Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பிரமிக்க_வைக்கும்_உஸ்தாத் அவர்களின்_சேவைகள்...

#சவூதி_அரேபியா சிறையில் சிக்கி
தவித்த இந்தியருக்கு 33_லட்சம்
ரூபாய் நஷ்டஈடு வழங்கி விடுதலை
செய்த ICF....

வெளிநாடு வாழ் இந்தியர்களின் புகலிடம் ICF👌😍

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வசிக்கும் #சிராஜ்_புதுப்பாடி சிறையிலிருந்து விடுதலையாகி இன்று வீடு திரும்புகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு #தாயிஃபில் கார் ஓட்டுனராக பணிபுரியும் போது ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் தான் சிராஜின் வாழ்க்கை தாறுமாறாகியது..

அந்த பயங்கர விபத்தில் சவூதி அரேபியாவை பூர்வீகமாக் கொண்ட இருவர் இறந்தனர்..

இந்நிலையில் சிராஜ் சவூதி அரேபியா #சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்..

சிறையிலிருந்து விடுதலையாக வேண்டுமெனில் நஷ்டஈடாக (தியா) சுமார் ரூ.75 லட்சம் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டுமென சவூதி அரேபியா நீதிமன்றம் உத்தரவிட்டது..

புற்றுநோய் பாதித்த தந்தையும், தாயும் மனைவியும் ஒரு சின்ன குழந்தையும் வசிக்கக்கூடிய வீட்டை விற்பனை செய்தாலும் கூட இவ்வளவு தொகையை அவரால் எப்படி திரட்ட முடியும்...

பணம் திரட்ட இயலாமல் சிறையில் தவித்த சிராஜின் குடும்பத்தினர் கேரள முஸ்லிம் ஜமாத் தலைவர் இந்தியன் கிராண்ட் முஃப்தி A. P. #அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத் அவர்களை அணுகினார்கள்...

சவூதி அரேபியாவிலுள்ள ஐ.சி.எஃப் நிர்வாகிகளுக்கு உஸ்தாத் அவர்களின் தகவல் கிடைத்தது.

75_ லட்சம் ரூபாயை குறைப்பதற்கு பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்தது...

கடைசியில் 33_ லட்சம் ரூபாய் வழங்க சவூதி அரேபியா நீதிமன்றம் உத்தரவிட்டது..

இறுதியில் I. C. F.யின் கடுமையான முயற்சியால் 33_ லட்சம் ரூபாய்
சேகரித்து நஷ்டஈடு வழங்கப்பட்டது...

அவர் விடுதலையாகும் வரை ஏற்பட்ட எல்லாவித சட்டச் சிக்கல்களை தீர்க்க I.C.F அயராது பாடுபட்டார்கள்...

I. C. F. நிர்வாகிகளின் எல்லையற்ற ஒத்துழைப்பு மறக்க முடியாதது.

அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான நற்கூலிகளை வழங்குவானாக.

நன்றி
I.C.F சவூதி அரேபியா தேசிய குழு..

தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி