ரமளான் சிந்தனைகள் பாகம் 3

ரமளான் சிந்தனைகள் பாகம் 3

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்..
பிறை... 3
ஹலாலை_பேணுவோம்...

அருமை நபியும் ஸஹாபாக்களும் ஹலால், ஹராம் விஷயத்தில் மிக பேணுதலாக இருந்தார்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

عن ضمرة بن حبيب ، أن أم عبد الله ، أخت شداد بن أوس بعثت إلى النبي صلى الله عليه وسلم بقدح لبن عند فطره وهو صائم ، وذلك في أول النهار وشدة الحر ، فرد إليها رسولها : أنى كانت لك الشاة؟ فقالت : اشتريتها من مالي ، فشرب منه ، فلما كان الغد أتته أم عبد الله أخت شداد فقالت : يا رسول الله ، بعثت إليك بلبن مرثية لك من طول النهار وشدة الحر ، فرددت إلي الرسول فيه؟ . فقال لها : " بذلك أمرت الرسل ، ألا تأكل إلا طيبا ، ولا تعمل إلا صالحا " .

ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி
உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் நோன்பு திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள்: இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)

மேற்கூறப்பட்ட வசனத்தில்
"நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலனவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.

عن زيد بن أرقم قال: كان لأبي بكر الصديق رضي الله تعالى عنه مملوك يغل عليه، فأتاه ليلة بطعام، فتناول منه لقمة، فقال له المملوك: مالك كنت تسألني كل ليلة، ولم تسألني الليلة؟ قال: حملني على ذلك الجوع، من أين جئت بهذا؟ قال: مررت بقوم في الجاهلية، فرقيت لهم، فوعدوني، فلما أن كان اليوم، مررت بهم، فإذا عرس لهم، فأعطوني؛ قال: إن كدت أن تهلكني، فأدخل يده في حلقه، فجعل يتقيأ، وجعلت لا تخرج، فقيل له: إن هذه لا تخرج إلا بالماء، فدعا بطست من ماء، فجعل يشرب ويتقيأ، حتى رمى بها؛ فقيل له: يرحمك الله، كل هذا من أجل هذه اللقمة، قال: لو لم تخرج إلا مع نفسي، لأخرجتها؛ سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: «كل جسد نبت من سحت، فالنار أولى به». فخشيت أن ينبت شيء من جسدي من هذه اللقمة.[١]

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு அடிமை ஒருவர் இருந்தார். ஒரு நாள் இரவில் ஒரு உணவைக் கொண்டு வந்தார். அதிலிருந்து ஒரு பிடி உணவை எடுத்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு எப்போதும் ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால் அதைப்பற்றி நீங்கள் விசாரிப்பீர்கள். இன்று விசாரிக்காமலேயே உட்கொண்டு விட்டீர்களே என்று அந்த அடிமை கேட்டார். பசி அதிகமாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன் என்று கூறினார்கள். சரி இது என்ன உணவு எங்கிருந்து வந்தது என்று கேட்டார்கள். நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு கூட்டத்தாருக்காக மந்திரித்தேன். அவர்கள் எனக்கு அதற்கு அன்பளிப்பு தருவதாக வாக்களித்தார்கள். இப்போது அவர்களை சந்தித்த போது அதை எடுத்துக் கொடுத்தார்கள் என்று அந்த அடிமை கூறினார். என்னை அழிக்க நினைத்து விட்டாயா என்று கூறி தன் வாயில் கையை நுழைத்து அதை வெளியே எடுக்க முயற்சித்தார்கள். அது வராத போது நீரை குடித்து குடித்து வயிற்றுக்குள் சென்ற அத்தனை உணவையும் வெளியே வாந்தி எடுத்து விட்டார்கள். இதன் மூலம் என்னுயிரே போயிருந்தாலும் நான் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். ஏனென்றால் எந்த உடல் ஹராமைக் கொண்டு வளர்கிறதோ அது நரகத்திற்கு உரியது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

இறையச்சம் உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம் ஒருவர் அல்லாஹ்வை பயந்து வாழ்கிறார் என்பதற்கு அடையாளம் ஹலால் ஹராமை பேணி வாழ்வது தான்.