JAS நடத்தும் மாபெரும் முப்பெரும் மாநாடு
அல்லாஹ்வை அன்றி யாரையும் வணங்காத உண்மை முஸ்லிம்களை ஷிர்க் செய்பவர்கள் என்று குற்றம்சாட்டும் ஷிர்க் வாதிகளான வஹாபிகளின் செயல்
அநியாயம்! அராஜகம்!! அட்டூழியம்!!!
இந்த ஷிர்க் வாதிகளுக்கு ஷிர்க்கை பற்றி என்ன தெரியும்? ஷிர்க்கை பற்றி குர்ஆன் சொன்ன விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஹதீஸ்கள் சொன்ன விளக்கத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. இமாம்கள் சொன்ன விளக்கத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. ஷிர்க்கை பற்றி ஷைய்த்தான் அவர்களுடைய செவிகளில் ஓதிய கெட்ட மந்திரங்களைதான் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அவர்களின் கேடுகெட்ட தலைவன் சூனியமேதை ஷிர்க்கிற்குச்சொன்ன விளக்கத்தைகூட அவர்கள் பின்பற்றவில்லை. சூனியமேதை சொல்கிறார் 'ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்த பண்பு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகிவிடுவான்.'
இந்த விளக்கத்தையாவது ஷிர்க்வாதிகள் பின்பற்றியிருந்தால் முஸ்லிம்கள் மீது ஷிர்க் குற்றச்சாட்டை வைத்திருக்கமாட்டார்கள். ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று எந்த முஸ்லிமாவது நம்பினாரா ? யாரும் நம்பவில்லை பிறகு எப்படி ஷிர்க் செய்கிறார்கள் என்று சொல்லலாம்.
மவ்லிதில் ஷிர்க் இருக்கிறது என்று சொன்னார்கள் நமது உயிருக்குமேலாக மதிக்கவேண்டிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை புகழுகின்ற மௌலிதை ஷிர்க் என்ற பெரும்பாவம் என்று சொல்கின்ற ஒருவனைவிட கேடுகெட்ட கயவன் உலகத்தில் வேறு யார் இருக்க முடியும்?
மவ்லிதில் எங்கே ஷிர்க் ? பாவங்களை அழிப்பவர்கள் என்று சொன்னது ஷிர்க்கா ? பாவங்களை மன்னிப்பவர்கள் என்று சொன்னது ஷிர்க்கா? நரகத்திலிருந்து காப்பாற்றுவார்கள் என்று சொன்னது ஷிர்க்கா ? எங்களுக்காக ஷஃபா அத் செய்யுங்கள் என்று சொன்னது ஷிர்க்கா ? இந்த பண்புகளெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பது ஸஹீஹான ஹதீஸ்களில் வந்த சங்கதி என்பது இந்த வஹாபிய மூடர்களுக்கு தெரியுமா ? சினிமாக்களை பார்த்து சினிமா பாடல்களை படித்துக்கொண்டு நடந்தால், ஹதீஸ்களில் இருப்பது எப்படி தெரியும்?
நாயகத்தின் இந்த பண்புகள் ஹதீஸ்களில் இருப்பது ஒருபுறம் இவைகள் ஷிர்க் ஆகவேண்டும் என்றால் இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பது போல் நாயகத்திற்கு இருப்பதாக நம்ப வேண்டுமே. அப்படி யாரும் நம்பவில்லையே ? அல்லாஹ் சுயமாக பாவங்களை அழிப்பான். நாயகம் அவர்கள் அல்லாஹ் அழிக்கும் ஆற்றலை படைப்பதால் அழிப்பார்கள். அல்லாஹ் சுயமாக நரகத்திலிருந்து காப்பாற்றுவான். நாயகம் அல்லாஹ்வின் அனுமதியின் பேரால், நரகிலிருந்து காப்பாற்றுவார்கள் என்றல்லவா நம்புகிறோம். அல்லாஹ் குணப்படுத்துகிறான். மருத்துவர் குணப்படுத்துவார் என்று சொன்னால் ஷிர்க் ஆகும் என்று நீங்கள் சொல்வதில்லையே! அல்லாஹ் செய்யும் செயல்தான். ஆனால் மருத்துவர் செய்தபோது ஷிர்க் ஆகவில்லை காரணம் அல்லாஹ் செய்வதைபோல் மருத்துவர் செய்யவில்லை. வஹாபிய மூடர்களே இந்த உண்மையை நாயகம் (ஸல்) அவர்கள் விஷயத்தில் நீங்கள் ஏன் கடைபிடிப்பதில்லை.
நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கள் நாயகத்தின் கண்ணியத்தை குறைத்து பேசுகிறீர்களே ! அவமதிக்கிறீர்களே ! எங்கள் நாயகம் மூடர்களான உங்களுக்கு என்ன துரோகம் செய்தார்கள்? நீங்கள் ஈருலகிலும் வெற்றி அடைவதற்கு வாழ்நாளெல்லாம் சிரமங்களை சகித்தார்களே அதுவா துரோகம் ? இல்லை மண்ணறையில் இருந்து உங்களுக்காக மன்னிப்பு தேடுகிறார்களே ! அதுவா துரோகம் இல்லை மறுமையில் உங்களுக்காக அல்லாஹ்விடம் ஷஃபாஅத் செய்வார்களே அதுவா துரோகம் !
முஸ்லிம்கள் தர்கா ஜியாரத் செய்தால் அதைத் தர்கா வழிபாடு என்று பரிகாசம் செய்கிறீர்கள் ஒரு சுன்னத்தை பரிகாசம் செய்ய உங்களுக்கு மனம் வந்ததே படுபாவிகளே ! தர்காவில் அவ்லியாவை வணங்கினார்களா ? அல்லாஹ் என்று சொன்னார்களா? சில அறிவில்லாத மனிதர்கள் கப்ரில் சுஜுத் செய்கிறார்கள். அதை முஸ்லிம்கள் பாவம் என்றல்லவா சொல்கிறார்கள். இருந்தபிறகும் முஸ்லிம்களை முஷ்ரிக்குகள் என்று சொன்னீர்களே !
ஒரு தேர்தல் வந்தால் நீங்கள் ஒரு மாநாடு நடத்துவீர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் அதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் இல்லாத பொல்லாத பொய்களை சொல்லி வேதனைப்படுத்தும் தலைப்பையா நீங்கள் எடுக்க வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிமை காஃபிர் என்று சொன்னால் சொன்னவன் காஃபிராவான் என்ற நாயகத்தின் எச்சரிக்கை மூடர்களான உங்களுக்கு தெரியாதா ? உங்களது தவறான பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் எத்தனை பேர் காஃபிராவார்கள்.
உலகின் அற்ப லாபங்களுக்காக நரகத்தை நீங்களும் வாங்கி பிறருக்கும் கொடுக்கும் உங்கள் துணிச்சலை என்னவென்று பாராட்டுவது.
ஷிர்க்வாதிகளே!
அன்பாய் சொல்லுகிறோம்.
இந்த ஷிர்க் மாநாடு உங்கள் மறுமையை பாழ்படுத்தும் மாநாடு, உங்களை பின்பற்றும் மக்களின் மறுமையை பாழ்படுத்தும் மாநாடு அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். மக்களை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கும்,
உங்கள் மக்களுக்கும் அருள் பாலிப்பான் சுன்னத்துல் ஜமா அத் எனும் சுந்தரச் சமுத்திரத்தின் சுத்தமான துள்ளிகளாக மாறிவிடுங்கள்.
சத்திய தவ்ஹீத் எனும் சந்தன கோட்பாட்டின் நித்திய அங்கங்களாக மாறிவிடுங்கள். அல்லாஹ்
அருள்பாலிப்பானாக ஆமின்!
இவண்,
ஜம்இய்யத்து அஹ்லிஸ்ஸுன்னா திருவிதாங்கோடு கிளை
Mob நம்பர்...
7200149471,
9487057034,
7200149461
ஜம்இய்யத்து
அஹ்லிஸ்ஸுன்னா(JAS)
நடத்தும்
மாபெரும்
முப்பெரும் மாநாடு
நாள் : 7-02-2016 ஞாயிற்றுக்கிழமை
இடம் : களியக்காவிளை
அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் !