மொபைல் பார்த்து மவ்லித் ஓதுபவரா நீங்கள். இதை கொஞ்சம் படியுங்கள்.
மொபைல் பார்த்து மவ்லித்
ஓதுபவரா
நீங்கள்...?
இதை கொஞ்சம் படியுங்கள்..
✍️
ஸெய்யித் ஷிஹாபுத்தீன் புகாரி.
தமிழில்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி
ஒரு மவ்லித் மஜ்லிஸ்.
மவ்லித் ஓத ஆரம்பித்தனர்.
முன்னால் மவ்லித் கிதாப் வைக்கப்பட்டுள்ளது.
ஓரிருவர் அதைப்
(மவ்லித் கிதாப்) பார்த்து
ஓதுகிறார்கள்.
மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பார்த்து ஓதுகின்றனர். மவ்லித் கிதாப் அழகான
ஒரு தலையணையில்
வைக்கப்பட்டுள்ளது.
அதன் மேல் ஒரு கண்கவரும்
விரிப்பும் விரிக்கப்பட்டு உள்ளது.
தலையணை மீது உள்ள கிதாபின் ஒவ்வொரு பக்கமும் மரியாதையுடன் புரட்டப்படுகிறது.
இனி மொபைல் போன் பார்த்து ஓதுபவர்களின் விஷயத்திற்கு வருவோம்.
சிலர் கையில் பிடித்தனர்.
மற்று சிலர் தரையில் வைத்துள்ளனர். மவ்லிது முடிந்து ஃபாத்திஹாவும் யாசினும் ஓதத் தொடங்கிய போதும் அவர்களின் மொபைல்கள் தரையில்தான் இருக்கின்றன.
ஓதும் இடையில் ஃபோன் வருகிறது எடுத்து பேசுகிறார்கள்.
திரையில் வாட்ஸ்அப் மெசேஜ் வருகிறது அதையும் பார்த்து ஒரு அலட்சியமாக
ஒரு ஓதுதல்..
இன்றைய மவ்லிதுக் கூட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு சங்கடமான காட்சிதான் நான் இங்கே உங்களுக்கு பகிர்ந்தது.
நமது முன்னோர்கள் குர்ஆனையும், மவ்லிதையும் எவ்வளவு
மரியாதையாகப் ஓதினார்கள்.
குர்ஆனையும், அவ்ராத் கிதாபுகளையும் எடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அவர்களின் அடக்கம், கண்ணியம், பணிவு அதை நாம் பார்த்தால் மெய்சிலிர்த்து விடுவோம்.
அந்த அளவுக்கு மரியாதை செலுத்தினர்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், மரியாதையும், கண்ணியமும் நமக்கு அந்நியமாகிவிட்டதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.
மஜ்லிஸுகளுக்கு முன்னிலை வகிக்கும் தலைவர்கள் கூட லாவகமாக நடந்து கொள்ளும் காட்சிகள்.
அதை சாமானியர்கள் பின்பற்றவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
குர்ஆன் ஓதவோ, மவ்லிது ஓதவோ மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறவில்லை.
மாறாக, அத்தகைய காரியங்களுக்கு பயன்படுத்தும்போது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
அப்போதுதான் செய்த செயல்களுக்கு போதிய பக்தியும், பலனும் கிடைக்கும். பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
முடிந்தவரை அச்சிடப்பட்ட வடிவத்திலுள்ள குர்ஆன்கள் மற்றும் அவ்ராதுகளை பயன்படுத்துதல் நல்லது. மொபைலை தரையில் வைத்து குர்ஆன், திக்ர் மற்றும் மவ்லித் ஓதாமல் இருப்பது மிகவும் நல்லது.
விளம்பரங்களைக் காட்டும் அத்கார் செயலிகளை Uninstall செய்வது,
மசூதிகளில் தொலைபேசியை Silent_ஆக வைத்திருப்பது போன்றவற்றில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதப் (மரியாதை) இஸ்லாத்தில் மிக முக்கியமான பாடமாகும்.
அல்குர்ஆன் மற்றும் கிதாபுகளைப் பயன்படுத்தும் போதும், மஜ்லிஸுகளின் பங்கேற்கும் போதும் அவைகளுக்கான கண்ணியத்தை நாம் கொடுக்க வேண்டும்.
அது நாம் செய்யும் வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.
இந்த உணர்வுடன் மவ்லித் நாம் மஜ்லிஸுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நமது மவ்லிது மஜ்லிஸுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வானாக...
அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தாரையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முஹிப்பீன்களில் சேர்த்துக் கொள்வானாக..