மீலாத் விழா கொண்டாட ஆதாரம்
#மீலாது_விழா_கொண்டாட_ஆதாரம்....
இருபதாம் நூற்றாண்டின் முஸ்லீம் மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவரும், உலக முஸ்லிம்களின் தன்னிகரற்ற தலைவருமான ஷேக் இப்ராஹிம் நியாஸ் தங்களிடம் ஒருமுறை மீலாத் பண்டிகை கொண்டாடுவதற்கான மார்க்க ஆதாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் அளித்த பதில்...
"குறிப்பிட்ட சில காரியங்களுக்கு எழுத்துப்பூர்வ ஆதாரம் வேண்டுமென கட்டாயம் இல்லை..
தாய் தன் மகனை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறியதாக யாராவது குர்ஆனில் காட்ட முடியுமா?"..
நிச்சயமாக அல்லாஹ் ஒரு தாயிடம் தன் மகனை நேசிக்கச் சொல்லவில்லை, ஏனெனில் அது தேவையில்லை. ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் (தாயின்) இதயங்களில் அன்பை பதித்திருக்கிறான்.
ஆனால் மகனிடம் தன் தாயை நேசிக்க சொல்கிறான்..
காரணம் சில சமயங்களில் தாயின் மீது காட்ட வேண்டிய அன்பில் அவன் (மகன்) சில குறைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது....
சூஃபிகள் மண்மறைந்து சென்ற அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து மட்டுமல்ல,நித்திய ரப்பிடமிருந்தும் அறிவைப் பெறுகிறார்கள்.
எழுதப்பட்ட புத்தகங்களிலிருந்து மட்டுமே அறிவைப் பெறுபவர்கள் இறந்தவன் இறந்தவனிடமிருந்து பெறுபவர்களைப் போன்றவர்களாகும்...
சூஃபி தத்துவத்தின்படி, பரிசுத்த இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறும் வரை யாரும் அறிவிலும், அன்பிலும் முழுமையானவர் அல்ல.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி