நான் கண்ட இறை நேசர்.

நான் கண்ட இறை நேசர்.

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

.......#நான்_கண்ட_இறைநேசர்.....

வெள்ளிக்கிழமை காலையில் சுப்ஹு தொழுகைக்குப் பிறகு துக்கம் நிறைந்த ஒரு செய்தி கேட்க நேர்ந்தது..

இதுதான் அந்த செய்தி
கலீஃபா ஹழ்ரத் வஃபாத்தாகிவிட்டார்கள்..

இத்தகவலை கேட்ட மாத்திரம் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது....

கலீஃபா ஹழ்ரத் அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் கலீஃபாவும், காயல்பட்டணம் #மஹ்லறத்த்துல் காதிரிய்யா சபையில் ஏறக்குறைய 65 வருட காலங்கள் அருள் மணக்கும் காதிரிய்யா #திக்ர்_மஜ்லிஸ் நடத்தி வந்தவர்கள்..

தனது பணிவான அணுகுமுறை
மூலம், அனைவரிடமும் களங்கமில்லாத விதம் அக்கரை காட்டுவதினாலும் எல்லோருக்கும் பிரியமானவர்களாக திகழ்ந்த ஒரு நல்ல இறை நல்லடியார்தான் நமது கலீஃபா அவர்கள்..

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக அறிவிக்கப்படும் ஒரு நபிமொழியை இப்படி வாசிக்கலாம்..

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: قِيْلَ: يَا رَسوْلَ اللّهِ مَنْ أَوْلِيَاءُ اللّهِ، قَالَ: الَّذِيْنَ إِذَا رُؤُوْا ذُكِرَ اللّهُ تَعَالَى
ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள்.

அதுபோலவே வேறொரு
நபி மொழியில் இவ்விதம் பார்க்க முடியும்...

​அல்லாஹ்வின் நினைவை திறந்து விடும் திறவுகோலாக மனிதர்களில் சிலர் உள்ளனர்.
அவர்களை நீங்கள் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வரும் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் தப்றானி 10325)

இந்த நபிமொழி அடிப்படையில் நாம் கலீஃபா ஹழ்ரத் அவர்களை பார்க்கும் போதும், பேசும் போதும், அவர்களோடு அமரும் போதும், பழகும் போதும்
ஒரு விதமான ஈமானிய உணர்வு நமக்கு ஏற்படும்.

கலீஃபா ஹழ்ரத் அவர்கள் நமது மஹ்ழராவுக்கு வந்தால் அவர்களை முஸாஃபஹத் செய்யத் தோன்றும்.
அவர்களிடத்தில் நமது கஷ்டங்களை, நெருக்கடிகளை, துக்கங்களைச் சொல்லி துஆச் செய்யத் தோன்றும்..

அவர்கள் அருகாமையில் இருந்து ஏதாவது நஸீஹத் சொல்லித் தாருங்கள் என்று கேட்கத் தோன்றும்..

நிகழ்ச்சிகளில் அவர்களுடன் அமரும் வேளைகளில் மஹ்ழராவின் பழையகால வரலாறுகளை, அங்கு பணியாற்றிய உஸ்தாதுமார்களின் சரித்திரங்களை மிக நேர்த்தியாக எமக்கு விளக்கிச் சொல்வார்கள்..

எல்லா வருடமும்
ரபீஉல் ஆகிர் மாதத்தில் மஹ்ழராவில் நடைபெறும் கந்தூரியில் திக்ர் மஜ்லிஸை தலைமையேற்று நடத்தி வைக்க இலங்கையிலிருந்து காயல்பட்டினத்திற்கு விஜயம் செய்வார்கள்.
அவர்கள் ஊர் வந்தாலே எல்லோருக்கும் ஒருவிதமான ஆனந்தமும், குதூகலமாக இருக்கும்.

கலீஃபா ஹழ்ரத் வந்துட்டாங்க.
கலீஃபா ஹஸ்ரத்
வந்துட்டாங்க..

எல்லோரும் அவர்களிடம் குழுமியிருந்து முஸாஃபஹத் செய்து
உபதேசம் தேடுவார்கள்...

கலீஃபா ஹழ்ரத் அவர்களின் திக்ர் மஜ்லிஸ் ஒரு தனித்துவம் வாய்ந்த மஜ்லிஸ்.

