நாயகத்தை அவமதிப்பு செய்தவர்களுக்கு இறைவன் வழங்கிய தண்டனை
#முஹம்மது_நபியை #அவமதித்தவர்களுக்கு_இறைவன் #வழங்கிய_தண்டனை
கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் #நுபுர்_ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் தொடர்புகளும் இருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து 60 சதவீதம் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது. மட்டுமல்லாது குவைத்,ஓமன், பஹ்ரைன்,ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் இந்தியர்களின் பெரும் பெரும் சூப்பர் மார்க்கெட்களும் ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன. 2019- 2020 ல் ஐக்கிய அமீரத்திற்கு மட்டும் 222000 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தில் 6 இலட்சம் கோடி அரபு நாடுகளிலிருந்து வருகிறது.இப்படி வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பு மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அந்த நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும்.
ஆனால் தற்போது அங்கிருக்கிற குப்பைத் தொட்டிகளில் மோடியின் புகைப்படத்தை ஓட்டும் அளவுக்கு அங்கே எதிர்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. முஹம்மது நபி ஸல் அவர்களின் மீது அவதூறான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிற இந்திய நாட்டின் தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பிழைப்பைத் தேடி வந்து இங்கு வேலை செய்கிற இந்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லப்படும் அளவிற்கு அரபு நாடுகளில் அதற்கு கடும் எதிர்ப்பு கிழம்பி விட்டது. வளைகுடா நாடுகளில் மொத்தம் 84 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.ஐக்கிய அமீரகத்தில் 34.25 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் செய்த இந்த காரியத்தால் அவர்கள் அத்தனை பேருடைய வாழ்வும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கே மிகப்பெரும் தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்திய நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையால் இந்திய நாட்டின் பொருளாதாரம் இன்னும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என நாட்டின் நடுநிலையாளர்கள் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் விதமான கருத்துக்களை அவர்கள் சொல்வது இது முதல் முறையல்ல. தொடர்ந்து அவ்வப்போது இதுமாதரி கருத்துக்களை கூறி நாட்டு மக்களின் கோபத்தை தூண்டும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் பேசிய வார்த்தையைப் பார்த்து உலகத்தின் பல்வேறு அரபு நாடுகள் தங்களின் கண்டனக் குரலை பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் கதிகலங்கிப் போன அவர்கள் பா.ஜ.க அனைத்து மதங்களையும் மதிக்கிறது.எந்த மதத்தின் சித்தாந்தம் மீதும் நடத்தப்படும் அவமரியாதையை பா.ஜ.க பொறுத்துக் கொள்ளாது என்றெல்லாம் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். நபி ஸல் அவர்கள் மீது அவதூறான வார்த்தைகளை பதிவு செய்த நுபுர் ஷர்மாவை செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்தும் அதற்கு ஆதாரவாக ட்வீட் செய்த நவீன் ஜிண்டாலை பா.ஜ.க வின் கட்சியிலிருந்தும் நீக்கி அறிக்கையை வெளியிட்டார்கள்.இது ஒரு வாரமாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரபு நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகள் நீங்கி அவர்களை சமாதானம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நேரடியாக மன்னிப்பு கேட்பது தான் சரியான அனுகுமுறை என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் இவ்வாறு நபியைக் குறித்து தவறாக பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வே நேரடியாக வந்து பதில் கூறி விடுவான். அல்லது யார் குறை கூறினார்களோ அவர்களில் ஒருவரை வைத்தே பதில் சொல்லி விடுவான்.இன்றைக்கும் நாம் பார்க்கிறோம் இந்த பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தாண்டி சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள் தான் இதற்கு தக்க பதிலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நபியை இழிவாக பேசியவர்களுக்கு இறைவன் என்ன தண்டனை வழங்கினான் என்பதை வரலாற்றிலிருந்து பார்ப்போம்....
#வரலாறு_1....
மக்கா நகரில் வலீதுப்னு முகீரா என்ற கொடியவன் இருந்தான். "ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பைத்தியக்காரர் எனக் கூறி விட்டான்.!" அந்த ஒரு வார்த்தையைக் கண்டித்து "அல்லாஹூ தஆலா கோபம் கொண்டு அவனைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் குர்ஆன் வசனத்தை இறக்கி விட்டான்."
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ (10) هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ (11) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ (12) عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
அவன் பொய் சத்தியம் செய்யும் அற்பன். அவன் புறம் பேசி குறைக் கூறி கோள் சொல்லி திரிபவன். அவன் நன்மையான செயலை செய்ய விடாமல் தடுக்கும் பெரும்பாவி. அவன் கடின சுபாவ முள்ளவன் இழிவான வழியில் பிறந்தவன். (68 :10،11،12، 13)
ويروى أنه لما نزلت قال الوليد لأمه: إن محمدا وصفني بتسع صفات أعرفها غير التاسع منها فإن لم تصدقيني الخبر ضربت عنقك فقالت له
إن أباك عنين فخفت على المال فمكنت الراعي من نفسي فأنت منه
இந்தத் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கியதும்... "வலீதுப்னு முகீரா வேகமாக வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயின் கழுத்தில் வாளை வைத்து "என்னைப் பற்றி முஹம்மத் சொன்னதெல்லாம் உண்மை தான். நான் அயோக்கியன் தான்!" ஆனால் "முஹம்மத் என்னை விபச்சாரத்தில் பிறந்தவன் என சொல்லி விட்டார். அவர் பொய் சொல்ல மாட்டார்." "உண்மையைச் சொல். நான் விபச்சாரத்தில் பிறந்தவனா? என் தந்தை யார்? முகீரா இல்லையா?" எனக் கேட்டான். "ஆமாம்..! நான் ஆட்டு இடையனை வைத்திருந்தேன். நீ அவனுக்கு பிறந்தவன் தான் என்ற உண்மையைக் கூறினாள்.
"அவன் மூக்கின் மீது மிக விரைவில் ஓர் அடையாளம் விடுவோம்! (68:16) என்றும் அல்லாஹ் ஆயத் இறக்கினான்.
அல்லாஹ் சொன்னதைப் போன்றே "பத்ருப் போரில் அவன் மூக்கில் வாள் முனைப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் அவன் முகமும் விகாரமாகி விட்டது!" அதனால் "வலீதுப்னு முகீரா மக்களுக்கு முன் வெளியில் வர வெட்கப்பட்டு மனம் நொந்து இறந்து போனான்.! (குர்துபீ)
நபியின் மீது அவதூறுகளை சொன்னவர்கள் மிகவும் மோசமான முடிவுகளை சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது.
#வரலாறு_2
وقال السهيلي : ويوم يعض الظالم على يديه هو عقبة بن أبي معيط ، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف أخي أمية ، وكان قد صنع وليمة فدعا إليها قريشا ، ودعا رسول الله صلى الله عليه وسلم فأبى أن يأتيه إلا أن يسلم . وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم ونطق بالشهادتين ، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه ، فعاتبه خليله أمية بن خلف ، أو أبي بن خلف وكان غائبا . فقال عقبة : رأيت عظيما ألا يحضر طعامي رجل من أشراف قريش . فقال له خليله : لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول كيت وكيت . ففعل عدو الله ما أمره به خليله ; فأنزل الله عز وجل : ويوم يعض الظالم على يديه . قال الضحاك : لما بصق عقبة في وجه رسول الله صلى الله عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه ، حتى أثر في وجهه وأحرق خديه ، فلم يزل أثر ذلك في وجهه حتى قتل
உக்பா பின் அபீ முஐத் என்பவன் ஒருநாள் குறைஷிகளுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த விருந்திற்கு நபியவர்களையும் அழைத்தான். நபியவர்கள் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் உன் அழைப்பிற்கு நான் பதிலளிப்பேன் என்று சொன்னவுடன் குறைஷிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவர் தன் விருந்துக்கு வராமல் இருப்பதை அவன் கண்ணியக் குறைவாக நினைத்தான். எனவே நபியவர்களும் தன் விருந்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஷஹாதத் கலிமாவை கூறி விட்டான். நபியவர்களும் அங்கு விருந்துக்கு சென்றார்கள். ஆனால் இதை கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் உமையா பின் கலஃப் என்பவன் அவனைக் கடிந்து கொண்டான். ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான். குறைஷிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கலிமா சொல்லி விட்டேன் என்று சொன்னான். இருந்தாலும் நீ செய்தது மிகப் பெரிய தவறு. எனவே நீ செய்த தவறுக்காக முஹம்மது நபியின் மீது காறி உமிழ வேண்டும். நீ அவ்வாறு செய்யாத வரை உன்னை பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். இவனும் நண்பனுடைய பேச்சைக் கேட்டு அவனை திருப்தியடையச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் சொன்னதைப் போன்றே நபியின் முகத்தில் காறி உமிழ்ந்தான். ஆனால் அந்த எச்சிலை அவன் மீதே அல்லாஹ் திருப்பி விட்டான். அந்த எச்சில் அவன் முகத்தையும் அவன் உதடுகளையும் அவன் கன்னத்தையும் கறித்து அவன் முகத்தை அலங்கோலப் படுத்தியது. அவன் மரணிக்கும் வரை அதன் அடையாளங்கள் அவன் முகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. (தஃப்ஸீர் குர்துபி)
நபியே இகழ்த்துவதை அல்லாஹ் பார்த்து சும்மா இருக்க மாட்டான்..
