அனைவரையும் அன்பால் அரவணைத்த எங்கள் இமாம்

அனைவரையும் அன்பால் அரவணைத்த எங்கள் இமாம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அனைவரையும்_அன்பால் #அரவணைத்த_எங்கள்_இமாம்...

சுவாமியார் மடம் (குமரி மாவட்டம்) இமாம் மவ்த்தாகிவிட்டார் என்ற செய்தி வாசித்த போது அதிர்ச்சியாகி போனேன்...

ஏதோ ஒரு உற்ற நண்பரே இழந்தது போன்ற ஒரு சங்கடம்...

எப்போது கண்டாலும் சலாம் சொல்லுவார்கள்.
நலம் விசாரிப்பார்கள்.
குடும்பத்தார்களைப் பற்றி விசாரிப்பார்கள்..
அவர்களது நலம் விசாரிப்பு
ஏதோ நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்மைப்பற்றி விசாரிப்பது போன்று இருக்கும்...

இமாம் அவர்கள் அந்த ஜமாஅத்தில் நீண்ட காலம் (சுமார் _20 வருடங்கள்) பணியாற்றினார்கள்..

தான் பணியாற்றிய ஜமாஅத்திலுள்ள மக்களை மிகவும் நேசித்தார்கள்...

அதுபோலவே அந்த ஜமாஅத்தார்களும் இமாம் அவர்களை மிகவும் நேசித்தனர்..

இமாம் அவர்கள் ஒரு சமூக நலம் விரும்பி அனைத்து மக்களையும் அன்பு பாராட்டி எல்லோரிடமும் இனிமையாக பழகியவர்...

உலமாக்கள் மீது மிகுந்த கண்ணியமும், அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்..

அவரிடம் பழகிய எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்..
ஏனெனில் அவர்களின் பழக்க வழக்கங்கள் அப்படி...

மிக அற்புதமான முறையில் பயான் செய்வார்கள்...

உபதேசம் செய்யும் போது கூட எவர் மனதும் சங்கடப்படுத்தாத விதம் அழகான முறையில் செய்வார்கள்...

ஸமஸத கேரளா பாடத்திட்டம் மூலம் ஏராளம் ஏராளம் குழந்தைகளுக்கு மார்க்க கல்வி கற்றுக் கொடுத்தார்கள்..

பல தடவை அவர்கள் பணியாற்றும் பள்ளியில் ஜும்ஆ பயான் செய்ய இமாம் அவர்கள் என்னை அழைத்துள்ளார்கள்..

நமது சொற்பொழிவு களை மனதார பாராட்டி மகிழ்வடைய செய்வார்கள்...

இளம் உலமாக்களை ஊக்குவிப்பு செய்வது, அவர்களது திறமைகளை பாராட்டுவது போன்ற நற்பண்புகள் கொண்டவர்கள்...

சில வருடங்களாக இமாம் மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளானார்கள்...
எல்லாவற்றிலும் அழகிய பொருமையை கடைப்பிடித்தார்கள்..
(அல்லாஹ் அவர்களின் தரஜாவை உயர்த்தி அவர்களது பொறுமைக்கு மிகுந்த நற்கூலிகளை வழங்கி அருள் புரிவானாக..)

சுவாமியார் மடம் ஜமாஅத்தார்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமான மக்கள் திரளாக பேட்மாநகரத்திற்கு வருகை புரிந்து ஹஸ்ரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அனைத்து கிரியைகளிலும் முழுமையாக கலந்து கொண்டது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது...

ஒரு இமாமுக்கு மக்களிடம் இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்....

தங்களது குடும்பத்தில் ஒருவர் மவ்த்தானது போல ஒவ்வொருவரும் காணப்பட்டனர்...

அதுபோல குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பெருமக்கள், ஏனைய இமாம் பெருமக்கள் என ஏராளமான உலமாக்களும்
பேட்மா நகரத்திற்கு சென்று இமாம் ஹஸ்ரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அனைத்து கிரியைகளிலும் முழுமையாக கலந்து கொண்டு விடைப்பெற்றனர்...

யா அல்லாஹ்!!!
பல காலம் எங்கள் மாவட்டத்தில் மார்க்க பணிகள் செய்து பல்வேறு சோதனை களையும்,
கஷ்டங்களையும் கடந்து எங்கள் நேசத்திற்க்குரிய இமாம் உன்னிடத்தில் வந்துள்ளார்கள்...

நீ அவர்களது மார்க்க பணிகளை கபூல் செய்தருள்வாயாக...

அவர்களது மண்ணறையை விசாலப்படுத்துவாயாக...

அவர்களுக்கு சுவனத்தில் உயரிய பதவிகளை வழங்கி அலங்கரிப்பாயாக...

அவர்களையும் எங்களையும் உயர்ந்த ஜன்னாத்துல் ஃபிர்தவ்ஸில் ஒன்று கூட்டி அருள்பாலிப்பாயாக...

அன்னாரை பிரிந்து வாழு(டு)ம் அவர்களது குடும்பத்தினருக்கு அழகிய பொருமையை வழங்கிடு தம்புரானே...

பாவிகளான எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள் நாதா....

ஆமீன் யா றப்பல் ஆலமீன்....

அன்புடன்
#M_சிராஜுத்தீன்அஹ்ஸனி.