மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 5
இல்லை ‘இல்லவே இல்லை!
வெளியீடு எண் = 5
வெளியீட்டு எண் 2 ல் மவ்லித் மஜ்லிஸ்களிலும், மீலாது விழாக்களிலும் நடைபெறும் செயல்களை நாம் பார்த்தோம். அந்த அடிப்படையில் வஹாபிகளிடம் நாம் சில கேள்விகளை கேட்கிறோம்.
1. அல்குர்ஆன் ஓதுதல் இஸ்லாம் தடை செய்த விஷயமா?
2. பெருமானார் நபி (ஸல்) அவர்களது புகழைக் கவிதைகளாகவோ, வசனங்களாகவோ பாடுதலும், ஓதுதலும் இஸ்லாம் தடை செய்த விஷயமா?
3. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்தல் இஸ்லாம் தடை செய்த விஷயமா?
4. வாழ்கிறவர்களுக்காகவும், வாழ்ந்து மறைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தல் இஸ்லாம் தடை செய்த விஷயமா?
5. அன்னதானமும், தர்மமும் இஸ்லாமுக்கு ஒவ்வாத செயலா?
6. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், வழிகாட்டுதல்களையும் போதிக்க பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்துதல் இஸ்லாம் தடை செய்த செயலா?
7. நபி (ஸல்) அவர்களின் வரலாறு கூறப்படும் இடத்தை மணம் கமிழச் செய்தல் இஸ்லாம் வெறுக்கும் செயலா?
8. நபி (ஸல்) அவர்களின் மத்ஹ் பாடல்கள் பாடுதல் ஹராமான செயலா?
இந்த கேள்விகளுக்கு 'இல்லவே இல்லை' என்பது தான் பதிலாக அமையும். ஏனெனில் இவை அனைத்தும் நற்செயல், நன்மைகள் ஈட்டித்தரும் அமல்கள் என்பதை யாரும் மறுத்துரைக்க மாட்டார்கள்.
நன்மைகளைப் பெற்றுத் தரும் நற்செயல்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இச்செயல்களை மீலாது விழா என்ற பெயரில் செய்யும் போது மட்டும் எப்படி ஹறாமாகிறது? மார்க்க விரோத செயலாக மாறுகிறது? மீலாத் என்ற சொல்லே உச்சரிக்கக் கூடாத ஹராமான செயலா?
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம்.
7598769505, 7200977182, 9894710696