திரு நபி குடும்பத்தார்கள்
திருநபி குடும்பத்தார்கள்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சொன்னார்கள் என்னுடைய வீட்டில் (குடும்பத்திலிருந்து) தவ்ஹீதும், பிரச்சாரமும் உட்கொண்ட ஒருவரையும் தண்டிக்கமாட்டனென்று அல்லாஹ் எனக்கு வாக்குறுதி தந்துள்ளான்.
(அஸ்ஸாவாயிபுல் முஹ்ரிக்கி ஃபீ ரத்தி அஹ்லில் பிதயி வல் ஸன்தக்கி : பக்கம் 351)
தப்ரானி அறிவிப்பு செய்த ஹதீஸில்
"நபி ((ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்)) பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வோடு கூறினார்கள்.
உன்னுடைய சந்தான பரம்பரையும் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.
நூல் : அஸ்ஸவாயில்புல் முஹ்ரிக்கி ஃபிரத்தி
அஹ்லில் பிதயி
வல் ஸன்தக்கி.
மேலும் அல்லாஹ் கூறும்பொழுது அல்லாஹ் விரும்புவதெல்லாம் நபியின் குடும்பத்தார்களாகிய அஹ்லுபைத்துக்களை
எல்லா விதமான அசுத்தங்களை விட்டும் பரிசுத்தத்திலும் பரிசுத்தப்படுத்துவதற்கே (அல்குர் ஆன். 34:33)
இந்த ஆயத்தில் "ரிஜ்ஸ்" என்பதின் உட்பொருளைப்பற்றி ஆறு கருத்துக்களை கூறுகிறார்கள்.
1. குற்றத்தை அகற்றுவது
2. ஷிர்க்கை அகற்றுவது
3. ஷைத்தானை அகற்றுவது
4. பாவத்தை அகற்றுவது
5. அகற்றுவது
6. சந்தேகத்தை அகற்றுவது....
மேற்கூறிய ஆயத்தினுடைய உட்பொருள் சம்பந்தமாக ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டின்
தலை சிறந்த பண்டிதர் அபுல் ஹஸன் இப்னு முஹம்மது அல்பஸரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
தவ்ஹீதும் ஹிதாயத்தும் கொடுத்து அல்லாஹ் அஹ்லுபைத்துக்களை சுத்தப்படுத்தியுள்ளான் என்பதுதான் இந்த ஆயத்தினுடைய அர்த்தம்
(அன்னுகத்து வல் உயூன் 4:401)
இமாம் ஃபக்ருத்தீன் முஹம்மது பின் உமர் அல்பக்ரி அர்ராஸி (ரலியல்லாஹு அன்ஹு) சொல்லுகிறார்கள்.
அஹ்லு பைத்துக்களை விட்டு பாவத்தை அகற்றி அவர்களுக்கு கராமத் என்கிற மகத்துவம் கொடுத்து அவர்களை மேன்மைப்படுத்த அல்லாஹ் நாடியுள்ளான் என்பதுதான் இந்த ஆயத்தினுடைய அர்த்தம்.
இந்த ஆயத்தில் கூறப்பட்ட அஹ்லு பைத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுடைய மனைவிமார்களும் உள்படுவார்கள் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லயாஹு அன்ஹு) கூறுகிறார்கள்.
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சுப்ஹ் வேளையில் தொழுகைக்காக பள்ளிக்கு ஆறுமாதக்காலம் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு)
வீட்டின் அருகில் நடந்து செல்லும் போது இவ்வாறு கூறுவார்கள்.
அஹ்லு பைத்தே, தொழுகைக்காக எழுந்திருங்கள் நிச்சயம் அல்லாஹ் உங்களுடைய பாவங்களை அகற்றி சுத்தப்படுத்துவதற்க்கு நாடியுள்ளான்
(இப்னு கஸீர் 3:465).
நாயத் திருமேனியுடைய மனைவியான உம்மு ஸலாமவிலிருந்து (ரலியல்லாஹு அன்ஹா)
பதிவு செய்யப்படுகிறது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) உம்முஸலம் (ரலியல்லாஹு அன்ஹு) விலுடையை வீட்டிலிருந்த ஒரு தினத்தில் அவர்கள் உறங்கும் வேளையில் அணிகிற ஆடைக்கு அப்பால் கைபரில் நிர்மானம் செய்தகம்பளி போர்வை அணிந்திருந்தார்கள்.
