இருவரில் யார் தியாகி
........#இருவரில்_யார்_தியாகி...........
ஒரு மகன் ஒருமுறை தன் தாயிடம் கேட்டான்.
*குழந்தைகளாகிய எங்களை வளர்க்க அப்பாவா அல்லது அம்மாவா யார் அதிகம் தியாகம் செய்தது....?
*அம்மா தன் மகனிடம் சொன்னாள்-*
"இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்கக் கூடாது..
*ஏனென்றால் குழந்தைகளான உங்களை வளர்ப்பதற்கு உங்கள் தந்தை சகித்துக் கொண்ட அளவு எந்த தியாகமும் நான் அர்ப்பணித்துக் கொள்ளவில்லை...
*நான் கல்யாணம் ஆனபோது
உன் அப்பா இப்படி இல்லை.
அவர் தனக்கென்று சொந்தமாக விருப்பங்களும், ஆசைகளும் கொண்ட மனிதராக இருந்தார்.
*பிறகு எனக்காக, உங்களுக்காக ஒரு குறையும் வரக்கூடாது என்பதற்காக தினமும் ஓடிக்கொண்டிருந்தார்....
*உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்வி என பல தேவைகள் நம் முன்னால் இருந்தன.
நீயும், நானும் இந்தக் குடும்பமும் உங்கள் தந்தையின் வியர்வை என்பதை நீ நினைவில் கொள்க..
இதைக் கேள்வியை மகன் தந்தையிடம் கேட்டான்.
*தந்தையின் பதில்... இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...*
*"உன் அம்மா எவ்வளவு தியாகம் சகித்துக் கொண்டாள் என்று கூட
எனக்கு தெரியாது....
உங்களை வளர்க்க, உங்களை பெரியவர்களாக்க அவள் தாங்கிய கஷ்டங்கள் ஒன்றும் எனக்கு தெரியாது..
அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இன்று இந்த குடும்பத்தை இந்த நிலைக்கு
கொண்டு வந்துள்ளது.
அவளுக்கென்று இருந்த எல்லா விருப்பங்களையும், ஆசைகளையும் நமக்காக வேண்டாமென்று ஒதுக்கிக் கொண்டாள்...
*என் வரவை அறிந்து செலவு செய்தாள்.
அவள் என்னிடம் தேவையானதை மட்டுமே கேட்டாள்...
ஆடம்பரங்களை தவிர்த்துக் கொண்டாள்.....
அவளை விட நான் தியாகம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை..
*மகன் தனது சகோதரர்களிடம் கூறினான்..
"நாம்தான் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி குழந்தைகள் ... *
*அம்மாவின் தியாகத்தை புரிந்துக் கொள்ளும் அப்பாவும், அப்பாவின் தியாகத்தை புரிந்துக் கொள்ளும் அம்மாவும் 💖 அதுதான் நம் குடும்பங்களுக்கு தேவை....*"
*பெற்றோர்கள் இருவரல்ல,
ஒரு கிரீடத்திலே இரு பொன்தூவல்களாகும்💖💝🌷😍😘 .. *
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி
7598769505