ரமளான் வினா விடை பாகம்..13
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_13
61: நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன அவை எவை..?
ஒன்று: நோன்பு துறக்கும் போது மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
62 : ரமளான் மாதத்தில் நோன்பு பிடிப்பதால் கிடைக்கும் நன்மை என்ன..?
யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
63 : ரமளான் மாதத்தில் நாம் செய்யும் நன்மைகளுக்கு அல்லாஹ் எவ்வாறு கூலி வழங்குகிறான்...?
ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது.
64 : இரண்டாம் பத்தில் நாம் என்ன துஆவை ஓத வேண்டும்...?
اللهم اغفر لنا ذنوبنا وخطايانا كلها يا رب العالمين.
65 : நோன்பு முறியும் காரியங்கள் எவை..?
1 : தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது.
2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது.
3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.
5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)
6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.
7. ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....