அப்போது பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) ஒரு கல்சட்டியுடன் அங்கே வருகை தந்தார்கள் அதில் கஸீரா
(ஒரு வித உணவு வகை) இருந்தது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) பாத்திமாவை (ரலியல்லாஹு அன்ஹு) அழைத்து கூறினார்கள்.
உங்களுடையை கணவனையும் ஹஸன் ஹுஸைன் என்ற மக்களையும் அழைத்து வாருங்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்து வந்தார்கள் அவர்கள் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தும் வேளையில் மேற்கூறிய ஆயத்து இறங்கியது.
அந்த வேளையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) போர்வையின் ஒரு அற்றத்தை பிடித்து கொண்டு அவர்களை மூட செய்து போர்வையின் அடிபக்கம் வழியாக கையை வெளியே கொண்டு வந்து வானத்தை சுட்டிக்காட்டி கூறினார்கள். “அல்லாஹ்வே இது என்னுடைய அஹ்லு பைத்தும் என்னுடைய அடுத்த உறவினர்களும், அதனால் இவர்களுடைய
குற்றம் நீக்கம் செய்து சுத்தப்படுத்துவாயாக.
மூன்று தடவை இவ்வாறு கூறினார்கள் உம்முஸலமா ரலியல்லாஹு அன்ஹா கூறிகிறார்கள்.
அவ்வேளையில் நான் என்னுடைய தலையை அந்த துணியின் உள்ளே நுழைத்துக் கொண்டு கேட்டேன் அதற்கு நானும் உங்கள் கூட்டத்தில் சேர்ந்தவள் தானே என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சொன்னார்கள்.
நீ நன்மையின் பக்கமாக இருக்கிறாய் என்று இரண்டு தடவை கூறினார்கள்.
(அத்துர்ருல் மன்ஸுர் : 376)
அஹ்லு பைத்தின் விசாலம் மேற்குறிப்பட்டவர்களில் மட்டும் ஒதுங்கியதல்ல அல்ஹாபிழ் ஜலாலுத்தீன் அப்துற்றஹ்மான் அஸ்ஸுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள். என்னுடைய அஹ்லுபைத்தின் விஷயத்தில் நான் உங்களை அல்லாஹ்வை நினைவுப்படுத்துகிறேன் என்ற ஹதீஸை ஸைய்துப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு கூறியது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுடைய அஹ்லு பைத்யார்?
அஹ்லு பைத்தில் நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) மனைவிமார்கள் அஹ்லு பைத்தில் உள்படுவார்களா?
என்று கேட்கப்பட்டது.
உடன் செய்து இப்னு அர்க்கம்
(ரலியல்லாஹு அன்ஹு)
கூறினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) வுடையை
மனைவிகள் அஹ்லுபைத்தில் உள்பட்டவர்கள்தான்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினுடையை காலத்திற்கு பிறகு அவர்களின் அஹ்லுபைத் சக்காத் விலக்கப்பட்டவர்களான
அலி (ரலியல்லாஹு அன்ஹு) அகீல் (ரலியல்லாஹு அன்ஹு) ஜஃபர் (ரலியல்லாஹு) போன்றவர்களின் பரம்பரையாகும்.
அஹ்லு பைத்தினுடையை
முதல் கண்ணிகளான
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அலி (ரலியல்லாஹு அன்ஹு) போன்றவர்கள்
பூரண மகத்துவமும் மேன்மையுமுள்ளவர்கள்.
இமாம் ராஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இது சம்பந்தமாக கூறும்பொழுது
நான் சொல்லட்டுமா. ஆலுமுஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) என்றால் அவர்களுடைய பரம்பரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சென்று அற்ற முடிவாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வரை சம்பூரணமும் சக்தியுமாக உறவு செலுத்துபவர்கள் என்பதுதான் ஆல் என்பதின் அர்த்தம்.
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) ஹஸன், (ரலியல்லாஹு அன்ஹு) போன்றவர்களுக்கும் நாயகம் ஸல்லாஹீ அலைஹி ஸலம்மிற்கு மிடையில் உள்ள உறவு சம்பூரணமென்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.
