ரமளான் வினா விடை பாகம்.. 9
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 9

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_9

41 : நோன்பு பிடிக்க இயலாத முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

தள்ளாத வயதின் காரணத்தால் நோன்பை விட்டவர்கள் நாளொன்றுக்கு (ஒரு முத்து) தானியம் நஷ்ட ஈடாக கொடுப்பது வாஜிபாகும்.

42 : நோன்பு பிடிக்க முடியாத நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்..?

குணப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத, நீங்காத நோயாளிகளுக்கு நோன்பு கட்டாயம் இல்லை.
அவர்கள் நாளொன்றுக்கு (ஒரு முத்து) தானியம் நஷ்ட ஈடாக கொடுப்பது வாஜிபாகும்.
நோய் குணமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாளிகளுக்கு நோன்பை தவிர்ப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது..
முத்து கொடுக்க தேவையில்லை..
ஆனால் அந்த நோன்பை பிறகு களாஃ செய்ய வேண்டும்..

43 :பயணிகள் நோன்பு பிடிக்க வேண்டுமா..?

பிரயாணமும் நோன்பை விடுவதை ஆகுமாக்கி வைக்கும்.
எனினும் அந்த நோன்பை களா செய்ய வேண்டும். பிரயாணத்தில் சிரமமில்லையானால் நோன்பு வைப்பது ஏற்றமாகும்.

44 : நோன்பு நோற்ற நிலையில் நீரில் மூழ்கி குளிக்கலாமா..?.

குளிக்க கூடாது.
காது, மூக்கு மற்றும் வாய் வழியாக நீர் உட்சென்றால் நோன்பு முறிந்து விடும்.

45 : நோன்பின் போது கண்ணுக்கு சொட்டு மருந்து இடலாமா...?

ஆம் இடலாம்.
நோன்பு முறியாது.

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....