ஆஷுறாவும் தாஸுஆவும்

ஆஷுறாவும் தாஸுஆவும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

........*#ஆஷுறாவும்_தாஸூஆவும்*.......

ஆக்கம்: ✍️அப்துல் றஹ்மான் அன்வரி...

*#ஆஷூரா_தினம் என்பது முஹர்ரம் பத்தாம் நாள்*

இந்த தினம் பரகத் நிறைந்த தினம் என்று கூறப்படும்.

இந்த தினத்தில் அதிகமான காரியங்கள் நிகழ்ந்துள்ளதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

இந்த தினத்தில்

*ஆதம் நபி (அலை) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்*

*தண்ணீர் ப்ரளயத்திலிருந்து நூஹ் நபியை அல்லாஹ் காப்பாற்றியுள்ளான்*

*இப்றாஹீம் நபி عليه السلامயை நம்ரூத் என்ற கொடூர அரசனிடமிருந்து காப்பாற்றியுள்ளான்*

*தொலைந்துபோன மகன் யூஸுஃப் நபிعليه السلامயை பல வருடம் தேடி கண்ணீர் சிந்திய தந்தை யஃகூப் நபிعليه السلامக்கு திரும்ப ஒப்படைத்தான்*.

*மூஸா நபியையும், பனீ இஸ்ராயீலையும் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மற்றும் அவன் படையிடமிருந்தும் காப்பாற்றினான்*

*தாவூத் நபிعليه السلامயின் பிரார்த்தனை அங்கீகரித்தான்*

*சுலைமான் நபிعليه السلام க்கு அரசாட்ச்சியை அன்பளிப்பாக வழங்கினான்*

*யூனுஸ் நபி عليه السلامஅவர்களை மீன் வயிற்றிலிருந்து வெளியாக்கினான்*

*அய்யூப் நபிعليه السلامன் நோயை குணமாக்கினான்*.

*இதுபோன்று ஏராளமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.*

*இந்த ஆஷூரா தினத்தில் நபி صلي الله عليه وسلم அவர்களின் மரணத்திற்க்குப்பின் மகள் ஃபாத்திமாرضي الله عنها வின் புதல்வன் ஹுஸைன்رضي الله عنه அவர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட தினம்.*

*இந்த சம்பவம் நடைபெறுவதை முன்பாகவே அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்தான்.*

*முஸ்னத் இமாம் அஹ்மத் (ரஹ்) பதிவு செய்திருக்கிறார்கள்.*

*மழையின் பொறுப்பாளி மீக்காயீல்عليه السلام அல்லாஹ்விடம் நபி صلي الله عليه وسلم அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு நபியை சந்திக்க வருகிறார்கள்.*

*மலக்குடன் இருக்கும் அந்த நேரத்தில் நபியவர்கள் உம்மு ஸலமா رضي الله عنها அவர்களின் வீட்டில் படுக்கையில் இருந்தார்கள்.*

*கதவை அடைப்பதற்க்கு உம்மு ஸலமாவிடம் கூறுகின்றார்கள்*

*அவர்கள் அடைக்க முயன்றபோது குதித்தவர்களாக உள்ளே ஓடி நுழைந்து ஹுஸைன் رضي الله عنه அவர்கள் வந்தார்கள் நபியின் முதுகிலும், தோழ் புஜத்திலும், மடியிலும் புரண்டு விளையாடினார்கள்.*

*இதை கண்ட அந்த மலக்கு கேட்டார் இந்த குழந்தையை நேசிக்கிறீர்களா?*

*நபியவர்கள் ஆம் என்றார்கள்.*

*உடன் அந்த மலக்கு சொன்னார்.*

*உங்கள் சமுதாயம்தான் இந்த குழந்தையை கொல்லும் என்றார்.*

*நீங்கள் நாடினால் நான் அந்த இடத்தை காட்டி தருகின்றேன் என்று கூறியவாறு கொஞ்சம் சிவப்பு மண்ணை கொடுத்தார் அதை உம்மு ஸலமா رضي الله عنهاஅவர்கள் வாங்கி ஒரு துணியில் கட்டிவைத்தார்கள்.*

