பொறுப்பு என்பது சாதாரண காரியமல்ல
பொறுப்பு என்பது ஒரு சாதாரண விஷயமல்ல
அரசு துறந்த ஆன்மீக ஞானி ஹலறத் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் தன் நாடான குராஸானில் ஹலாலான உணவு கிடைக்காமல், ஈராக்கிற்கு வருகின்றன்றார்கள். பல்வேறு இடங்களில் பல நாட்கள் சுற்றியலைந்தும் ஆங்கு அவர்களுக்கு ஹலாலான உணவு கிட்டாத நிலையில் தர்தூஸ் என்ற நகர் நோக்கி பயணம் மேற்கொண்டார்கள்.
பல நாட்கள் முயற்சிக்குப் பின்னர் ஆள்கே தோட்டமொன்றில் காவலராக வேலைக்குச் சேர்ந்தார்கள் இப்னு அத்ஹம். மாதத்திற்கு பத்து நாட்கள் கூலி என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒரு நாள் தோட்டத்தின் முதலாளி தன் சகாக்களுடன் அங்கே வருகை தந்தான். இப்னு அத்ஹம் அவர்கள் சுவையான மாதுளை யொன்று பறித்து வருமாறு பணித்தனர். இப்னு அத்ஹம் மிகப் பெரிய பழமொன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் அது சுவைக்கவில்லை. எனவே மற்றொரு பழம் கொண்டு வருமாறு கூறினர். இப்போது பார்ப்பதற்கு அழகான பழம் ஒன்றை பறித்து கொடுத்தனர் இப்னு அத்ஹம். இதுவும் இனிக்கவில்லை.
உரிமையாளர் கோபத்துடன்
"இத்தனை மாதங்களாக காவல் காக்கின்ற உங்களுக்கு இனிப்பான பழம் எது என்று தெரியவில்லையே" என்று கடிந்துக் கொண்டான்.
இப்னு அதஹம் அமைதியாகக் கூறினார்கள்.
"நான் பழத்தின் வெளிப்புறத்தை மட்டுமே அறிவேன் அதன் உட்புறத்தை இறைவன் அறிவான்!"
ஆச்சிரியமுற்ற அவர்கள்
"உண்மையிலேயே தாங்கள் கனிகளை சுவைத்ததில்லையா? இங்கே நீங்கள் நீண்ட நாட்களாக பணிபுரிகின்றீர்கள்.
புளிக்கும் பழத்தையும், இனிய கனியையும் அறிய மாட்டீர்களா? என்று கேட்டனர்.
இதனை காவல் காப்பதற்கே என்னே நியமித்து கூலியும் தருகின்றீர்கள்.
இதன் கனிகளின் சுவையினே அறிவதற்கல்ல!" தெளிவாக வந்தது பதில்.
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி