Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#உத்தம_உம்மத்...
(உத்தம சமூகம்.)

உலகில் கழிந்து சென்ற சமூகங்களில் மிகவும் உத்தம சமூகத்தினர் மாநபியின் சமூகமாகிய நாமாகும்.

குர்ஆன் வசனத்தை கவனித்துப் பாருங்கள்..

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.

பஹ்ஸ் இப்னு ஹாக்கிம் ரலியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து அறிவிப்பு செய்கிறார்கள்.

எழுபது சமுதாயங்களின் பூர்த்தி கரணம் உங்களிலாகும்.
அவர்களில் மிகவும் உத்தமரும்,அல்லாஹ்வின் திருச்சபையில் மிகவும் கண்ணியம் வாய்ந்தவரும் நீங்களாகும்..

நமது சமுதாயத்தின் உயர்வை இப்படி பல நபிமொழிகளில் வாசிக்கலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்திற்கு மற்றவர்களை சிறப்பு கிடைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அவற்றில் சில காரணங்களை இந்த நூலில் நாம் வாசிக்கலாம்..

நமது சமுதாயத்தின் மகத்துவங்கள் மறுமையில்...
____________________________

நமக்கு அல்லாஹ் மறுமை வாழ்க்கையில் வழங்க இருக்கும் சில மகத்துவங்களை கவனியுங்கள்..

1 : உளூவின் உறுப்புக்கள் இலங்கக்கூடிய நிலையில் வருவார்கள்..

2 : முகத்தில் ஸுஜுதுடைய அடையாளங்கள் இருக்கும்..

3 : மஹ்ஷரில் உயர்ந்த இடத்தில் நிறுத்தப் படுவார்கள்.

4 : ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் மின்னல் வேகத்திலும், மற்றும் காற்றின் வேகத்திலும் பயணிப்பார்கள்.

5 : சுவனத்தில் முதலாவது நுழையும் சமூகத்தினராக இருப்பர்..

6 :முந்தைய நபிமார்களுக்கு சாட்சியளாராக இருப்பர்..

7 : மறுமையில் பாலத்தை கடக்கும் முதல் கூட்டத்தினரும் நாயகத்தின் சமுதாயமாக இருப்பர்..

8 : குறைந்த அமலுக்கு கூடுதலான கூலி வழங்கப்படும் சமூகம்..

9 : சுவனத்தில் அதிகமானவர்களாக இருக்கும் சமூகம்..

10 :நம் சமூகத்தைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் எவ்வித விசாரணையில்லாமல் சுவனத்தில் நுழைவர்.

11 : சுவனவாசிகள் 120_வரிசையில் நிற்பார்கள்.
அவற்றில் என்பது வரிசைகள் நமது சமுதாயத்தின் வரிசைகளாகும்.
பாக்கி நாற்பது வரிசைகளில் மற்றவர்கள் நிற்பார்கள்.

12 : மஹ்ஷரில் வைத்து ஸுஜுத் செய்ய அனுமதி வழங்கப்படுவது நமக்கு மட்டுமே

13 : நம்மில் நன்மைகள் புரிந்தவர்களுக்கு பாவங்கள் செய்தவர்களுக்காக பரிந்துரை செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

14 : கப்றில் நுழையும் போது பாவியாக இருந்தாலும் மற்றவர்களுடைய ஷஃபாஅத்தின் புனர்ஜன்ம வேளையில் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் எழுப்பப்படுவார்...

நமது மகத்துவங்கள் இம்மை உலகில்...
____________________________

1 : கனீமத்_ போரில் கிடைத்த பொருட்கள் ஹலாலக்கப்பட்டுள்ளமை..

2 : தயம்மம் அனுமதிக்கப்பட்டது..

3 : உளூஃ சட்டமாக்கப்பட்டது.

4 : நஜஸுகளை தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

5 : கல்லைக் கொண்டு சுத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

6 : பாங்கு சட்டமாக்கப்பட்டது.

7 : இகாமத் சுன்னத்தாக்கப்பட்டது.

8 : தொழுகை தக்பீரத்துல் இஹ்ராம் கொண்டு துவங்க வேண்டும் என்ற நியமம் நமக்கு மட்டுமுள்ளதாகும்..

9 : இஃதிதாலிலுள்ள திக்ருகள் சுன்னத்தாக்கப்பட்டது.

10 : தொழுகையில் மலக்குமார்களின் ஸஃப் (வரிசை) போன்ற வரிசை வேண்டுமென்ற கட்டளை நமக்கு மட்டுமுள்ளதாகும்..

11 : ஆமீன் நடைமுறையில் கொண்டு வரப்பட்டது..

12 : வெள்ளிக்கிழமை பெருநாள் தினமாக்கப்பட்டது...

13 : ஜமாஅத் தொழுகை சுன்னத்தாக்கப்பட்டது..

14 : வெள்ளிக்கிழமை பிரத்தியேகம் இஜாபத் கிடைக்கும் நேரம் வழங்கப்பட்டது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே..

15 : ஜும்ஆ தொழுகை கடமையாக்கப்பட்டது

16 : தஹஜ்ஜுத் தொழுகை சுன்னத்தாக்கப்பட்டது.

17 : இரண்டு பெருநாள் தொழுகை சுன்னத்தாக்கப்பட்டது.

18 : கிரகண தொழுகை நமக்கு மட்டும் வழங்கப்பட்டதாகும்

19 : மழை வேண்டி தொழுகை நமது சிறப்பாகும்.

20 : பயணத்தில் ரக்அத்களின் எண்ணிக்கை சுருக்கி தொழுவதற்க்கான அனுமதி வழங்கப்பட்டது.

21 : பயண வேளையில் ஜம்ஆக்கி தொழுவதற்க்கான சலுகை நமக்கு மட்டுமுள்ளதாகும்.

22 : பயந்து ஓடுபவனின் தொழுகை கற்றுத் தரப்பட்டது.

23 : ரமளானில் இரவு முதல் ஸுப்ஹு வரை உணவு பானியங்கள் பயன்படுத்தலாம் எனும் சலுகை வழங்கப்பட்டது

24 : நோன்பாளியின் வாய்க்கு அல்லாஹ்வின் சந்நிதியில் கஸ்தூரியை விட அதிக வாசனை உண்டு எனும் சிறப்பு பெற்ற சமுதாயம்.

25 : ரமளானில் கடைசி இரவில் ஏராளமான மக்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படும் சிறப்பு பெற்ற சமுதாயம்..

26 : ஸஹ்ர் உணவு சுன்னத்தாக்கப்பட்டது..

27 : பாங்கு சொல்லப்பட்டால் உடனே நோன்பு திறக்க வேண்டுமென்று சுன்னத்தாக்கப்பட்டது.

28 : நோன்பு நோற்றவர்களுக்கு பேச்சு அனுமதிக்கப்பட்டது.

29 : நமது பூர்வ சமுதாயக்காரர்களுக்கு நோன்பு பிடித்தால் பேசக்கூடாது என்ற சட்டம் இருந்தது.
அது நமக்கு ரத்து செய்யப்பட்டது.

30 : லைலத்துல் கத்ர் இரவு வழங்கப்பட்டது..

31 : உணவு உண்ணும் முன் கை கழுவது சுன்னத்தாக்கப்பட்டது.

32 : விபத்துகள் நிகழும் போது இன்னாலில்லாஹி என்ற திக்ர் சுன்னத்தாக்கப்பட்டது.

33 : லா ஹவ்ல என்ற திக்ர் சுன்னத்தாக்கப்பட்டது.

34 : முடி சீவிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது

35 : நரை முடியை மைலாஞ்சி கொண்டும் மற்றும் சிவக்கச் செய்தல் நமக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும்.

36 : ஆண்
குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அகீகா அறுத்து கொடுப்பது சுன்னத்தாக்கப்பட்டது.
பூர்வ காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே அகீகா அனுமதி அளிக்கப்பட்டது.

37 : மஃரிப் தொழுகை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்ற கட்டளையிடப்பட்டது.

38 : முஹர்ரம் பத்தாம் நோன்புடன் ஒன்பதாம் நோன்பையும் சேர்த்து பிடிக்க கட்டளையிடப்பட்டது.

39 : ஸுஜுத் செய்யும் போது நெற்றித்தடத்தை தரையில் பதிக்க செய்தலை பர்ளாக்கப்பட்டது.
பூர்வகாரர்கள் தங்களது தலையின் ஓரங்களை கொண்டு மட்டுமே ஸுஜுத் செய்து இருந்தனர்.

40 : தொழுகையில் கண் சிமிட்டுவது கராஹத் ஆக்கப்பட்டது..

41 : தொழுகைக்கு பின்னர் துஆவுக்காக நிற்பது கராஹத் ஆக்கப்பட்டது..

42 : சிறிய பெருநாளில் தொழுகைக்கு முன்பு உணவு சாப்பிடுவது சுன்னத்தாக்கப்பட்டது.
பூர்வ வேதக்காரர்கள் தொழுகைக்கு பிறகே தங்களது பெருநாட்களில் உணவு சாப்பிட்டு இருந்தார்கள்.

43 : காலணி அணிந்து தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

44 : பரஸ்பர ஆண்கள் கூடிக்கலருதல் இல்லாத வேளையில் ஜும்ஆ ஜமாஅத்துகளுக்கு பெண்களுக்கு பள்ளியில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது..

45 : தலைப்பாகைக்கு வால் வைப்பது சுன்னத்தாக்கப்பட்டது.

46 : ஒட்டக இறைச்சி சாப்பிட அனுமதிக்கப்பட்டது.

47 : மறதி மூலம் நிகழும் பாவங்களுக்கு தண்டனை இல்லாமல் ஆக்கப்பட்டது..

48 : பாவம் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்தால் அதொரு நன்மையாக எழுதப்படுகிறது..

49 : நன்மை செய்ய எண்ணி தக்கதான காரணத்தால் அதை செய்யாமல் இருக்கும் போது அதை நன்மை செய்ததாக எழுதப்படும்..

50 : பிரம்மச்சரியம் கடைபிடிப்பது தடுக்கப்பட்டது...

51 : வெள்ளிக்கிழமை ஜும்ஆ பாழாகாத விதத்தில் வேலை செல்வது பிரச்சினை இல்லை என சலுகை வழங்கப்பட்டது.

52 : வுளூஃ இல்லாமல் சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பூர்வ காலங்களில் சாப்பிடுவதற்கு முன் வுளூஃ செய்ய வேண்டும்.

53 : மனைவிமார்கள் நான்கில் ஒதுக்கப்பட்டது

54 : தலாக் மூன்றாக்கப்பட்டது.

55 : அடிமைப் பெண்ணை திருமணம் முடித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

56 : மாதவிடாய் பெண்ணுடன் உடலுறவு தவிரயுள்ள அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்...
யூதர்களில் ஒரு பெண்மணிக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவளுடன் அவளது கணவன் சாப்பிட முடியாது. மேலும், அவளுடன் ஒரே கூரைக்குக் கீழ் வாழவோ முடியாது..
ஆனால் கிறித்தவர்கள் மாதவிடாய் பெண்ணுடன் உடலுறவு போன்றவற்றில் ஈடுப்பட்டனர்.
இந்த இரண்டு ரீதிகளும் சரியல்ல என்பதால் இஸ்லாம் மத்திய நிலைப்பாட்டை எடுத்தது.

57 : ஜனாஸாக்களின் அருகில் அட்டகசித்து சத்தமிடுதல் தடுக்கப்பட்டது.

58 : உயிருள்ள வஸ்துக்களின் உருவங்கள் உருவாக்குவது தடுக்கப்பட்டது.

59 : இசைக்கருவிகள் தடை செய்யப்பட்டது.

60 : போதைப் பொருட்கள் ஹராமாக்கப்பட்டது.

61 : சகோதரியை திருமணம் முடித்தல் ஹராமாக்கப்பட்டது.

62 : தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் பயன்படுத்துவது ஹராமாக்கப்பட்டது.

63 : ஆண்களுக்கு தங்க ஆபரணங்கள் அணிவது ஹராமாக்கப்பட்டது.

64 : அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் ஸுஜூது செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
பூர்வகாலத்தில் முகமன் அனைத்தும் ஸுஜூதிலாக இருந்தது.
அவர்களது ஸஜுதுக்கு பகரமாக நமக்கு ஸலாம் சுன்னத் தாக்கப்பட்டது.

65 : பிளேக் நோய்
அல்லாஹ்வின் சன்னதியில் சாட்சி சொல்ல தாக்கப்பட்டது

66 : பாவங்கள் மன்னிக்கப்பட வுளூஃ ஒரு காரணமாக்கப்பட்டது

67 :பல காரியங்களுக்கும் மறுமையில் கூலி வழங்கப்படுவது போன்று துன்யாவிலும் கூலி வழங்கப்படுகிறது.

68 : நற்காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது.

69 : மலக்குமார்களின் பிரார்த்தனை வழங்கப்படுகிறது.

70 : பாவங்கள் செய்தால் வீட்டு வாசலில் எழுதி வைக்கப்பட மாட்டாது

71 : பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இராப்பொழுதில் ஒரு பாவத்தில் ஈடுபட்டால் அவர் காலைப் பொழுதை அடையும் போது அவரது வீட்டின் கதவில் அவர் செய்த குற்றமும் அதற்கான பரிகாரமும் எழுதப்பட்டிருக்கும்.

72 : செயல்பாடுகளும், ஆயுளும் குறைவாக இருந்தாலும் கூலி மற்ற சமுதாயத்தைவிட கூடுதலாக இருக்கும்.

73 : முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் அறிவு வழங்கப்படும்.

74 : பூர்வீக மக்களுக்கு வழங்கப்படாத மனனம் சக்தி இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

75 : அவ்லியாக்களில் குத்பு பதவி வழங்கப்பட்டுள்ளது.

76 : இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் தான் தஜ்ஜாலை கொலை செய்வார்கள்.

77: பனூ இஸ்ராயிலிலுள்ள நபிமார்களைப் போலத்தான் இந்த சமுதாயத்திலே உலமாக்கள்.
அதாவது ஒரு அறிஞர் மரணிக்கும் போது அவருடைய ஸ்தானத்தில் மற்றொருவர் வருகிறார்

78 : நம்முடைய பாங்கையும், தல்பியாவையும் மலக்குகள் கவனிக்கிறார்கள்.

79 : நாம் சந்தோஷ வேளைகளிலும் துக்க வேளையிலும்
அல்லாஹ்வை புகழ்பவர்களாகும்.

80 : இன்ஷா அல்லாஹ் என்று
வழங்கப் பட்டது நமக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும்..

81 : வாகனத்தில் ஏறும் போது ஹம்து சுன்னத் தாக்கப்பட்டது..

82 : வேதத்தை (குர்ஆனை) மனனம் செய்பவர்களாகும்.
பூர்வ காலங்களில் அவர்களுடைய வேதங்கள் நூற்கள் மனப்பாடம் செய்யும் சம்பிரதாயம் இருக்கவில்லை.

83 : அனைத்து விஷயங்களில் மத்திய நிலைப்பாடு எடுப்பவர்கள் நாம்..

84 : நமது போர்களில் வானவர்கள் இறங்குகிறார்கள்.
முன் கால
போர்களில் மலக்குகளை இறக்கி அல்லாஹ் உதவி செய்வதில்லை என்பதை குர்ஆன் நமக்கு கூறுகிறது..

85 : ஓ நம்பிக்கையாளர்களே என்று குர்ஆனில் அழைக்கப்படுகிறது.
பூர்வ வேதங்களில் ஓ பாவிகளே என்று அழைக்கப்பட்டது..

86 : அஹ்லுல் கிப்லா என்ற பெயர் வைக்கப்பட்டது.

87 : இந்த சமுதாயத்தில் உள்ள ஒருவர் மரணித்த போது தான் அர்ஷ் நடுங்கியது...

88 : இந்த சமுதாயத்தில் உள்ள ஒருவர் மரணித்த போது தான் எழுபதாயிரம் வானவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள்.

89 : பூர்வகால காரர்களுக்கு வழங்கப்படாத பாதுகாப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்

90 :போர்முனையில் போர் செய்யாத மரணமடைந்த பலருக்கும் தியாகிகளின்
பிரதிபலனை வழங்குகிறான்..

91 : மிகவும் கூடுதல் அறிவுள்ள அறிஞர்கள் இந்த சமுதாயத்தில் உள்ளவர்களாகும்.

92 : இந்த சமுதாயத்தில் சில கருத்து வேறுபாடுகள் அல்லாஹ் வழங்கிய கருணையாகும்.

93 : ஆண்களுக்கு பட்டாடை ஹராமாக்கப்பட்டது..

94 : கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கு கொலை செய்தவரை கொல்ல அல்லது தெண்டப்பரிகாரம் பெற்றுக் கொள்ள தெரிவுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை.
ஆனால்பனூ இஸ்ரவேலர்களுக்கு கொலைக்குத் தண்டனையாக கொலை மாத்திரமே விதியாக்கப்பட்டிருந்தது.

95 : குஃப்பாவின் மீது தடவுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

96 : இந்த சமுதாயத்தில் ஒரு நபர் நன்மை செய்தால் இரண்டு நபர்கள் அவருக்கு சாட்சி நின்றால் அவருக்கு சுவனம் கிடைக்கும்.
ஆனால் பூர்வகாலத்தில் நூறு பேரை சாட்சி நிறுத்த வேண்டிய நிலைமை இருந்தது..

97 : வித்ர் தொழுகை நமக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும்

98 : ரமளான் மாதம் நோன்பு வழங்கப்பட்டது.

99 : நோன்பு திறக்கும் வரை வானவர்களின் இஸ்திக்ஃபார் கிடைக்கிறது.

100 :மாபெரும் முஃஜிஸத்தான குர்ஆன் நமக்கு வழங்கப்பட்டது..

இது தவிர்த்து இன்னும் ஏராளமான சிறப்புகள் அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு வழங்கியுள்ளான்.
வல்லோன் அல்லாஹ் நாயகத்துடன் சுவனம் செல்லும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கு வழங்கியருள்வானாக..

தமிழில்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....