தந்தைக்கு பணம் கொடுத்து மகிழ வையுங்கள்

தந்தைக்கு பணம் கொடுத்து மகிழ வையுங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#தந்தைக்கு_பணம்_கொடுத்து_மகிழ #வையுங்கள்..

ஒருமுறை ஒரு இளைஞன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நபியே! என் தந்தை என்னிடம் கேட்காமலேயே என் செல்வத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்.

நீங்கள் அதற்கு ஒரு தீர்வை சொல்ல வேண்டும் என்று கூறினார்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இளைஞனை பார்த்து உனது தந்தையை அழைத்து வா என்று சொன்னார்கள். .

அந்த இளைஞன் அங்கிருந்து போய்விட்டான்...

உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள்:

'நபியே! அந்த இளைஞனின் தந்தை வந்தால் அவரின் மனதிலுள்ள எண்ணங்களையும்,விவகாரங்களையும் முதலில் கேளுங்கள் என்றார்கள்...

சிறிது நேரம் கழித்து அந்த இளைஞனும் அவனது வயதான தந்தையும் வந்தனர்.

ஜீப்ரில் (அலை) அவர்கள் கேட்க சொன்னதை இளைஞனின் தந்தையிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அந்த முதியவர் ஒரு கவிதை சொல்ல ஆரம்பித்தார்...

"மகனே, நீ சிறுவயதிலாக இருந்த போது உனக்கு நான் உணவளித்தேன்.
என் பணம் தான் உன்னை வளர்த்தது. நான் கஷ்டப்பட்டு உழைத்ததால் நீ சாப்பிட்டாய், குடித்தாய். உனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நான் தூங்காமல் நிம்மதியிழந்து கவலைப்பட்டேன்..

அந்தக் கவிதையைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

தந்தை தொடர்ந்தார்:

கடைசியில் எனக்கு உனது பாதுகாப்பும், கவனிப்பும் தேவைப்படும் கட்டத்தை நான் எட்டியபோது நீ என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு எனக்கு தீயதை திருப்பித் தருகிறாயே?

இதையெல்லாம் பார்க்கும்போது தெரிகிறது; நான் உனக்கு ஒன்றும் செய்யவில்லை. நீ தான் எனக்கு எல்லாம் செய்து தந்தது போன்று இருக்கிறது..

தம் மகனைப் பற்றிய வயதான தந்தையின் வார்த்தைகளின் கடைசிப் பகுதியைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இளைஞனின் மார்பைப் பிடித்துக் கூறினார்:

உனது சேமிப்பு மட்டுமல்ல. நீயும் உன் தந்தைக்கு உரியவன் தான்...

இருவரும் பிரிந்து சென்ற போது, ​​நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்:

அந்த முதியவர் தன் அனுபவத்தைச் சொன்னபோது நான் அழுததை நீங்கள் பார்க்கவில்லையா..?

நான் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருந்த மரங்கள், பாறைகள், மணல் துகள்கள்... எல்லாமே என்னுடன் சேர்ந்து அழுதன.

சொந்தம் பிள்ளைகளை வளர்த்து பெரிதாக்குவதற்கு கையில் தழும்புகள் வந்து, தோல்கள் சுருங்கி, முடிகள் நரைத்த பாவம் மெழுகுவர்த்திகளே.. (தந்தை)

உங்களுக்கு முன் எங்கள் வாழ்க்கையை சமர்ப்பிக்கிறோம்...

பூமியின் மடித்தட்டில் பிறந்து விழுந்த போது முதன் முதலில் வாரியணைத்து முத்தம் தந்தவர் நம் வாப்பா..

வழிதவறிச் செல்லும் போது
சரியான வழியை சுட்டிக்காட்டியது
நமது வாப்பா..

வளர்ந்து வலுதான போது
நிழலாக நின்றவர்
நமது வாப்பா

நமக்கு நிழல் தந்த அந்த பாவம்
வாப்பாவுக்கு
அவர் வாழும் காலை வரை அன்பு செலுத்துங்கள்

நம் அனைவரின்
பெற்றோருக்கும் ஆரோக்கியமான
நீண்ட ஆயுளை அல்லாஹ் வழங்குவானாக...

நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் கருணையையும் வழங்குவானாக... ஆமீன். .

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி