இமாம் அபூ ஹனீஃபாவும்,சில நாத்திகர்களும்

இமாம் அபூ ஹனீஃபாவும்,சில நாத்திகர்களும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*🌷🌹🌴🌲#இமாம்_அபூ_ஹனிஃபாவும், #சில_நாத்திகர்களும்🌷🌹🌴*

ஒரு சில நாத்திகர்கள் இமாமுல் அஃழம் அபூ ஹனீஃபா (ரலி) அவர்களைப் பார்க்க வந்தனர்.

அவர்கள் இமாமிடம் சில கேள்விகளை தொடுத்தனர்..

கேள்வி: "உங்கள் இறைவன் எந்த ஆண்டில் பிறந்தார்?"

இமாம் அவர்கள் கூறினார்கள்:

"வரலாறு மற்றும் காலம் உருவாவதற்கு முன்பே அவர் இருந்தார்.
அவருடைய உண்மைக்கு ஆரம்பம் இல்லை."

தொடர்ந்து இமாம் அவர்கள் நாத்திகர்களிடம் கேட்டார்கள்:

"நான்க்கு முன் எத்தனை?"

"மூன்று"

"மூன்றுக்கு முன்?"

"இரண்டு"

"இரண்டுக்கும் முன்?

"ஒன்று"

"ஒன்றுக்கு முன்னாடி?"

"அதற்கு முன் எண் இல்லை"

தொடர்ந்து அபு ஹனீஃபா (ரலி)அவர்கள் கூறினார்கள்:

"கணிதத்திற்கு முன் வேறு எதுவும் இல்லை என்றால், முழுமையான யதார்த்தத்திற்கு முன் மற்றொருவர் எப்படி இருக்க முடியும்?

எனவே, அல்லாஹ் நித்தியமானவன், அவனது உண்மைக்கு ஆரம்பம் இல்லை."

அவர்களின் அடுத்த கேள்வி:

"உங்கள் கடவுள் எங்கே தோன்றுவார்?"

அபூ ஹனிஃபா (ரலி) அவர்களின் பதில்:

"இருண்ட அறையில் விளக்கு எரியும் போது, ​​எந்தப் பக்கத்தில் ஒளி தோன்றும்?"

"எல்லா இடங்களிலும்"

" நீங்கள் ஏற்றும் ஒளியை இப்படி என்றால், வானங்களின் வர்ண ஒளியாகிய அல்லாஹ் எந்தப் பக்கம் தோன்றுவான் என்று கேட்பதில் என்ன அர்த்தம்?"

"சரி. உங்கள் கடவுள் எப்படிப்பட்டவர்?

இரும்பைப் போல் திடமாகமாக இருப்பாரா..?

தண்ணீர் போல் ஒழுகிக் கொண்டு இருப்பாரா..?

புகையைப் போல மிதந்து கொண்டு இருப்பாரா..?

அபூஹனீஃபா (ரஹ்) நாத்திகர்களிடம் திருப்பி கேட்டார்கள்..

“மரணத்தின் விழும்பில் இருப்பவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?”

"ஆம்"

மரணத்திற்கு பிறகு நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்களா...?

"இல்லை"

"அவர் இறப்பதற்கு முன் பேசவும், நகரவும் செய்திருந்தாரல்லவா..?

"ஆம்"

"பிறகு என்னாச்சு அவருக்கு?"

"ஆன்மா அவரின் உடலிலிருந்து போய்விட்டதால்லவா?

"ஆன்மா போய்விட்டதா? அது என்ன? அது என்ன சங்கதி?

"அது..., அது... எப்படி இருக்குன்னு தெரியலை"

"சிருஷ்டியின் உள்ளார்ந்த ஆன்மாவின் தன்மை என்னவென்று உங்களால் சொல்ல முடியவில்லை.

பிறகு படைப்பாளரின் தன்மையை நான் எப்படி விவரிக்க முடியும்?!"

தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி
_7598769505..._