அல்லாஹ் ஒருவருக்கு புகழை கொடுக்க விரும்பினால்

அல்லாஹ் ஒருவருக்கு புகழை கொடுக்க விரும்பினால்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாஹ்_ஒருவருக்கு_புகழை
கொடுக்க_விரும்பினால்.

ஸைத்தூன் அகாடமியில்
AP.உஸ்தாத் அவர்களின் சுயசரிதை பாடத்திட்டத்தில் இடம் பெற உள்ளது.
மாணவர்களில் சேவை மனப்பான்மையையும், அர்ப்பணிப்பையும்,
தியாக உணர்வையும்
வளர்க்கும் நோக்கில் அகாதமி நிர்வாகிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம் |
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸைத்தூன் அகாடமியின் மேல்நிலை மற்றும் இளங்கலைப் படிப்புப் பாடத்திட்டத்தில் காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் சுயசரிதை நூலான
#நம்பிக்கைபூர்வம் இடம்பெறும்.

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூவிற்குப் பிறகு மார்க்க கல்வியுடன் சிவில் சர்வீஸ் சார்ந்த கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம் தான் ஸைத்தூன் அகாடமி.

திருவனந்தபுரத்தில் உள்ள சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்களில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு
AP உஸ்தாத் முன்னுதாரணமாகவும், இத்தகைய மாமனிதர்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மாணவர்களிடையே பெரும் சலனத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் பாடத்திட்டத்தில் உஸ்தாத் அவர்களின் சுயசரிதை நூலை இடம் பெற செய்தோம் என்று ஸைத்தூன் அகாடமி பொதுச் செயலாளர் சைபுதீன் ஹாஜி, இயக்குநர் சித்தீக் ஸகாஃபிஆகியோர் தெரிவித்தனர்.

சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வது, நூலில் குறிப்பிடப்பட்ட நபர்களை சந்திப்பது
மற்றும் மவ்த்தான மகான்களின் தர்காக்களை பார்வையிடுவது ஆகியவை பாடநெறி திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஸைத்தூன் அகாடமியின் வகுப்புகள் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கும்.

பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 17ம் தேதி அரசுப் பணிக்கான தீவிரப் பயிற்சி தொடங்கும்.