முஸ்தஃபாமுஜ்தபா.. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல திருநாமங்களை அறிமுகப்படுத்தும் நூல்.
முஸ்தஃபா_முஜ்தபா_ﷺ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல திருநாமங்களை அறிமுகப்படுத்தும் நூல்.
_________________________________________
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு என்றும், அவற்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெயர்கள் தனக்கு தெரியுமென யூசுஃப் பதிவு செய்துள்ளார்.
அவற்றில் சில பெயர்களும், அதன் அர்த்தங்களுடைய தொகுப்பு தான் உங்கள் கரங்களில் தவளும் இந்த சிறிய நூல்....
1 :அல் அப்தஹிய்யி ﷺ
மக்காவுக்கும் மினாவுக்குமிடையில் உள்ள நீர்வீழ்ச்சி தான்
இங்கே அப்தஹ் என்பது மூலம் நாடப்படுகிறது.
மேற்கூறப்பட்ட இடத்தை சேர்த்துதான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அப்தஹிய்யி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது அப்தஹ் பிரதேசத்திலுள்ள நபர்.
2 : அல் அப்லஜ் ﷺ
முக மலச்சியுடையவர்,
கொடையாளி, ஒழுக்கசீலர், போன்றவை இந்த பெயரின் அர்த்தங்களாகும்.
இவையெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அழைக்கப்படுகிறது.
3 : அல் அத்கா ﷺ
அல்லாஹ்வை மிகவும் அஞ்சக்கூடிடயவர் என்பது தான் இதன் அர்த்தம்.
உலகில் மிகவும் பெரிய பயபக்தியுடைய நபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என்பது இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நபி மொழியைப் பாருங்கள்..
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்..
உங்களில் அத்கா நான் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா...?
4 : அல் அஜ்வத் ﷺ
தாராளமாக தர்மம் வழங்குபவர் என்பதுதான் அஜ்வத் என்ற சொல்லின் அர்த்தம் யாசிப்பவருக்கும், அல்லாதவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாரி வழங்குவார்கள்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதம் சந்ததிகளில் அஜ்வத் நானாகும்.
5 : அல் அஹ்ஸன் ﷺ
பரிபூரணத்துவத்தின் எல்லா சிறப்பு தன்மைகளும் சங்கமித்த நபருக்குத்தான் அஹ்ஸன் என்று சொல்லப்படும்.
திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களில் அஹ்ஸன் என்பது அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் முடியும்..
6 : அல் அஹ்ஷம் ﷺ
மிகவும் அதிகம் ஒழுக்கமுள்ள நபர் என்பது தான் இதன் அர்த்தம்.
மக்கள் கூட்டத்திலும்,
சந்தையிலும் மிகவும் மரியாதையாக மட்டுமே
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்படுவார்கள்..
7 : அஹ்யத் ﷺ
தூரப்படுத்தும் நபர் என்பது தான் இதன் அர்த்தம்.
மோசமான தீங்கான வழிகளிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை தூரப்படுத்தும் காரணத்தால் இப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது..
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
குர்ஆனில் எனது பெயர் முஹம்மது, இஞ்சீலில் எனது பெயர் அஹ்மத்,
தவ்ராத்தில் அஹ்யத் என்றும் கூறினார்கள்..
8 : அல் அத்அஜ் ﷺ
கறுத்த விசாலமான கண்களுடைய நபருக்கு தான் அத்அஜ் என்று சொல்வார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்க இவ்வாறு தான் உள்ளது என்பதை ஹதீஸ் கிரந்தங்களில் பார்க்க முடியும்..
9 : அல் அத்வம் ﷺ
ஏதாவது ஒரு காரியத்தை நிரந்தரமாக நிர்வகிக்கும் நபருக்கு அத்வம் என்று சொல்வார்கள்.
அல்லாஹ்வுக்கு செய்யும்
இபாதத்துகளை நித்யமாக செய்யும் காரணமாக பெயர் வழங்கப்பட்டது..
10 : அல் அர்ஹம் ﷺ
ரஹ்மத் மொழி பேதம் தான் அர்ஹம்.
மிகவும் அதிகம் கருணை உள்ள நபர் என்பதுதான் இதன் அர்த்தம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்கள் மற்றும் இதர ஜீவிகளுக்கு எப்போதும் கருணை காட்டும் நபராக விளங்கினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரஹ்மத் என்று குர்ஆன் சாட்சிப்படுத்தியுள்ளது.
11 : அல் அஸ்கா ﷺ
மிகவும் பரிசுத்தி உள்ளவர் என்பதுதான் இந்த சொல்லின் அர்த்தம்.
மக்களில் பெளதீகவும்
ஆன்மீகமாகவும் மிகவும் அதிகம் பரிசுத்தி கைக் கொண்டவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
12 : அல் அஸ்ஹர் ﷺ
வெளுத்து பிரகாசிக்கும் நபர் என்பதுதான் அஸ்ஹர் என்பதின் அர்த்தம்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பு செய்யும் ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.
13 : அல் அஷ்னப் ﷺ
வெளுத்த பற்கள் இருக்கும்
நபருக்கு தான்
அஷ்னப் என்று சொல்வார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்கள் மிக வெண்மையானதும்,
பார்ப்பவரை ஈர்க்கும் தன்மையுடையதும்,
வரிசையான அமைப்பு கொண்டதுமாகும்.
14 : அல் அத்யப் ﷺ
மிகவும் உயர்வான நபர் என்றும்,
மிகவும் அதிகம் நறுமண வாசனை கொண்ட நபர் எனவும் இதற்கு அர்த்தம் உண்டு.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் வாசனை மிகவும் சுகந்தமாக இருந்தது என ஸஹாபாக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மரணத்திற்குப் பிறகு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டவர்கள் அதன் மூலம் அழகான சுகந்தத்தை அனுபவித்தார்கள் என்பதை வரலாற்றில் பார்க்க முடியும்.
15 : அல் அஸ்அஸ் ﷺ
இஸ்ஸத் எனும் சொல்லில் இருந்து தான்
அஅஸ்ஸு வந்தது.
மிகவும் திடகாத்திரமான
வலிமையான நபர்
என்பதுதான் இதன் அர்த்தம்.
உலகில் மிகவும் அபிமான உள்ளவர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.
16 : அல் இக்லீல் ﷺ
கிரீடம் என்பதுதான் இதன் அர்த்தம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏனைய நபிமார்கள் மற்றும் அனைத்து மக்களின் தலைவராக விளங்குவதால் இந்த பெயர் வழங்கப்பட்டது.
தாஜ் என்ற
சொல்லுக்கும் இதே அர்த்தம் தான்..
17 : இமாமுல் கைர் ﷺ
நன்மையின் தலைவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
உலகில் சர்வ நன்மைகளின் பிரச்சாரகர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
இருட்டில் கூட அவர்கள் நன்மையின் விளக்கை ஒளிரச் செய்தார்கள். இமாமுல் ஆமிலீன், இமாமுந்நபிய்யீன்,
இமாமுந்நாஸ் இதுவெல்லாம் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமை பதவியை அறிவிக்கும் பெயர்களாகும்..
18 : அல் அமீன் ﷺ
சிறுவயதிலிருந்தே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பெயரில் தான் அறியப்பட்டிருந்தார்கள்.
நம்பிக்கையாளர் என்பதுதான் இதன் அர்த்தம்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?
நான் அமீனாகும்.
(முஸ்லிம்)
19 : அல் அவ்வாஹ் ﷺ
பணிவுடையவர், அதிகமாக பாவமன்னிப்பு தேடுபவர்,
போன்றவையெல்லாம் அவ்வாஹ் என்பதின் அர்த்தமாகும்.
இந்த குணங்களெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்தது.
குர்ஆன் ஓதும் நபர் என்ற ஒரு அர்த்தமும் இதற்கு உண்டு.
20 : புஷ்ரா ஈஸா ﷺ
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பே கடைசி காலத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதராக அனுப்பப்படும் தகவலை பல நபிமார்களும் நற்செய்தி சொல்லியுள்ளனர்.
அவர்களில் முக்கிய நபர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அவர்கள் கூறிய நற்செய்தியை குர்ஆன் நமக்கு விவரித்துள்ளது.
நான் என் தந்தை இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலனும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
நற்செய்தியாகும்..
நபியாக வருவதற்கு முன்பே நற்செய்தி சொல்லப்பட்ட நபிமார்கள் ஐந்து பேராகும்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம்
யஃகூப் நபி அலைஹிஸ்ஸலாம்
யஹ்யா நபி அலைஹிஸ்ஸலாம்
இஸ்ஹாக் நபி அலைஹிஸ்ஸலாம்
(ஸுபுலுல் ஹுதா)
21 : அல் பத்ர் ﷺ
பூரண சந்திரன் என்பது தான் இதன் அர்த்தம்.
திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வை சிறப்பை மேன்மையை
குறிப்பிடுவதற்கு தான்
நாயகத்தை பற்றி இவ்வாறு சொல்லப்படுகிறது
மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ் கூறினான்..
ஓ மூஸா முஹம்மது நபி பத்ரும்,பஹ்ருமாகும்
ஸுபுலுல் ஹுதா
22 : ஆயத்துல்லாஹ் ﷺ
அல்லாஹ்வின் அத்தாட்சி என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்
விடமிருந்துள்ள அற்புதவும்,அத்தாட்சியுமாகும்.
முஜாஹித் ரழியல்லாஹு அன்ஹு
போன்ற குர்ஆன் விரிவுரையாளர்கள் தெளிவுப்படுத்திய விஷயம் இறுதி நாள் வரை மேற்கூறப்பட்ட அத்தாட்சி நிலைத்து நிற்கும் என்பதாகும்..
23 :அவ்வலுஷ் ஷாபிஈ ﷺ
மஹ்ஷரில் மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் பல நபிமார்களையும் சிபாரிசு செய்வதற்கு வேண்டி அணுகுவார்கள்.
ஆனால் அவர்கள் யாரும் அந்த நேரத்தில் தயாராக மாட்டார்கள்.
கடைசியில் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சந்நிதானத்தில் வந்து சொல்லும் போது அவர்கள் ஷஃபாஅத் செய்வார்கள்.
பிரதமமாக இந்த காரியத்தை நிறைவேற்றுவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
எனவேதான் அவ்வலுஷ் ஷாபிஈ என்ற பெயர் வழங்கப்பட்டது.
24 : அவ்வலு முஷப்பஃ ﷺ
பிரதமமாக ஷஃபாஅத் ஏற்றுக் கொள்ளப்படுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையது மட்டுமே என ஏராளமான ஹதீஸில் வந்துள்ளது.
இது அங்கீகாரம் தான்
அவ்வலு ﷺ என்பதைக் குறிக்கிறது.
25 : அத்தக்கீ ﷺ.
காளி இயாள் ரஹ்த்துல்லாஹி அவர்கள் கூறினார்கள்..
பூர்வ காலத்தில் உள்ள ஒரு பாறையில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது...
முஹம்மது ﷺ அவர்கள்
தக்கியாகும், அவர் நன்மை செய்யும் மனிதரும், தலைவரும்,
நம்பிக்கையாளரும் ஆகும்.
26 : அத்திஹாமிய்யி ﷺ
பரிசுத்த மக்காவின் ஏராளமான பெயர்களில் ஒரு பெயர் தான் திஹாமா.
சுற்றுப்புறங்களிலிருந்து மக்காவின் காலநிலை சற்று வேறுபட்டு நிற்பதால் இப்படியொரு பெயர் வைக்கப்பட்டது.
அதிசக்தி வாய்ந்த காற்றும், வெப்பமும் உள்ள பிரதேசங்களுக்கு இப்படி சொல்வதுண்டு.
சுருக்கமாக மக்காவைச் சேர்த்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்களைப் பற்றி திஹாமிய்யி என்று அழைக்கப்படுகிறது..
27 : அஸ்ஸிமால் ﷺ
உதவியாளர், அபயம் அளிப்பவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
திருநபியின் தன்னலமற்ற உதவியை சுட்டிக் காட்டுகிறது அஸ்ஸிமால் என்ற பெயர்.
28 : அல் ஜவ்வாது ﷺ
அதிகமாக தர்மம் வழங்கும் நபர் என்பதுதான் இந்த பெயரின் பொருள்.
தர்மத்தை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்..
1 ஸகாஃ..
