கருணை மிகுந்த குரு
............#கருணை_மிகுந்த_குரு...........
"நாளை மறுமையில் சீடர்களாகிய எங்களுடன் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?" என குருவிடம் ஒரு
சீடர் கேட்டார்...
"நான் விறகு கொட்டகையில் என்ன செய்து கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர் என குரு சீடரிடம் திருப்பி கேட்டார்கள்...
"அது... அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சிறு சிறு விறகுகளை எடுத்து ஒரே இடத்தில் வைப்பதைக் காண்கிறேன் என்று சீடர் பதிலளித்தார்...
குருவின் செயலைக் கவனித்துக் கொண்டிருந்த சீடனுக்கு குருவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல
அதிகம் யோசிக்க வேண்டி வரவில்லை
"ஆமாம், இதுபோன்று தான் நாளை மறுமையில் நான் உங்களுடன்
நடந்து கொள்வேன்."
சிறிய விறகு குச்சிகளை ஒன்றுகூட்டி ஒரு இடத்தில் சேகரிப்பது போன்று சின்னி சிதறி கிடக்கும் தன் சீடர்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரும் அந்த குரு யார் தெரியுமா..?
அவர் தான் நாம் மரியாதையாக அழைக்கும் ஷெய்க் ரிஃபாயி... ரலியல்லாஹு அன்ஹு
ஆம், சுல்தானுல்-ஆரிஃபின் ஸெய்யித் அஹ்மத் அர்ரிஃபை - ரலியல்லாஹு அன்ஹு.
அல்லாஹ் நம்மை ரிஃபாயி ஷெய்கு
உட்பட நல்லோர்களின் பரிந்துரைக்கு தகுதியானவர்களாக ஆக்குவானாக!
துஆ விருப்பத்துடன்...
உங்கள் சொந்தம்..
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505