கரம் தாருங்கள் யா ரஸுலுல்லாஹ்

கரம் தாருங்கள் யா ரஸுலுல்லாஹ்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

................"#கரம்_தாருங்கள்!!!.............

ஹிஜ்ரி 500_ம் ஆண்டு ரஜப் 27_ம் நாள் திங்கட்கிழமை அன்று இன்று அகிலமெல்லாம் சுல்தானுல் ஆரிஃபீன் என்று அழைத்து மகிழ்கின்ற பெருமேதை ஞானமகான் ஸெய்யித் அஹ்மது கபீர் #ரிபாயி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவதரித்தார்கள்.
ரிஃபாயி ஆண்டகை அவர்கள் தந்தை வழியில் ஸெய்யிதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சார்ந்திருக்கின்றனர்.

அருட் பேறுகளின் மொத்த உருவாக அவதாரம் எடுத்த அஹ்மத் கபீர் ரிபாயி நாயகமவர்களின் நினைவுப் பெரு விழாக்கள் இம்மாதத்தில் நாடோறும் நடாத்த பெறுவதை காணலாம்..

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் மாதூய வாழ்க்கை நமக்கு ஈடேற்றம் நல்கித் தருகின்ற இனிய வாழ்வாக அமைந்திருப்பதைக் காணுகிறோம்...

அன்னாரின் வாழ்வு சீலம் மிகுந்ததாக அமையப் பெற்றிருப்பதை அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் எடுத்துக் கூறுகின்றன..

திருக்குர்ஆன் விரிவுரை, ஹதீதுக்கலை, இன்னபிற மார்க்கத் துறை கலைகளிலும் இந்த ஞான வேந்தர் தன்னிகரற்று விளங்கி வந்துள்ளார்கள்...

ஆண்டகையவர்களின் வாழ்வில்
ஒரு அற்புத நிகழ்ச்சி...

புவனம் புரக்க வந்த பூமான் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்திட எண்ணி மதீனா வந்த ஆண்டகை திரு ரவ்ழா ஷெரீஃபின் முன்னே நின்று பாடினார்கள்.

في حالة البعد روحي كنت ارسلها
تقبل الارض عني وهي نائبتي
وهذه دولة الاشباح قد حضرت
فامدد يمينك كي تحظى بها شفت*

"தூரத்தில் இருந்து கொண்டு யான் எனது ஆத்மாவை தங்களின் சமூகத்திற்கு அனுப்பி வந்தேன். அது தங்களின் பொன்னுடலை மூடிகிடக்கும் மணலை முத்தமிட்டு வந்தது..

எனது பிரிய மிகுந்த பாட்டனார் அவர்களே!

இப்போது எனது சடலத்துடன் வந்துள்ளேன், தங்களது பொன் கரங்களை நீட்டுங்கள். நான் முத்தமிட்டு கொள்வதற்கு!!

அண்ணலாரின் அழகுக் கரம் வெளியே நீண்டது, ரிபாஈ ஆண்டகை ஆசை தீர முத்தமிட்டார்கள்...

அல்லாஹ் இதுபோன்ற நல்லடியார்களின் பொருட்டால் செழிப்பான வாழ்வை நமக்குத் தந்தருள்புரிவானாக!!!

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.