நமக்கு அவர்கள் மீது அன்பு வைத்தல் நிர்பந்தமான ஒன்றாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் குடும்பங்கள் யார்-?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சொன்னார்கள்.
அவர்கள் அலி
(ரலியல்லாஹு அன்ஹு)
பாத்திமா (ரலி) இவர்களுடைய குழந்தைகள்.
மிகவும் அன்பு செலுத்த வேண்டிய நபர்கள் மேற்கூறப்பட்ட நான்கு நபர்களாகும்.
நபியே கூறுங்கள்!
தீனைக் கொடுத்ததற்க்காக வேண்டி! என் பந்துக்களின் மீது நேசம் கொள்வதை தவிர வேறு எந்த உரிமையும் நான் கேட்கவில்லை
(குர் ஆன் 42:43)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) பாத்திமா (ரலியல்லாஹு) அவர்களின் மீது மிகவும் அன்பு வைத்து இருந்தார்கள்.
அந்த அன்பை வெளிப்படுத்துவதைப் பாருங்கள்.
நபி (ரலியல்லாஹு சொன்னார்கள்
பாத்திமா என்னுடையை ஈரல்துண்டு.
பாத்திமாவை நோவினை செய்வது என்னை நோவினை செய்வதாகும்
"அலி (ரலியல்லாஹு)
ஹஸன் (ரலியல்லாஹு) போன்றவர்களையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மிகவும் அதிகம் அன்பு வைத்து இருந்தார்கள் எனவேதான் அவர்களை அன்பு செய்வது எல்லாவர்களுக்கும் நிர்பந்தமாக அமைகிறது அதற்க்கு ஆதாரம் பரிசுத்த குர்ஆன் (சூரத்துார் : 63)
அஹ்லு பைத்திற்க்காக நாம் எப்போதும் பிரார்த்தனை செய்கிறோம் தொழுகையின் கடைசியில் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் என்று பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம் அஹ்லுபைத்தை தவிர இந்த அளவு மரியாதை வேறு ஒருவருக்குமில்லை.
கடைசிகாலம் வரை இந்த பரம்பரையோடு நாம் செலுத்துகிற அன்பு நாயகத் திருமேனிஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதான அன்பின் பாகமாக நிலை கொள்ள வேண்டுமென்று இப்னுகஸீர் அறிவிப்பு செய்கிற ஒரு ஹதீஸில் பார்க்க முடியும் "இப்னு கஸீர் சொல்லுகிறார்கள். நிச்சயமாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கதீர்வும்மயில் நடத்திய சொற்பொழிவில் விளக்குகிறார்கள் நான் உங்களிடம் இரண்டு வலுவான விஷயங்களை விட்டு செல்கிறேன் நீங்கள் அதைப்பற்றி பிடிக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்..
1. குர்ஆன்,
2. அஹ்லுபைத்
(மிஷ்காத்; 589)
நபிகளாரின் குடும்பத்தினரை எதிரிகளாக கான்பவர்களை நபி (ஸல்) கோப்பார்வையுடன் காண்பார்கள்.
அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் ரலியல்லஹு அன்ஹு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் கூறினார்கள். குறைஷிகள் எங்களை வெறுப்பு வெளியாக்கும் விதத்தில் எங்களோடு அனுகுகிறார்கள்
அது கேட்ட வேளையில் மிகவும் அதிகம் கோபம் கொண்டவர்களாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்.
அல்லாஹ் மீது சத்தியமாக ஒரு மனிதனுடைய இதயத்தில் அல்லாஹ்விற்காகவும் தனது தூதருடைய திருப்திக்காவும் உங்களோடு (அஹ்லுபைத்) அன்பு செலுத்தாது இருக்கும் வரை அவன் உள்ளத்தில் ஈமான் உள்ளே நுழையாது.
(இப்னு கஸீர் 4:115)
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் அன்பு செலுத்தும் கூட்டத்தில் அல்லாஹ் நம்மை சேர்த்து
அருள் புரிவானாக! ஆமீன்
ஆக்கம்:M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி..
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்..
7598769505