தை மிக சிறப்பாக வரவேற்கும் அழகிய கிராமம்...

இனயம், தேங்காய் பட்டணம் போன்ற ஊர்களின் நடுவில் இது உள்ளது..

ரபீஉல் அவ்வல் மாதத்தின் பனிரெண்டு நாட்களும் பள்ளிவாசலில் வைத்து மிக கம்பீரமாக மவ்லித் மஜ்லிஸ் நடைபெறும்..

மாவட்டத்தின் தலைசிறந்த ஆலிம்களை வரவழைத்து கடைசி மூன்று நாட்கள் மிக சிறந்த முறையில் பயான் மஜ்லிஸ் ஏற்பாடு செய்வர்...

நபிகள் மீது நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அண்ணல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது லட்சக்கணக்கான ஸலவாத்களை சொல்வர்..

கடைசி தினம் மதரசா மாணவ கண்மணிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகள் நடைபெறும்...

ரபீஉல் அவ்வல் 12_ ஆம் நாள் ஊர் மக்கள் அனைவருக்கும் கந்தூரி வழங்குவர்...

அல்ஹம்துலில்லாஹ்
இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

நாயகத்தின்
புகழ் பாக்கள்..

மத்ஹ் கீதங்கள்..

நாயகத்தைப் பற்றிய கவிதை இயற்றுதல்
கட்டுரை இயற்றுதல்..
மதீனா படம் வரைதல்..

நாயகத்தின் வாழ்வில் நடந்த வரலாற்று துளிகள், தகவல்களை எடுத்துச் சொல்வது என்று ஒரு நாள் முழுவதும் நம் மழலையர் நாயகத்தைப் பற்றி எடுத்து சொல்வதை பார்க்கும் போது எவ்வளவு இனிமை,
எவ்வளவு மகிழ்ச்சி
எவ்வளவு ஆனந்தம்
எவ்வளவு குதூகலம்
எவ்வளவு சிறப்பு...

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை புகழ்ந்து கவிதைகள் பாடுவதற்கு நபித்தோழர் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் மேடை அமைத்துக் கொடுத்தார்கள்..

தன்னை புகழ்ந்து பாடிய நபி தோழர்களுக்கு துஆ செய்தார்கள்...

சில சமயங்களில் தன்னை புகழ்ந்த நபி தோழர்களை போர்வை அணிவித்து கவுரவித்தார்கள்...

இப்படியெல்லாம் வரலாற்றிலே பார்க்கிறோம்...

நம் மழலையர்களும் நாயகத்தின் மத்ஹ் கீதங்கள் பாடுகிறார்கள்,
கவிதைகள் இயற்றுகிறார்கள்,
கட்டுரைகள் எழுதுகிறார்கள்..
நாயகத்தின் வாழ்வில் நடந்த வரலாற்று துளிகள், தகவல்களை எடுத்துக் கூறுகிறார்கள்..

இதைச் செய்யும் நம் மழலையர்களையும் கவுரவப்படுத்தி பரிசில்கள் வழங்க வேண்டுமல்லவா..?

அவர்களையும் கவுரப்படுத்த வேண்டுமல்லவா..?

ஆம்!! நிச்சயமாக..

அல்ஹம்துலில்லாஹ்..

நபி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன...
அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்..
அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி..
நமக்கும் மகிழ்ச்சி...

சிறுவயதிலிருந்தே நாம் நம் குழந்தைகளுக்கு நாயகத்தின் வரலாற்றை எடுத்துக் கூறும் இதுபோன்ற மகத்தான விழாக்களை ஊக்குவித்து நம் பிள்ளைகளையும் நபி தின போட்டிகளில் பங்குகொள்ளச் செய்வோம்...

எல்லா வருடங்களும் தொய்வின்றி தொடர்ந்து ரபீஉல் அவ்வல் மாதத்தை கவுரவப்படுத்தி, சிறப்பு செய்ய அல்லாஹ் பேரருள் புரிவானாக..
ஆமீன்*

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.....