கலீஃபா ஹஸ்ரத் அவர்கள் நம் எண்ணங்களை
சிதற விடாமல் திக்ரில் லயிக்க செய்து விடுவார்கள்..

கலீஃபா ஹழ்ரத் அவர்களின் திக்ர் மஜ்லிஸ் என்பது ஒரு அலாதியான பேரின்பத்தை நமக்கு அள்ளித் தரும் ஒரு மகத்தான மஜ்லிஸ்..

நேற்றைய தினம் சுப்ஹு தொழுகைக்கு பின்னர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மனம் ரொம்பவும் வேதனை அடைந்தது...

காரணம் ஒரு ஆலிமின் மரணம் என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல..

அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்..

பூமியின் அழிவு
பூமியிலுள்ள ஆலிம்களும், மார்க்க சட்ட வல்லுநர்களும், ஸாலிஹீன்களும் மரணிப்பது மூலமாகும் என்கிறார்கள்..

إِ يَقُولُ عبدُ اللهِ بنُ عُمرَ -رَضِيَ اللهُ عَنهُمَا-: "خَرَابُ الأَرضِ بِمَوتِ عُلَمائِهَا وَفُقَهَائِهَا وَأَهلِ الخَيرِ فِيهَا"[1].

(வல்லோன் அல்லாஹ் நமது வாழ்ந்து கொண்டிருக்கும் உஸ்தாதுமார்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் வழங்கியருள்வானாக..)

வாழ்நாள் முழுவதையும் தீனின் எழுச்சிக்காக,
திக்ர் மஜ்லிஸுகள் நடத்துவதற்காக,
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்
காதிரிய்யா தரீக்காவை பரப்புவதற்காக பயணித்த மகான் நமது கலீஃபா அவர்கள்..

தீனுக்காக அளப்பரிய
சேவைகள் ஆற்றியது மூலம் அவர்களின் ரூஹை நல்ல வேளையில்,மகத்தான தினத்தில் வல்லோன் அல்லாஹ் எடுத்துக் கொண்டான்.

فعن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: «مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللهُ فِتْنَةَ الْقَبْرِ

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

யார் வெள்ளிக்கிழமை இரவிலோ,பகலிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்

வானமும், பூமியும் ஒரு மனிதனின் விஷயத்தில் அழுமா...?
என்ற கேள்விக்கு
ஆம்..
ஒரு முஃமின் மரணமடைந்தால்
அழும் என்று பதிலளிக்கப்பட்டது.

عن ابن عباس، أنه سئل:
أتبكي السماء والأرض على أحد؟ قال نعم، إذا مات المؤمن

அதனடிப்படையில் பார்க்கும் போது கலீஃபா ஹழ்ரத் அவர்கள் மரணமடைந்த அந்த தினத்தில் அழகானதொரு மழையும் பெய்தது என்பதை நினைக்கும் போது கலீஃபா ஹழ்ரத் அவர்கள் அல்லாஹ் மற்றும் இறைநேசர் களுடன் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுகிறது..

அன்னாரின் இழப்பு காயல்பதி மக்களுக்கும்,
காதிரிய்யா தரீக்காவின் முஹிப்பீன்களுக்கும்,
குடும்பத்தாருக்கும்,
இலங்கை வாழ் காதிரிய்யா தரீக்காவின் ஆஷிக்கீன்களுக்கும் பெரும் துக்கத்தையும், இழப்பையும் தந்திருக்கிறது..

வல்லோன் அல்லாஹ் கலீஃபா ஹழ்ரத் அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ரை விசாலப்படுத்தி,
தரஜாக்களை உயர்த்தி,
சுவனத்தை அன்பளிப்பாக வழங்கி,
நபிமார்கள், அவ்லியாக்கள், ஸாலிஹீன்களுடன் சுவனம் நுழைய கிருபைச் செய்வானாக...

இவர்களை போன்ற நல்லதொரு பகரத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியருள்வானாக.

ஆமீன் யா றப்பல் ஆலமீன்...

அன்புடன்..
அல்ஹாபிழ்:M.#மவ்லவி_முஹம்மது அன்வரி...
(பேராசிரியர்:மஹ்ழரத்து காதிரிய்யா அரபிக் கல்லூரி. காயல்பட்டினம்)