மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 7
வெளியீடு எண் 7
"மவ்லிதும், மீலாதும் நற்செயல்களாக இருந்தால் நபீ (ஸல்) அவர்களே அவற்றைச் செய்திருப்பார்கள். செய்யச் சொல்லி இருப்பார்களே' என கூறும் வஹாபிகளே
1. நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனை தொகுத்து நூல் வடிவிலாக்க வேண்டுமென சொன்னார்களா?
2. நபி (ஸல்) அவர்கள் தான் வாழ்ந்த கால அளவில் தராவீஹ் தொழுகையை ரமளான் மொத்த நாட்களும் ஒரு இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழுதிட ஏற்பாடு செய்தார்களா?
3. பெருமானார் (ஸல்) அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்குகளை நடைமுறைப்படுத்தினார்களா?-
4. இன்று காணப்படுவது போன்று ஆரம்ப கால அல்குர்ஆன் பிரதிகளில் இஃராபு எனப்படும் பத்ஹ் (அகர உயிர்குறி) கஸர் (இகர உயிர்குறி) ளம்மு (உகர உயிர்குறி) அடையாளங்கள் நபிகளார் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறான அடையாளங்களை குர்ஆனில் போடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடத்தில் கட்டளையிட்டார்களா?
5. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல்களில் கிப்லாவின் திசையை தெரிந்து கொள்வதற்காக மிஹ்ராபை உருவாக்கினார்களா?
6. நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நேரம் நிச்சயிக்க கடிகாரங்களை, வாட்சுகளை பயன்படுத்தினார்களா?
7. நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு கிப்லாவை நிர்ணயிக்க கருவிகளை பயன்படுத்தினார்களா?
8. நபி (ஸல்) அவர்கள் பெருநாட்கள், நோன்பு முதலியவற்றை நிர்ணயிக்க அக்ரேரியன் (இங்கிலீஷ் காலண்டர்களை பயன்படுத்தினார்களா?
9. நபி (ஸல்) அவர்கள் மதரசாக்களை, அரபுக் கல்லூரிகளை நிறுவினார்களா? கல்வி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கினார்களா? பெண்களுக்கென தனியாக நிஸ்வான் மதரசாக்களை கட்டினார்களா? மாணவ, மாணவிகளை மதரசாவுக்கு கொண்டு வர வாகன வசதிகளை ஏற்பாடு செய்தார்களா?
10. திருக்குர்ஆன் மாநாடு, முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு, ஹதீஸ் மாநாடு, ஷிர்க் ஒழிப்பு மாநாடு, மது ஒழிப்பு பேரணி, இட ஒதுக்கீடு போராட்டம், சிறை நிரப்பு போராட்டம் போன்ற மாநாடுகளையும் போராட்டங்களையும் நபி (ஸல்) அவர்கள் நடத்தினார்களா?
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம். 7598769505, 7200977182, 9894710696