கப்றிலிருந்து பீறிட்டு வந்த அழகிய நறுமணம்

கப்றிலிருந்து பீறிட்டு வந்த அழகிய நறுமணம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#கப்ரிலிருந்து_பீறி_எழுந்த_அழகிய #நறுமணம்

அபூஸயீதில் குத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :

ஸஃத் இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான கப்ரைத் நானும் சேர்ந்து தோண்டினேன்.

தோண்டிய கப்ரின் மண்ணிலிருந்து கஸ்தூரி வாசனையை நாங்கள் நுகர்ந்தோம்.

கப்ரின் அடிப் பகுதி தோண்டுவது வரை அந்த வாசனையை நாங்கள் நுகர்ந்தோம்.

“ஸஃத் இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மவ்த்தானபோது அல்லாஹ்வின் அர்ஷ் குலுங்கியது” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்ட ஸஃது அவர்களின் ஜன்னதுல் பகீஃ-ல் உள்ள கப்ரின் படம் கீழே உள்ளது.

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ . بخاري ، مسلم : كتاب فضائل الصحابة

பக்கத்தில் அபூஸயீதில் குத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரும் உள்ளது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அன்புத் தோழர்களின் கப்ருகளுக்கு முன்னால் நிற்கும்போது அப்பெருமக்களுடைய அழகிய செயல்கள், பேச்சுகள், வீர வரலாறுகள், சிறப்புகள் ஆகியன நம் நினைவுகளை ஆக்ரமிக்கின்றன.

அப்பெருமக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் படிப்பினைகள் பெற்றிட வேண்டும்.

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*