*அந்த மலக்கு சுட்டிக்காட்டிய இடத்தில்தான் கர்பலா என்ற சம்பவம் நிகவுற்றது.*

*ஹுஸைன் رضي الله عنه அவர்கள் கொல்லப்படும்போது வயது 56 ஆகும்.*

*அந்த நாளில் பகலில் நட்சத்திரங்கள் தென்பட்டது.*

*மலக்குமார்களெல்லாம் அழுதார்கள்.அந்த தினத்தில் கர்பலாவில் இருக்கும் எந்த கல்லை உயர்த்தி பார்த்தாலும் சிறு இரத்தம் அதற்க்கு கீழே இருக்கும் இந்த சம்பவம் நடைபெற்றது ஆஷூறா தினமாகும்.*

*இந்த தினத்தில் நோன்பு நோற்பது அல்லாஹ் சுன்னத்தாக்கினான் கட்டாயமில்லை.*

*நபியவர்களின் சொல்லை விரும்பிய நிலையில் நாம் இந்த தினத்தில் நோன்பு நோற்க்கிறோம்.*

*இது ஆஷூறா தினம்.உங்கள்மீது இந்த தினத்தில் நோன்பு விதியாக்கவில்லை*

*நான் நோன்பு வைத்துள்ளேன்.
நீங்கள் விரும்பினால் நோன்பு வையுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.*

நூல்:புகாரி (நோன்பு பாடம்)

*நபி صلي الله عليه وسلم மதீனாவில் வருகை தந்தபோது யூதர்கள் ஆஷூராவில் நோன்பு வைத்திருந்ததை பற்றி விசாரித்தார்கள். அவர்கள் சொன்னார்கள். எங்கள் நபி மூஸைவையும்,அவர் கூட்டத்தார் பனீஇஸ்ராயீலையும் ஃபிர்அவ்னை விட்டும் காப்பாற்றிய தினம் என்றார்கள்.உடனே நபியவர்கள் சொன்னார்கள் மூஸாவை கண்ணியபடுத்துவதில் உங்களைவிட நாங்கள் சிறந்தவர்கள் என்று கூறி தான் நோன்பு வைத்து இஸ்லாமியர்களை நோன்பு நோற்க்க சொன்னார்கள்*

நூல்: புகாரி, முஸ்லிம்

*ஆஷூறா தினத்தில் நோன்பு வைப்பது நபிமார்கள் மத்தியிலும் பிரபலமானது*

*இப்னு அபீ ஷைபாرضي الله عنه பதிவுசெய்கிறார்கள்.
நபி صلي الله عليه وسلم சொன்னார்கள். *ஆஷூறா தினத்தின் நோன்பு நபிமார்களெல்லாம் வைத்திருந்தார்கள் ஆகையால் நீங்களும் நோன்பு வையுங்கள்*
அறிவிப்பாளர்
அபூஹுரைரா رضي الله عنه

*கடந்து சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்டுகிறது*
நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

*ரமளானையும்,ஆஷூறா தினத்தையும் போன்று வேறெந்த தினத்திலும் நோன்பு வைப்பதின் மிக பெரிய சிறப்பை பற்றி நபியவர்கள் சொல்லியதாக நான் பார்க்கவில்லை* .

*அறிவிப்பாளர்
இப்னு அப்பாஸ்رضي الله عنه
நூல்:புகாரி*
🎍🪴🎍🪴🎍🪴🎍🪴

*ஆஷூறாவை போன்று அதற்க்கு முன் தினம் தாஸூஆ என்று கூறப்படுகின்ற தினத்திலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.*

*لئن بقيت الي قابل لأصومن التاسع*


*வரும் வருடத்தில் நான் உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது தினத்திலும் நோன்பு வைப்பேன் என்று நபியவர்கள் கூறினார்கள்*

*ஆனால் நபியவர்கள் அதற்க்கு முன் மரணித்துவிட்டார்கள்.*

*நூல்:முஸ்லிம்,இப்னு மாஜா *

*முஹர்ரம் பத்துடன் சேர்த்து ஒன்பதாவது தினம் நோன்பு நோற்பதின் பலன்*

*வருடத்தின் ஆரம்பத்திலேயே தன்னிடம் தவறு நிகழாமல் பாதுகாப்பது*

*யூதர்களுக்கு மாறுசெய்வது*

(யூதர்கள் முஹர்ரம் பத்தில் மட்டும்தான் நோன்பு வைப்பார்கள்.)

