இப்ராஹீமிய்யா பாதை
இப்ராஹீமிய்யா பாதை
உலகில் அதிகமான மக்கள் ஒன்று கூடும் ஒரே இடம்
சவுதி அரேபியாவிலுள்ள மக்காவாகும்.
இவ்வளவு அதிகமான மக்கள் ஒன்று கூடும் இடம் மக்காவை தவிர வேறு இல்லை.
ஊரைச் சுற்றிப் பார்த்து அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்ந்து பிரியும் சங்கமமல்ல.
சவுதி அரேபியாவைவிட
சுற்றிப் பார்ப்பதற்கு எவ்வளவோ இடங்கள் இருந்தும் அங்கு செல்லாமல் உலகிலுள்ள மக்களில் ஏராளமானோர் இலட்சக்கணக்கான பணத்தை செலவழித்து கஷ்டப்பட்டு உற்றார் உறவினரை விட்டு பிரிந்து வரக்காரணம் என்ன? எல்லா வருடங்களிலும் இது தொடர்கிறது ஐந்தாயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வரும் பயணிகளில் அதிகமானோர் இதற்கு முன்னால் வருகை தராதவர்கள்.
யாருக்காக இவர்கள் வருகை தருகிறார்கள்? இவர்களின் இலட்சியமென்ன? யாருடைய நினைவுகளை புதுப்பிக்க வருகிறார்கள்?
அவர்கள் நினைவு கூறுவதெல்லாம் ஒரு நபரையும், அவரின் குடும்பத்தை பற்றியும், அவரின் தியாக வரலாறைப்பற்றியும்... அப்படி நினைவு கூரும் வண்ணம் இறைவனின் திருப்தியை தேடுகிறார்கள்.
#நேர்வழிக்_காட்டி
கலாச்சாரங்களின் தந்தை,
நல்ல பண்புகளின் தலைவர்,
மனித வழிகாட்டி,
தியாக செம்மல், சோதனைகளின் சிகரம் என பல பதவிகளில் இடம் பிடிப்பவர்கள் நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அழகான கலாச்சாரத்தை உருவாக்கி தந்தவர்கள்.
முடியையும் தாடியையும் நீட்டி வளர்த்து மனிதனின் வெறுப்பை சம்பாதிப்பதை தடுக்கும் வண்ணம் மனித சமுதாயத்திற்கு உடல்ரீதியான அழகை உருவாக்கி தந்தவர்கள்.
நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம்
முதன்முதலாக முடியையும்,
தாடியையும், மீசையையும், நகைத்தையும் வெட்டி மேனிக்கு அழகுப்படுத்தி தந்தவர்கள் என இப்னு அப்பாஸ்! ரலியல்லல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள்
அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை வணக்கங்களைக் கொண்டு சோதனை செய்தான்.
அதுபோன்று சுகாதாரத்தைக் கொண்டும் சோதனை செய்தான்.
அதில் ஐந்து வகை மனிதனின் முக்கிய உறுப்பான தலையிலும் வேறு ஐந்து மனிதனின் உடலிலுமாகும்.
(தஃப்சீர் இப்னு கஸீர்)
இப்ராஹீம் நபியின் மில்லத்தை (மார்க்கத்தை) பின்பற்றும்போது தான் ஒருவன் பூரண
மனித னாக மாற முடியும்.
அல்லாதவர்கள் மனிதர்களல்ல.
மூடர்களென்று
குர்ஆன் கூறுகிறது..
தன்னைத் தானே மூடனாக்கி கொண்டவனைத் தவிர இப்ராஹீம் நபியுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர்கள் நல்லடியார் களுடன் இருப்பார்கள். (அல்பகரா: 130)
நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் கொண்டு வந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும்,
கிறித்தவர்களும், பின்பற்றுகிறார்கள். அதுமட்டுமல்ல! இப்ராஹீம் நபியின் உரிமையும்
கொண்டாடுகிறார்கள். முஃமின்களை பார்த்து அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள்.
அப்போது நீங்கள் நேரான வழியை அடைந்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள் ஆனால், உண்மையான முறையில் இப்ராஹீம் நபியை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான் நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்:
நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம்!
அவர் உங்களைப் போன்று இணைவைத்து வணங்கிய
வரல்ல என்று கூறும்படி விசுவாசிகளுக்கு நபியே நீர் கூறுவீராக..
(அல்பகரா: 135)
#பரிபூரண_அடிமை
அல்லாஹ் கூறுகிறான்:
அன்றி அவருக்கு அவருடைய இறைவன் நீர் எனக்கு வழிபடும் எனக் கூறியபோது அவர் (எவ்வித தயக்கமுமின்றி அகிலங்களின் ரப்பு ஆகிய உனக்கு இதோ நான் வழிப்பட்டேன் எனக் கூறினார்..
