கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்

கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*#கல்விக்காக_தன்_வாழ்க்கையை #அர்ப்பணித்த_மகான்.*

*✍M.#கமாலுதீன்_ஸகாஃபி*
மாநில தலைவர் SSFதமிழ்நாடு
*_*_*_^_^_^_^_*_*_*_^_*_*_^_*_*_*_*_*_*_*_*_

*59 ஆண்டுகள் மார்க்க சேவையாற்றிய மார்க்க மேதை.*

*மவ்லானா நூருல் உலமா TM #அமானுல்லாஹ்_நூரி_ஹழரத்_கிப்லா அவர்களை*

*#இமாம்_பூசூரி_விருது_மற்றும்_கேஷ் அவார்ட் வழங்கி* *கௌரவிக்கிறது*

*#SSF_தமிழ்நாடு*

*ஆண்டு தோறும் மார்க்க சேவையாற்றிய மாபெரும்ஆலிம் பெருமக்களை இமாம் பூசூரி விருது வழங்கி கௌரவித்து வருகிறது SSF*

*கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது*

*இவ்வாண்டு மாபெரும் ஆலிம் பெருந்தகை கல்வி தந்தை*
*உஸ்தாதுல் அஸாதித்(ஆசிரியர் களுக்கெல்லாம் ஆசிரியர்.)*

*ஷைகுனா நூருல் உலமா அமானுல்லா நூரி ஹழரத் கிப்லா அவர்கள் இவ்விருதை பெறுகிறார்கள்*

*2021 ஜூலை 24 சனிக்கிழமை இன்று கோயம்புத்தூரில் இந்நிகழ்வு நடைபெறும்*

*இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இம்தாதுல் உலூம் அரபு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.*

*1961 -ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு 1962 இல் ஆசிரியராக சேவையாற்ற துவங்கினார்....*

*ஷைகுனாவின் முதன்மை ஆசிரியரான முஸ்தபா ஹழரத் இந்த கல்லூரியின் பொறுப்பாளராக இருந்தார்கள்*

*முஸ்தபா ஹழரத் அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு முஸ்தபா ஹழரத் வஸிய்யத் செய்ததின் பேரில் இந்த கல்லூரியில் பேராசிரியரியராக பணியாற்றத் துவங்கினார்கள்...*

*இன்றும் கூட ஷைகுனா தனது வயதை பொருட்படுத்தாமல் என்றும் கல்லூரிக்கு வந்து ஆலிம் பெருமக்களுக்கு வகுப்பு நடத்தி வருகிறார்கள்*

*உலகளாவிய பல்வேறு இஸ்லாமிய கல்லூரிகளில் சேவையாற்ற வாய்ப்புகள் வந்த போதும் தன் ஆசிரிய தந்தை முஸ்தபா ஹழரத் ஒப்படைத்த பொறுப்பிலிருந்து ஒரு போதும் விலக விரும்பவில்லை*

*உலக புகழ்பெற்ற*
*மர்கஸ் ஸகாஃபத்திஸ்*
*இஸ்லாமிய்யாவிற்கு*
*ஒரு முதர்ரிஸாக தங்களுக்கு வரலாமே?
*என அன்பாய் ஒரு ஆலிம் கேட்ட போது*

*உடன் ஷைகுனா சொன்னார்கள்*

*என்னை பல முறை*
*இந்தியன் கிராண்ட் முஃப்தி #AP உஸ்தாத் அவர்கள்*

*மர்கஸுக்கு முதர்ரிஸாக அழைத்தார்கள்..*

*ஆனால் என் உஸ்தாத் அவர்கள் மரணிக்கும் தருணத்தில் என்னிடம் இந்த கல்லூரியில் பணியாற்ற வேண்டும் என்று வஸிய்யத் செய்துள்ளார்கள்...*

*இதை விட்டு என்னால் எங்கும் செல்ல முடியாது என்று கூறினேன்*

*கல்லூரி நிர்வாகிகளுடனான ஒரு சிறிய பிரச்சினை காரணமாக நான் ஒருமுறை இலங்கையில் பணியாற்றினேன்*

*அன்று நான் இலங்கையில் வேலைப் பார்த்த செயலால் எனது உஸ்தாத் வருத்தப்பட்டிருக்க கூடும்...*

*இதை சொல்லும் போது உஸ்தாத் அவர்களின் கண் கண்ணீர் வடிக்கிறது*

*தமிழகத்திலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல நூற்றுக்கணக்கான ஆலிம் பெருமக்களை உருவாக்கும் பாக்கியம் உஸ்தாத் அவர்களுக்கு கிடைத்தது*

*உஸ்தாத் அவர்களின் மாணவ கண்மணிகள் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் மார்க்க சேவையாற்றி வருகிறார்கள்*
*அல்ஹம்துலில்லாஹ்*

*இந்த விருதை உஸ்தாத் அவர்களுக்கு வழங்குவதில் SSF பெருமைப் படுகிறது*

*அல்லாஹ் ஷைகுனா அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக*

*அவர்களின் சீரான வழிகாட்டலில் என்றென்றும் நம்மை வாழச் செய்வானாக .. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...*
💚🤍💙🌹💚🤍💙

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*