(இதுபோன்றுதான் வெள்ளிக்கிழமை தினம் மட்டும் நோன்பு நோற்பதை தவிர்க்கவேண்டும் முன்போ பின்போ ஒரு தினத்தை சேர்த்து
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதை வழமையாக்கவேண்டும்)

*இமாம் ஷாஃபி رضي الله عنه அவர்களும், அவர்களின் மாணவர்கள்,இமாம் அஹ்மத்رضي الله عنه இமாம் இஸ்ஹாக்رضي الله عنه ,வேறுசில இமாம்கள் சொல்கிறார்கள்.

*முஹர்ரம் ஒன்பது, பத்தையும் சேர்த்து நோன்பு வைப்பது சுன்னத் காரணம் நபியவர்கள் பத்தாவது தினம் நோன்பு வைத்தார்கள் ஆனால் ஒன்பதாவது தினம் நோன்பு வைப்பதாக நிய்யத்தும் வைத்தார்கள்.
ஆகையால் சேர்த்து நோன்பு வைத்து நபியவர்களை பின்பற்றுவோம் சுவனத்தின் ஈடேற்றத்தை அடைவோம்...*

*யார் அல்லாஹுக்காக நோன்பு வைப்பாரோ அவரை நரகத்தை விட்டும் அல்லாஹ் தூரமாக்குவான்*

அல்லாஹ் நம் அனைவர்களின் நோன்பை ஏற்றுக்கொள்வானாக!
ஆமீன்

*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*

💕💞💕💞💕💞💕💕
👇🌹👇🌹👇🌹🌹🌹

*#இந்த_தினத்தில்_நாம்_சொல்ல #வேண்டிய_திக்ருகள்*

‎‎‎‎‎‎‎‎‎
📿


*70 தடவை:-*

*حَسْبِيَ اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرْ*

*70 தடவை:-*

*سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاَ اِلَهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ اَكْبَرْ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمْ*

*300 தடவை:-*

*لَا اِلَهَ اِلَّا اَنْتَ الْعَلِيُّ الْأَعْلَى لَا اِلَهَ اِلَّا اَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى اَللَّهُمَّ ارْزُقْنِي كَمَالَ الْحُسْنَى وَسَعَادَةَ الْعُقْبَى وَخَيْرَ الْأَخِرَةِ وَالْأُولَى*

*1000 தடவை:-*

*اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ يَا ذَا الْجَلَالِ وَ الْاِكْرَامْ مِنْ جَمِيعِ الذُنُوبِ وَالْآثَامْ*

*1000 தடவை سورة الإخلاص* *பிறகு கீழே வரும் துஆவை செய்யவும்*

اَللَّهُمَّ اكْسِرْ شَهْوَتِي عَنْ كُلِّ مُحَرَّمٍ وَاَزْرِ حَرْصِي عَنْ كُلِّ مَأْثَمٍ وَاَمْنِعْنِي عَنْ اَذَى كُلِّ مُسْلِمٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرّاحِمِينْ

ﺳُﺒْﺤَﺎﻥَ اﻟﻠَّﻪِ ﻣِﻞْءَ اﻟْﻤِﻴﺰَاﻥِ ﻭَﻣُﻨْﺘَﻬَﻰ اﻟْﻌِﻠْﻢِ ﻭَﻣَﺒْﻠَﻎَ اﻟﺮِّﺿَﺎ ﻭَﻋَﺪَﺩَ اﻟﻨِّﻌَﻢِ ﻭَﺯِﻧَﺔَ اﻟْﻌَﺮْﺵِ، ﻭَاﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﻣِﻞْءَ اﻟْﻤِﻴﺰَاﻥِ ﻭَﻣُﻨْﺘَﻬَﻰ اﻟْﻌِﻠْﻢِ ﻭَﻣَﺒْﻠَﻎَ اﻟﺮِّﺿَﺎ ﻭَﻋَﺪَﺩَ اﻟﻨِّﻌَﻢِ ﻭَﺯِﻧَﺔَ اﻟْﻌَﺮْﺵِ ﻻَ ﺇﻟَﻪَ ﺇﻻَّ اﻟﻠَّﻪُ ﻣِﻞْءَ اﻟْﻤِﻴﺰَاﻥِ ﻭَﻣُﻨْﺘَﻬَﻰ اﻟْﻌِﻠْﻢِ ﻭَﻣَﺒْﻠَﻎَ اﻟﺮِّﺿَﺎ ﻭَﻋَﺪَﺩَ اﻟﻨِّﻌَﻢِ ﻭَﺯِﻧَﺔَ اﻟْﻌَﺮْﺵِ اﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﻣِﻞْءَ اﻟْﻤِﻴﺰَاﻥِ ﻭَﻣُﻨْﺘَﻬَﻰ اﻟْﻌِﻠْﻢِ ﻭَﻣَﺒْﻠَﻎَ اﻟﺮِّﺿَﺎ ﻭَﻋَﺪَﺩَ اﻟﻨِّﻌَﻢِ ﻭَﺯِﻧَﺔَ اﻟْﻌَﺮْﺵِ ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇﻻَّ ﺑِﺎَﻟﻠَّﻪِ ﻣِﻞْءَ اﻟْﻤِﻴﺰَاﻥِ ﻭَﻣُﻨْﺘَﻬَﻰ اﻟْﻌِﻠْﻢِ ﻭَﻣَﺒْﻠَﻎَ اﻟﺮِّﺿَﺎ ﻭَﻋَﺪَﺩَ اﻟﻨِّﻌَﻢِ ﻭَﺯِﻧَﺔَ اﻟْﻌَﺮْﺵِ ﻻَ ﻣَﻠْﺠَﺄَ ﻭَﻻَ ﻣَﻨْﺠَﺎ ﻣِﻦْ اﻟﻠَّﻪِ ﺇﻻَّ ﺇﻟَﻴْﻪِ ﺳُﺒْﺤَﺎﻥَ اﻟﻠَّﻪِ ﻋَﺪَﺩَ اﻟﺸَّﻔْﻊِ ﻭَاﻟْﻮِﺗْﺮِ ﻭَﻋَﺪَﺩَ ﻛَﻠِﻤَﺎﺕِ اﻟﻠَّﻪِ اﻟﺘَّﺎﻣَّﺎﺕِ اﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﻋَﺪَﺩَ اﻟﺸَّﻔْﻊِ ﻭَاﻟْﻮِﺗْﺮِ ﻭَﻋَﺪَﺩَ ﻛَﻠِﻤَﺎﺕِ اﻟﻠَّﻪِ اﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻻَ ﺇﻟَﻪَ ﺇﻻَّ اﻟﻠَّﻪُ ﻋَﺪَﺩَ اﻟﺸَّﻔْﻊِ ﻭَاﻟْﻮِﺗْﺮِ ﻭَﻋَﺪَﺩَ ﻛَﻠِﻤَﺎﺕِ اﻟﻠَّﻪِ اﻟﺘَّﺎﻣَّﺎﺕِ اﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﻋَﺪَﺩَ اﻟﺸَّﻔْﻊِ ﻭَاﻟْﻮِﺗْﺮِ ﻭَﻋَﺪَﺩَ ﻛَﻠِﻤَﺎﺕِ اﻟﻠَّﻪِ اﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇﻻَّ ﺑِﺎَﻟﻠَّﻪِ ﻋَﺪَﺩَ اﻟﺸَّﻔْﻊِ، ﻭَاﻟْﻮِﺗْﺮِ ﻭَﻋَﺪَﺩَ ﻛَﻠِﻤَﺎﺕِ اﻟﻠَّﻪِ اﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﺣَﺴْﺒُﻨَﺎ اﻟﻠَّﻪُ ﻭَﻧِﻌْﻢَ اﻟْﻮَﻛِﻴﻞُ ﻧِﻌْﻢَ اﻟْﻤَﻮْﻟَﻰ ﻭَﻧِﻌْﻢَ اﻟﻨَّﺼِﻴﺮُ ﻭَﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻰ ﺳَﻴِّﺪِﻧَﺎ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠَﻰ ﺁﻟِﻪِ ﻭَﺻَﺤْﺒِﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺗَﺴْﻠِﻴﻤًﺎ ﻛَﺜِﻴرا