#வரலாறு-3
நபி(ஸல்) அவர்களுக்கு எவன் எதிரியோ அவன் அல்லாஹ்வுக்கும் எதிரி...
أن فرعون مع كمال سلطته ما كان يزيد كفره على القول ، وما كان ليتعرض لقتل موسى عليها السلام ولا لإيذائه. وأما أبو جهل فهو مع قلة جاهه كان / يقصد قتل النبي صلى الله عليه وسلّم وإيذاءه وثالثها : أن فرعون أحسن إلى موسى أولاً ، وقال آخراً : {ءَامَنتُ} . وأما أبو جهل فكان يحسد النبي في صباه ، وقال في آخر رمقه : بلغوا عني محمداً أني أموت ولا أحد أبغض إلي منه (تفسير الرازي
அபூஜஹ்ல், ஃபிர்அவ்ன் இருவரில் மிக மோசமானவன் யார்? என்று மேலோட்டமாக சிந்திக்கக் கூடிய ஒருவருக்கு அபூஜஹ்ல் தன்னை கடவுள் என்று சொல்லவில்லையே ஆனால் ஃபிர்அவ்ன் தன்னை கடவுள் என்றல்லவா சொன்னான். எனவே ஃபிர்அவ்ன்தான் மிக மோசமானவன் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ஃபிர்அவ்னைப் பற்றி குறிப்பிடும் போது
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى (24)
அவன் வரம்பு மீறுகிறான் என்று கூறும் அல்லாஹ் அபூஜஹ்லைப் பற்றி அலக் சூராவில்
لَيَطْغَى நிச்சயமாக அவன் மிகவும் வரம்பு மீறுகிறான் என்று சாடுகிறான். இதை வைத்து விரிவுரையாளர்கள் ஃபிர்அவ்னை விட அபூஜஹ்ல் தான் மோசமானவன் என்று கூறுவதோடு, அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கிறார்கள்
1.அபூஜஹ்லை விட ஃபிர்அவ்ன் ஆட்சி, அதிகாரத்தில்பல மடங்கு பெரியவன். அவ்வாறிருந்தும் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை பலமுறை மிரட்டியுள்ளானோ தவிர, ஒருமுறை கூட கொல்ல முயலவில்லை. ஆனால் அபூஜஹ்ல் பதவியிலும் அதிகாரத்திலும் பெரிய அளவில் இல்லாதிருந்தும் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொல்ல முயன்றான். பலமுறை துன்புறுத்தினான்.
2.ஃபிர்அவ்ன் ஆரம்ப காலத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தத்தெடுத்து வளர்த்தான். பாசமாகவும் இருந்தான். பிறகு தான் அவன் அவன் எதிரியாக மாறினான். அப்போதும் கூட கடைசி நேரத்தில் மூஸாவுடைய ரப்பை நான் நம்புகிறேன் என்றான். எனினும் தவ்பா ஏற்கப்படும் காலக்கெடு முடிவடைந்ததால் அவனுடயை ஈமான் ஏற்கப்படவில்லை. ஆனால் அபூஜஹ்ல் தன் சிறு வயதில் இருந்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரியாக இருந்தான். உயிர் பிரியும் கடைசி நேரத்தில் கூட
بَلِّغُوْا عَنِّي مُحَمَّداً أَني أَمُوتُ ولا أحد أبغضَ إليَّ منه
முஹம்மதுக்கு என் கடைசி வார்த்தையை தெரிவித்து விடுங்கள். நான் மரணிக்கும் இந்த நேரத்திலும் கூட அவர் தான் எனக்கு மிகப்பெரும் எதிரி என்று கூறிய நிலையில் இறந்தான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو جَهْلٍ هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بَيْنَ أَظْهُرِكُمْ قَالَ فَقِيلَ نَعَمْ فَقَالَ وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ لَأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ أَوْ لَأُعَفِّرَنَّ وَجْهَهُ فِي التُّرَابِ قَالَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي زَعَمَ لِيَطَأَ عَلَى رَقَبَتِهِ قَالَ فَمَا فَجِئَهُمْ مِنْهُ إِلَّا وَهُوَ يَنْكُصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ قَالَ فَقِيلَ لَهُ مَا لَكَ فَقَالَ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَا نَدْرِي فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ أَوْ شَيْءٌ بَلَغَهُ{ كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى عَبْدًا إِذَا صَلَّى أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوَى أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى }يَعْنِي أَبَا جَهْلٍ (مسلم)
