ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் உஸ்தாத்
ஏழை_எளிய_அடித்தட்டு_மக்களுக்கு உறுதுணையாக_நிற்கும்_உஸ்தாத்
இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
வழக்கறிஞராகப் பதிவுசெய்த பிறகு அதற்கான சான்றிதழ்களுடன்
நான் உஸ்தாதை சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.
தன் மாணவர்களை தன்னுடைய சொந்தம் பிள்ளைகளாக பார்க்கும் உஸ்தாத் அவர்களின் முகத்தில் ஒளிரும் ஆனந்தத்தை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
நீ ஒன்றும் உலகில் எதுவும் சாதிக்க முடியாது என்று பலரும் தீர்ப்பு எழுதிய போது எங்களைப் போன்ற அனாதைகள் மற்றும் ஏழைகள் சமுதாயத்தில் பின்தங்கிவிடக் கூடாது என்று விரும்பிய உஸ்தாத் எங்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் கல்வியை வழங்கி.....
சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் பயனுள்ளவர்களாக மாற்றுவதன் மூலம் எங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்தான் எங்களது உஸ்தாத் அவர்கள்....
உஸ்தாத் அவர்கள் எங்களது தந்தை, ஆசிரியர், எங்கள்வழிகாட்டி, சமூகத்திற்கு முன் எங்களைப் போன்ற எளியவர்களை தலைநிமிர்ந்து நடக்க செய்த மாமனிதர் என்று சொல்வதில் பெருமைப்படுகிறோம்.
பதினோரு வருடங்களுக்கு முன்பு என் பட்டினியை போக்குவதற்கு மர்கஸ் ரைஹான் வாலியில் வந்தேன்....
ஆனால் எல்லாம் அல்லாஹ்வின் விதி.
சமூகமே!!. உஸ்தாதின் கைகளில் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு துளி நாணயமும் என்னைப் போன்ற அனாதையான ஏழை எளிய மக்கள் பலரின் வாழ்க்கையை மாற்றுகிறது.
இதற்காக உஸ்தாத் அவர்கள் அயராது உழைக்கிறார்கள்...
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் அந்த நிழலில் பணக்காரர்களாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.
என்னை இந்த அளவு உயரங்களில் கொண்டு வந்த உஸ்தாத் அவர்கள், மர்கஸ் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் இதற்காக உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அல்லாஹ் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை தந்து எல்லா நிலைகளிலும் அருள்புரிவானாக!!!...
உஸ்தாத் அவர்கள் நீண்ட காலம் மார்க்க பணிகளும், மகத்தான சேவைகளும் செய்ய வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக!!! ஆமீன்....
*தகவல் :M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*
#Adv_Muhsin_Rayhani pk
20/8/2021