பொருளாதாரத்தில் பகுதியை தர்மம் செய்வதற்கும், பகுதியை சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தான் ஸகாஃ என்று சொல்வார்கள்..
2 : ஜுத்...
பொருளாதாரம் அனைத்தையும் தர்மத்திற்க்காக செலவு செய்வதற்கு ஜுத் என்று சொல்வார்கள்..
3 : ஈஸார்...
கையிலுள்ளவை எல்லாம் தர்மம் செய்வதற்கு தான் ஈஸார் என்று சொல்வார்கள்..
29 அல் ஹாமி. ﷺ
காவல்காரன் என்பதுதான் இதன் அர்த்தம்.
சமூகத்தை நெருக்கடிகளிலிருந்தும்,
கஷ்டங்களிலிருந்தும் காவல் வழங்குவதால் இப்பெயர் நாயகத்திற்கு வழங்கப்பட்டது.
30 :
அல் ஹிஜாஸிய்யி. ﷺ
மக்காவிற்கு ஹிஜாஸ் என்ற பெயர் உண்டு.
மேற்கண்ட மக்காவை சேர்த்து நபி ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்களைப் பற்றி ஹிஜாஸிய்யி என்ற பெயர் சொல்வதுண்டு.
31 : அல் ஹரீஷ்.. ﷺ
பேராசை உடையவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
உலகிலுள்ள அனைவரும் நேர்வழி பெற வேண்டும்.
அவர்கள் அனைவரும் எப்போதும் நன்மைகள் புரிபவர்களாக இருக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்கள் ஆசைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆசைதான் அல் ஹரீஷ் என்ற பெயர் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
இந்த பெயர் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது..
32 : அல் ஹலீம் ﷺ
மிகவும் கூடுதல் பொறுமையுடையவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
தவ்ராத்தில் நாயகத்தைப் பற்றி இந்த பெயர் சொல்லப்பட்டுள்ளது.
நாயகம் ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்கள் மார்க்க பிரச்சார வழியில் ஏராளமான கஷ்டங்கள் அனுபவித்துள்ளார்கள்.
அவர்கள் மீது அநீதிகளும், நெருக்கடிகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் அவர்கள் பொறுமையை கையாண்டார்கள்.
33 : தாருல் ஹிக்மா.ﷺ
தத்துவ ஞானங்களின் வீடு என்பது தான் இந்த பெயரின் அர்த்தம். நாயகத்தின் அறிவு விசாலமானதாகும்.
முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் அறிவு தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
நான் தாருல் ஹிக்மாவாகும்.
34 : முஜ்தபா...ﷺ
முஸ்தஃபாவின் அர்த்தம் தான் முஜ்தபாவிற்கும்
திருநபியின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எண்ணிலடங்கா மேன்மைகளை
குறிப்பது தான் அவர்களது பெயர்கள் அனைத்தும்..
35: முஸ்தஃபா ﷺ
தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பம், பரம்பரை, குலம் என அனைத்தும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தேர்ந்தெடுக்கப்பட்ட
துமாகும்.
36 : அஸ்ஸஃப்வத் ﷺ
தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.
எல்லா மனிதர்களிலிருந்தும்,
தூதர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
37 : ஸாஹிபு லிவாஃ ﷺ
கொடி சுமப்பவர் என்பது தான் இதன் அர்த்தம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமையில் வைத்து லிவாஉல் ஹம்து என்ற கொடியை சுமப்பார்கள் என்பதை இப்பெயர் சுட்டிக் காட்டுகிறது..
38 : ஸாஹிபுல் கவ்ஸர் ﷺ
கவ்ஸரின் உடைமையாளர்.
சுவனத்தில் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்படும் அருட்கொடை தான்
ஹவ்ளுல் கவ்ஸர்.
திருகுர்ஆன் இந்த அருட்கொடை பற்றி சொல்லியுள்ளது
39 : ஸாஹிபுல் முஃஜிஸத் ﷺ
பேரதிசயங்களை நிகழ்த்தி காட்டிய நபர் என்பதுதான் இதன் அர்த்தம்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏராளமான முஃஜிஸத்துக்களை நிகழ்த்தி
காட்டியுள்ளார்கள்.
மறுமை நாள் வரை நிலைத்து நிற்கும் அவர்களது ஒரு முஃஜிஸத்துதான் அருள்மறை குர்ஆன்.
மேற்கூறிய முஃஜிஸத்துக்களை எல்லாம் குறிக்கும் பெயர் தான் இது..
40 : அஷ்ஷம்ஸு. ﷺ
ஷம்ஸ் என்றால் சூரியன் என்பது பொருள்.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்துச் சொல்லும் இஸ்லாம் சூரிய ஒளியை போன்று வெளிப்படையாக இருப்பதால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது..
41 : அஷ்ஷாக்கிர். ﷺ
நன்றி செலுத்தும் நபர் என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்.
நன்றி செலுத்துதல் மூன்று விதமாகும்.
நாவு கொண்டுள்ள நன்றி
உறுப்புக்களைக்
கொண்டுள்ள நன்றி
இதயத்தை கொண்டுள்ள நன்றி..
42 :அஷ்ஷக்கார். ﷺ
ஷாக்கிர் என்ற சொல்லின் உருமாற்றம் தான் ஷக்கார்.
அதிகமாக நன்றி செலுத்துபவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
யா அல்லாஹ் உனக்கு அதிகமாக நன்றி செலுத்தும் நபர்களில் என்னை இணைத்து விடு.
43 :அஷ்ஷுக்கூர் ﷺ
இது நாயகத்தின் மற்றொரு பெயராகும்.
ஏராளமாக நன்றி செலுத்துபவர் என்பதுதான் இதன் அர்த்தம்.
ஹதீஸ்களில் இந்த பெயர் வந்துள்ளது.
செழிப்பான காலகட்டத்தில் நன்றி செலுத்துபவருக்கு ஷாக்கிர் என்றும் நெருக்கடி காலங்களில் நன்றி செலுத்துபவருக்கு ஷக்கூர் என்றும் சொல்லப்படுகிறது என்று சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றர்
44 : அஷ்ஷிஃபாஃ ﷺ
நோய் நிவாரணம் என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்.
திருநபியின் அருளைக் கொண்டு நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டது.
46 : ஸெய்யிதுந்நாஸ் ﷺ
மக்களின் தலைவர் என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்.
இந்த பெயர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் பார்க்க முடியும்.
உலக மக்களின் தலைவர் இரு உலகிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
47 : அஸ்ஸாஹிர். ﷺ
லெங்குகிற வட்ட முகமுடைய நபருக்கு தான் ஸாஹிர் என்று சொல்லப்படுகிறது.
இந்த பெயர் திருநபியின் அழகை வெளிக்காட்டுகிறது.
அல்லாஹ் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இவ்வாறு சொன்னான்..
ஓ மூஸா நிச்சயமாக.. முஹம்மது ஸாஹிராகும்.
48 : ரஃபிஉத்தரஜா ﷺ
ஏராளமான பதவிகள் உயர்ந்த நபர் என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இரு உலகிலும் ஏராளமான பதவிகள் வழங்கியுள்ளான்.
ஷஃபாஅத்,வஸீலா, ஃபளீலா கவ்ஸர், லிவாஉல் ஹம்து போன்றவையெல்லாம் அவற்றில் சிலவாகும்.
முதன் முதலாக கப்றிலிருந்து வெளிவருவதும்,முதலில் சுவனத்தில் நுழைவதும் சுவனத்தின் திறப்பு விழா நடத்துவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்..
49 : தஃவத்து இப்ராஹிம். ﷺ
இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் கஃபாவை புனரமைப்பு செய்த பின்னர் திருநபியின் வருகைக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்த காரியத்தை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
அந்த பிரார்த்தனையை நினைவூட்டுவதுதான் இந்த பெயர்.
இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையின்
பலன் என்பதுதான் இந்த பெயரின் அர்த்தம்.
இந்த பெயரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சொல்லியுள்ளார்கள்.
50 : துஸ்ஸக்கீனா ﷺ
அமைதியான ஒழுக்கமுள்ளவர் என்பதுதான் இந்த ஹதீஸின் அர்த்தம்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து வகையான செயல்களும் மிக ஒழுக்கம் உடையதாக இருந்தது..
தமிழில் :M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்:மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்.
தமிழ்நாடு...