அபூஹுரைரா ரழி கூறியுள்ளார்கள் - ஒருமுறை அபூஜஹ்ல் தன் சகாக்களிடம் உங்களில் எவரேனும் முஹம்மது தன் தலையைக் கீழே வைப்பதை (சஜ்தா செய்வதைப்) பார்த்தீர்களா? என்று கேட்க, ஆம்! அவர் சஜ்தா செய்கிறார் என்று மற்றவர்கள் கூறினர். உடனே கோபமடைந்த அபூஜஹ்ல் (நான் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை) இப்போது நான் அவரிடம் சென்று அவர் தனது தலையை கீழே வைத்திருப்பதை நான் கண்டால் அவருடைய கழுத்திலேயே நான் மிதிப்பேன். அல்லது அவர் தலையை கீழே வைத்திருக்கும் நிலையிலேயே அந்த த் தலையை மண்ணில் புதைத்து விடுவேன் என்று கூறியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி வந்தான். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். உடனே அவர்களின் கழுத்தில் மிதிக்கும் நோக்கத்தில் அண்ணலாரை நெருங்கி, கைகளையும் நீட்டிய போது எதையோ கண்டு பயந்து பின்வாங்கினான். நீட்டிய அவனது கைகளையும் சுருக்கிக் கொண்டான். அவனிடம் என்ன ஆயிற்று உமக்கு? என காரணம் கேட்கப்பட்ட போது, நிச்சயமாக நான் அவரை நெருங்கியபோது எனக்கும், அவருக்குமிடையில் பெரிய நெருப்புப் பள்ளம் இருப்பதையும், சில ராட்சத இறக்கைகளையும், பயமுறுத்தக் கூடியவைகளையும் நான் கண்டேன். என்று அபூஜஹ்ல் கூறினான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும்போது “ஒருவேளை அவன் என்னை நெருங்கியிருந்தால் அந்த இறக்கைகளுக்குச் சொந்தமான மலக்குமார்கள் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி அந்த நெருப்புப் பள்ளத்தில் வீசியிருப்பார்கள்” எனக்கூறினார்கள்.
நூல் முஸ்லிம்..
மா நபியை இகழ்த்த நினைத்தவர்கள், அழிக்க நினைத்தவர்கள் அழிந்து, ஒழிந்து அட்ரஸ் இல்லாமல் போனது தான் வரலாறு..
மா நபியை எவராலும் களங்கப்படுத்த முடியாது.....
#வரலாறு_4
أَنَّ عُتْبَةَ بْنَ أَبِى لَهَبٍ كَانَ شَدِيدَ الأَذَى لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ :« اللَّهُمَّ سَلِّطْ عَلَيْهِ كَلْبًا مِنْ كِلاَبِكَ ». فَخَرَجَ عُتْبَةُ إِلَى الشَّامِ مَعَ أَصْحَابِهِ فَنَزَلَ مَنْزِلاً فَطَرَقَهُمُ الأَسَدُ فَتَخَطَّى إِلَيْهِ مِنْ بَيْنِ أَصْحَابِهِ فَقَتَلَهُ (بيهقي)- وروي أنه (عتبة بن أبي لهب)كان مبالغاً في عداوت النبي صلي الله عليه وسلم ، فقال النبي صلي الله عليه وسلم : اللهم سلط عليه كلباً من كلابك فوقع الرعب في قلب عتبة وكان يحترز فسار ليلة من الليالي فلما كان قريباً من الصبح ، فقال له أصحابه : هلكت الركاب فما زالوا به حتى نزل وهو مرعوب وأناخ الإبل حوله كالسرادق فسلط الله عليه الأسد وألقى السكينة على الإبل فجعل الأسد يتخلل حتى افترسه ومزقه ،(قرطبي)
عن عروة ابن الزبير رضي الله عنهما أن عتبة بن أبي لهب وكان تحته بنت رسول الله صلى الله عليه وسلم أراد الخروج إلى الشام فقال: لآتين محمدا فلأوذينه، فأتاه ثم تفل في وجه رسول الله صلى الله عليه وسلم، ورد عليه ابنته وطلقها؛ فقال رسول الله صلى الله عليه وسلم: "اللهم سلط عليه كلبا من كلابك" وكان أبو طالب حاضرا فوجم لها وقال: ما كان أغناك يا ابن أخي عن هذه الدعوة، فرجع عتبة إلى أبيه فأخبره، ثم خرجوا إلى الشام، فنزلوا منزلا، فأشرف عليهم راهب من الدير فقال لهم: إن هذه أرض مسبعة. فقال أبو لهب لأصحابه: أغيثونا يا معشر قريش هذه الليلة! فإني أخاف على ابني من دعوة محمد؛ فجمعوا جمالهم وأناخوها حولهم، وأحدقوا بعتبة، فجاء الأسد يتشمم وجوههم حتى ضرب عتبة فقتله. (قرطبي)
அபூலஹப் உடைய மகன் உத்பா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெரும் விரோதியாக இருந்தான். மற்றொரு அறிவிப்பின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகாஹ் பற்றிய சட்டங்கள் வரும் முன்பு தனது மகளை அபூலஹப் உடைய மகன் உத்பாவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் எப்போது லஹப் சூரா இறங்கியதோ அப்போது தந்தை அபூலஹபின் உத்தரவின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளை தலாக் கூறியதுடன் மிகவும் கடுமையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டினான். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாஅல்லாஹ் இவன் மீது உன்னுடைய சிங்கங்களில் ஒரு சிங்கத்தை ஏவுவாயாக என்று துஆ செய்தார்கள். மகன் மீதான இந்த சாபம் அபூலஹபுடைய மளதிலும் ஒரு பீதியை ஏற்படுத்தியது. எங்கு சென்றாலும் கவனமாக இரு. என மகனை எச்சரித்தான். அன்று முதல் உத்பா எப்போது வெளியே சென்றாலும் பாதுகாப்புடன் செல்வான். ஒருமுறை ஷாமுக்கு குடும்பத்துடன் சென்றபோது ஒரு இடத்தில் தங்கும் நேரத்தில் அங்குள்ள பாதிரி ஒருவர் இங்கு சிங்கங்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றார். அப்போது அபூலஹப் தன் குடும்பத்தார் அனைவரிடமும் இன்று இரவு மட்டும் எப்படியாவது என் மகனை எல்லோரும் சேர்ந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றான். ஏனெனில் முஹம்மதின் சாபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றான். அவர்கள் அனைவரும் மகனைப் பாதுகாக்கும் விதமாக சுற்றிலும் படுத்தார்கள். அப்படியிருந்தும் நடு இரவில் ஒரு சிங்கம் வந்து அவனை மட்டும் குதறிக் கொன்றது.
#வரலாறு_5..
உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக (26.214) என்ற வசனம் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபா எனும் குன்றின் மேல் ஏறினார்கள்.
குறைஷிகளின் உட்கிளைகளான பனூ ஃபஹ்ர், பனூ அதீ ஆகியோரை அழைத்தார்கள். அனைவரும் அங்கே குழுமினார்கள். வர முடியாதவர், என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். (நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை) அபூலஹபும், குறைஷ்களும் வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து குதிரைப் படை ஒன்று உங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் என்னை நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம் நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசியதாக நாங்கள் கண்டதில்லை’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கடுமையான வேதனை பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அபூலஹப் ‘என்றென்றும் உனக்கு நாசம் உண்டாகட்டும்; இதற்காகத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கேட்டான். அப்போது ‘அபூலஹபின் இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனைக் காப்பாற்றவில்லை’ என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 4770
இந்த நிகழ்ச்சி 1394, 4801, 4971, 4972, 4973 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகவும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்படும் முழு அத்தியாயம் வருமாறு
அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூலஹப் நபிகள் நாயகத்தின் மீது அதிக அன்பு வைத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பின் நபிகள் நாயகத்தைத் தன் பொறுப்பில் வளர்க்க ஆசைப்பட்டான். ஒரே இறைவனைத் தான் வணங்க வேண்டும்; சிலைகளையோ, வேறு எதனையுமோ வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரத்தத்தில் ஊறிப் போன கொள்கையை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே குழி தோண்டிப் புதைக்க புறப்பட்டு வந்து விட்டாரே என்று எண்ணியதால் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகவே தனது தம்பி மகன் என்று பாராமல் நபிகள் நாயகத்தைச் சபித்தான். இதற்குப் பதிலடியாகத் தான் மேற்கண்ட அத்தியாயம் அருளப்பட்டது.
இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியானாலும் இதில் முக்கியமான முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏசி பேசி, கேலி கிண்டல் செய்தவனெல்லாம் ஈடுசெய்யமுடியாத பெரும் இழப்பையும் இழிவையும் தான் சந்தித்தான் என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.
இஸ்லாத்தையும் அதன் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களையும் புரிந்து கொண்ட நல்ல உள்ளம் படைத்த அனைவரும் "கருத்து சுதந்திரம்" என்ற பெயரில் புரியப்படும் மேற்குலகின் கேலிச்சித்திரம் என்ற இந்த இழி செயலை வன்மையாக கண்டிக்கின்றனர்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரங்களை வேண்டுமென்றே வரைந்து, அவர்களை அவமதித்து முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் சீண்டுபவர்கள், நபி மீது மோசமான முறையில் விமர்சனம் செய்து ரசிப்பவர்கள் இனிமேல் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் ஏகன் அல்லாஹுத்தஆலாவின் கோபத்திற்கும் நல்லடியார்களின் சாபத்திற்கும் ஆளாகி, உலகிலேயே அல்லாஹ்வின் வேதனையை பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போவார்கள்.
#வரலாறு_6..
كان رجُلٌ يكتُبُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم وكان قد قرَأ البقرةَ وآلَ عِمرانَ عُدَّ فينا ذو شأنٍ وكان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يُمِلُّ عليه { غَفُورًا رَحِيمًا } فيكتُبُ: ( عَفُوًّا غَفُورًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ ) ويُملي عليه { عَلِيمًا حَكِيمًا } فيكتُبُ: ( سَمِيعًا بَصِيرًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ أيَّهما شِئْتَ ) قال : فارتدَّ عنِ الإسلامِ فلحِق بالمُشرِكينَ فقال : أنا أعلَمُكم بمُحمَّدٍ ـ صلَّى اللهُ عليه وسلَّم ـ إنْ كُنْتُ لَأكتُبُ ما شِئْتُ فمات فبلَغ ذلك النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم فقال : ( إنَّ الأرضَ لنْ تقبَلَه ) قال : فقال أبو طَلحةَ : فأتَيْتُ تلكَ الأرضَ الَّتي مات فيها وقد علِمْتُ أنَّ الَّذي قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كما قال فوجَدْتُه مَنبوذًا فقُلْتُ : ما شأنُ هذا ؟ فقالوا : دفَنَّاه فلَمْ تقبَلْه
ஒருவர் நபிக்காக வஹி எழுதக் கூடியவராக இருந்தார். எங்களிடத்தில் அவருக்கு சிறந்த அந்தஸ்தும் இருந்தது ஆனால் திடீரென்று அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார். அங்கே சென்று எனக்கு நபியைப் பற்றி நன்கு தெரியும்.அவர் சொல்வது இறைச் செய்தியல்ல. நான் விரும்பியதை எழுதக்கூடியவனாக இருந்தேன். அதைத் தான் அவர் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இது நபிக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அவர் இறந்து போன பொழுது அவரை பூமி ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள். அபூதல்ஹா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அவர் எந்த ஊரில் மரணித்தாரோ அந்த ஊருக்கு நான் சென்றிருந்தேன். நபியவர்கள் சொன்னதைப் போன்றே அவனுடைய சடலம் பூமிக்கு மேலே கிடந்தது. என்னவென்று கேட்ட பொழுது அவ்வூர் மக்கள் இந்த மையத்தை நாங்கள் அடக்கம் செய்தோம் ஆனால் பூமி அதை ஏற்க மறுத்து விட்டது என்று கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான் ; 744)
நபியின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் மிக மோசமான முடிவுகளைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறார்கள். நபியின் கண்ணியத்தை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை. அவர்களும் நம்மைப் போன்று சாதாரண மனிதர் தான் என்று சொன்னவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பதை நாம் இன்றைக்கும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நபியின் மீது அவதூறுகளை அள்ளி வீசிய ஈனப்பிறவிகளுக்கு தக்க பாடத்தை விரைவில் கொடுத்து இனி வரும் காலங்களில் அவ்வாறு வாய் துறப்பதற்கு அச்சப்படும் நிலையை அவர்களுக்கு வழங்குவானாக!
தொகுத்தவர்:M-#சிராஜுத்தீன்அஹ்ஸனி