ரமளான் வினா விடை பாகம்.. 10
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_10..
46 : உணவுகளை ருசி பார்ப்பதால் நோன்பு முறியுமா..?
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம்..
தேவையில்லாமல் சும்மா ருசி பார்ப்பது கராஹத்தாகும்...
47 : தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியுமா....?
நோன்பு முறியாது...
48 : வாந்தி எடுத்தால் நோன்பு முறியுமா...?
வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
49 : குழந்தைக்காக நோன்பை தவிர்த்தவள் முத்து கொடுக்க வேண்டுமா...?
குழந்தைகளுக்கு அமுதூட்டும் அன்னையவர்கள் நோன்பு காலங்களில் தனக்கு மட்டும் அல்லது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்துக்கள் வருவதைப் பயந்தால் நோன்பை விட முடியும். எனினும் விட்ட அந்த நோன்பை கழாச் செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகாக மட்டும் பயந்து நோன்பை விட்டால் கழாச் செய்வதோடு ஃபித்யாவும் கொடுக்க வேண்டும்.
ஃபித்யா என்பது சுமார் 600 கிராம் பிரதான உணவுப் பொருளாகும்.
50 : நோன்பு நோற்ற நிலையில் உடல் உறுப்புக்களில் ஏற்படும் காயத்திற்கு மருந்து புரட்டலாமா..?
மருந்து புரட்டலாம். எனினும் சத்திர சிகிச்சை செய்ய முடியாது.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....