நமக்கு முஸ்லிம் என்ற பெயர் வரக்காரணமாக இருந்தவர்கள் இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம்.
முஸ்லிம் என்றால் அதனுடைய அர்த்தம் வழிபடுபவன் என்பதாகும் சோதனைகளும் துன்பங்களும் துயரங்களும் கஷ்டங்களும் வந்து நம்மை குலுக்கினாலும் நம்மை மறித்தாலும் அல்லாஹ்வைத் தவிர மற்றொருவனுக்கு முன்னால்
தலை குனியவோ,
வணங்கவோ கூடாது. தம்முடைய ஈமான் எனும், நம்பிக்கை எப்போதும் உறுதியுள்ளதாக இருக்க வேண்டும்.
உலகில் முதலாவதாக வஜ்ஜஹத்து ஓதியது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகும்.
சில சூஃபி ஞானிகள் கூறுவார்கள்:
இந்த காலத்தில் மனிதர்கள் சொல்லுகின்ற பொய்களில் மிகவும் மோசமானதும் பெரியதும் வஜ்ஜஹத்து
(நான் உனக்கு வழிப்பட்டேன்) என்பதாகும்
ஏனென்றால்,
இது சொல்லுகின்ற மனிதன் அவ்வேளையில் தன்னுடைய
சிந்தனையை
நாலா பக்கமும் திருப்பி அல்லாஹ்வை மறந்துவிடுகிறான்.
தான் சொன்னதையும் மறந்துவிடுகிறான் ஆனால், இப்ராஹீம் நபி அவ்வாறல்ல! அவர் ஓதியது அவரின் மனதின் உள்ளிலிருந்து வந்ததாகும்.
அது ஒரு சாதரண வாசகமல்ல
எவ்வேளையிலும் துன்பத்திலும் சந்தோஷத்தி"லும் அல்லாஹ்வை மறவாதவர்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
தவிர இப்ராஹீமை அவருடைய இறைவன் பெரும் சோதனையான பல கட்டளைகளை விட்டுச் சோதித்தபோது, அவர் யாவற்றையும்
பரிபூரணமாகவே செய்தார் (ஆதலால் இறைவன்) நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு நேர்வழிக் காட்டக் கூடிய தலைவராக ஆக்குகிறேன் எனக் கூறினான்
(அல்பகரா: 124)
சோதனைகளின் தலைவர்
அல்லாஹ் கூறுகிறான்:
தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் பெரும் சோதனையான பல கட்டளைகளையிட்டுச் சோதித்தபோது, அவர் யாவையும் பரிபூரணமாகவே செய்தார்.
(அல்பகரா: 124)
கரடுமுரடான வாக்கியங்களைக் கொண்டு சோதனை செய்தோம் என்பதல்ல அதனுடைய பொருள். மாறாக, இமாம் ராஸி (ரஹ்) சொன்னதைப் போன்று பல தரத்திலுள்ள பெரும் சோதனையான கட்டளைகளைக் கொண்டு உங்களைச் சோதனை செய்தோம் என்பதாகும் அதனுடைய அர்த்தம்.
அல்லாஹ் தஆலா இப்ராஹீம் நபிக்கு பல உத்தரவுகளை கட்டளை பிறப்பித்ததிலிருந்து சிலவற்றை நாம் பரிசோதிப் போம்:
ஹாஜரா அன்னையை செடியோ, மரமோ, புற்களோ, தண்ணீரோ ஒன்றுமேயில்லாத. மக்கள் வசிக்காத பாலைவன பூமியில் கொண்டுபோயி அங்கேயே அவர்களுக்கும் குழந்தைக்கும் துணையாக நிற்காமல் அவர்களை தன்னந்தனியாக நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெறியேறியதே
மிகவும் பெரிய சோதனையாகும். போகும் வேளையில் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
தவிர இப்ராஹீம்
இறைவனை நோக்கி!
என் இறைவனே! மக்காவாகிய இதை அபயமளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி வைத்து, இதில் வசிப்பவர்களில்,
அவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு ஆகாரமாக பலவகைக் கனிவர்க்கங்களையும் அளிப்பாயாக!
இங்கே ஒன்று கவனிக்க வேண்டும்.
இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்தபிறகு
அல்லாஹ் கூறுகிறான்:
(என்னை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு) நான் உணவு வழங்குவதுபோன்று என்னை நிராகரிப்ப வர்களுக்கும் உணவளித்து
சிறிது காலம்
(அங்கு சுகமளிக்க விட்டுவைப்பேன்).
இதைப் பற்றியுள்ள முழுமையான
விளக்கங்களை
அறியக் காண்க:
(தஃப்ஸீர் அபூசவூத்)
ஃபாலஸ்தீனத்திலிருந்து தோண்டி எடுக்கப் பெற்ற மண்ணையே ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கொண்டு வருகிறார்கள்.
வந்து கஅபாவை தவாஃப் செய்து மக்காவினுடைய மூன்று மர்ஹலா தூரத்தில் அந்த மண்ணை அள்ளி வீசுகிறார்கள். இந்நாட்களிலிருந்து அங்கு எல்லாவிதமான பழவர்க்கங்களும் எல்லாவிதமான காய்கனிகளும் கிடைக்கிறது.
இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
(ஏற்றுமதி மூலமும் இறக்குமதி மூலமும்) ஒவ்வொரு வகை கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக கொண்டு வந்து அங்கு குவிக்கப்படும்.
(கஸஸ்_57)
அல்லாஹ்வுக்காக தன்னையே சமர்ப்பணம் செய்த, தியாகம் செய்த இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் கொடுத்த Powerஐ பார்த்தீர்களா? நம்முடைய சமர்ப்பணங்கள், தியாகங்கள் எல்லாம் தூய்மையுள்ளதாக கலப்படமற்றதாக இருக்க வேண்டும் அப்போது அல்லாஹ் நம்மை நாம் அறியாவண்ணம் மேலோங்க செய்வான். அல்லாஹ் விதித்த ஒரு உத்தரவுக்காக அடிபணிந்தபோது
ஆள் வசிக்காத அந்த மண்ணை, அந்த நாட்டை கோடானகோடி மக்கள்
வந்து கண்டு ரசித்து அழுது ஆச்சிரியப்பட்டு துஆ செய்து திரும்புகிறார்கள். இதுதான் உண்மையான தியாகத்தின் அடையாளம்.
இதுதான் உண்மையான சமர்ப்பணம் இந்த ஆயத்திலிருந்து இப்ராஹீம் நபியின் தாராள மனதை பார்க்க இயலும் எந்த புகழும் எந்த சுகமும் எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்னுடைய தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ண முடையவர்கள் என்பதை
நமக்கு இந்த ஆயத்துகளிலிருந்து இவற்றை விளங்க முடியும்
இப்ராஹீம் நபி விருந்தாளிகளை கவனிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள்.
இதைப்பற்றி ஒரு மனிதன் அறிந்தான் உடனே அவன் இப்ராஹீம் நபியுடைய அருகில் வந்து எனக்கு சாப்பாடு தாருங்கள். எனக்கு மிகவும் பசிக்கிறது.
நான் சாப்பிட்டு நிறையை நாளாகிறது என்று சொன்னான் அப்போது இப்ராஹீம் நபி, நீ எந்த மார்க்கத்தைச் சார்ந்தவன்? என்று கேட்டார்கள்.
அப்போது அவன்
நான் தீயை வணங்குபவன் என்று பதிலளித்தான். அவ்வேளையில் நபி அந்த மனிதனை திட்டினார்கள் போ!
நான் உனக்கு சாப்பாடு தரமாட்டேன் என்னுடைய ரப்பை என்னவெல்லாம் கூறுகிறார்கள்.
அவனே தீயிக்கு சமமாக்குகிறார்கள். அவனுடைய சக்திகளை ஒரு தீயிக்கு கொடுக்கிறார்கள். அப்படி அவனே திட்டி முடிக்கிறார்கள்.
பாவம் அந்த மனிதனோ திரும்பி சென்றுவிடுகிறான். அப்போது அல்லாஹ் ஜிப்ரீலை அழைத்து
ஓ ஜிப்ரீலே! இப்ராஹீம் நபியிடம் சொல்லுங்கள்! ஓ இப்ராஹீம் நபியே நீங்கள் அந்த மனிதனை அழையுங்கள் அவனுக்கு உணவு கொடுங்கள் கோடானகோடி மக்களுக்கு என்னை வணங்காதிருப்பதால் நான் அவர்களுக்கு தண்ணீரோ வாயுவோ உணவோ நான் தடை செய்யவில்லை அவர்களை நான் வளர்த்து பாதுகாத்து வருகிறேன்.
ஆனால், நீரோ ஒருவேளை வயிறு நிறைப்பதற்கு உணவு கேட்டால் தடைவிதிக்கிறீர்கள். அப்போது இப்ராஹீம் நபி அழுகிறார்கள். ஓடுகிறார்கள்.
அந்த மனிதனின் கையும் காலையும் பிடித்து எப்படியோ
ஒரு வழியாக அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.
அந்த மனிதர், நீர் அல்லவா போடா என்று துரத்தினீர் இப்போது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது?
என்று கேட்கிறார்
உடனே நபி இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் நடந்தவற்றைச் சொல்கிறார்கள்.
உடனே அந்த மனிதர் அழுது புலம்பி இப்ராஹீம் நபியுடைய கையை பிடித்து ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தில் இணைகிறார்.
இதுதான் இஸ்லாமுடைய அம்சமாகும்.
இஸ்லாம்
தீவிரவாத மதமாகும். பயங்கரவாத மதமாகும். தீவிரவாதம்தான் அதனுடைய உள்ளடக்கம் என்று சொல்பவர்கள் இதுபோன்ற வரலாறுகளை
படிக்கவும் சிந்திக்கவும்
செய்யட்டும்.
ஏகத்துவத்தை நிராகரித்து மக்களை அடிமையாக்கி வைத்து, மக்களைக் கொண்டு தன்னை வணங்க செய்த ஒரு போக்கிரியோடு அவனின் கட்டளைகளையும் பேச்சையும் புறக்கணித்து அவனுக்கெதிராக குரல் கொடுத்த வேளையில் தனக்கு தண்டனை தரும் வகையில் ஒருவரும் சந்திக்காத மாபெரும் துன்பத்தை துயரத்தை நம்ரூது கொடுத்த வேளையிலும் அல்லாஹ் தனக்கு விதித்த சோதனையை பூமாலைப் போன்று ஏற்றுக்கொண்டவர்கள் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம்.
#தியாக_செம்மல்:
86 வயதுவரை தனக்கொரு மகன் இல்லாமலிருந்து, தனக்கு பிறகு தனது வேலையை பின்தொடரும் ஒரு குழந்தை வேண்டுமென்ற ஆவல் இப்ராஹீம் நபி அவர்களுக்கு தோன்றுகிறது.
எனவே, (இறைவா! எனக்கு ஸாலிஹான ஆண் மக்களைத் தருவாயாக!) என்று பிரார்த்தனை புரிகிறார்கள். அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் அவர்களுக்கு இஸ்மாயீல் என்ற அழகுக் குழந்தையை கொடுக்கிறான்.
தள்ளாத பருவத்தில் பலகாலம் தவமிருந்து பெற்ற, கிடைத்தறியாத பாக்கியத்தை அவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சோதனை! இந்த விவரத்தை அவர்களே தன் மகனிடம்,
(மகனே! உன்னை நான் அறுப்பதாகக் கனவு கண்டேன்) என்று கூறுகிறார்கள்.
ஆனால், இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் சற்றும் மனம் தளரவில்லை.
(எனது தொழுகை, எனது வழிபாடு, ஏன் நான் உயிர்
வாழ்வது, மரணிப்பதுகூட அகிலத்தை படைத்தாளும் இறைவனுக்கே சொந்தம்) என்ற அவர்களின் சங்க நாதத்தை மெய்ப்பிக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர்கள் கருதினார்கள். இறைவனின் பல சோதனைகளை அவர்களின் மனப்பக்குவம் செவியேற்பவரையே நிலைகுலையச் செய்யும் இக்காரியத்தைச் செய்ய இடமளித்தது.
ஹஜ் செய்கின்ற ஒரு சத்திய விசுவாசி, மக்காவிலிருந்து மினாவுக்கு மினாவிலிருந்து அரஃபாவுக்கு, அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவுக்கு, முஸ்தலிஃபாவிலிருந்து மீண்டும் மினாவுக்கு என இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பார்.
கொளுத்தும் வெயிலானாலும் கடும் குளிரானாலும் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று கடமைகளை அவர் நிறைவேற்றியாக வேண்டும்.
பசியும் தாகமும், கஷ்டங்களும் சிரமங்களும் அவருக்கு அங்கே பிரச்சினையே அல்ல!
இதயம் நிறையை அல்லாஹ்வின் நினைவுகள்!
உதடுகளில் லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற தல்பியா!
மறுமை பெருவெளியை நினைவுபடுத்தும் அரஃபா மைதானம்!
எத்தனை முகங்கள்! எத்தனை நாட்டினர்!
கறுப்பருக்கும். சிவப்பருக்கும் இங்கே வித்தியாசமில்லை. ஏழை பணக்காரன்
என்ற பாகுபாடு இல்லை. ஆட்சியாளன், குடிமகன் என்ற வேறுபாடு இல்லை.
அல்லாஹ்வின் சன்னிதானத்தில் எல்லாரும் சமமான சகோதரர்கள் எல்லோருக்கும் ஒரே உடை,
கஃபன் துணியை நினைவுபடுத்தும் இரண்டே துண்டு வெள்ளாடை மேலும், ஹஜ்ஜின் கடமைகளை செய்கின்றபோது நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் முதல் அல்லாஹ் இறுதித்தூதர் அண்ணல் ஸல்லல்லாஹு" அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலான வரலாற்று நிகழ்வுகள் அவர் கண்முன்னே விரிகின்றன.
(அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஹஜ் செய்யும் பெரும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்...!)
ஆக்கம்.
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...
குமரி மாவட்டம்