உலகின் செல்வாக்கு படைத்த 500 அறிஞர்களில் ஒருவர்
மஃதின் அகாதமி

உலகின் செல்வாக்கு படைத்த 500 அறிஞர்களில் ஒருவர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#உலகின்_செல்வாக்கு_படைத்த
500_ அறிஞர்களில் இந்தியாவைச் சேர்ந்தவரும்
இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்..

🔸 தொடர்ச்சியாக
இந்த ஆண்டும் (2026)
உலகின் செல்வாக்கு படைத்த
500_ முஸ்லிம் திறனாளிகள் பட்டியலில்
கேரளாவைச் சேர்ந்த அறிஞரும் இடம் பெற்றுள்ளார்...

சமஸ்த கேரள உலமா சபை செயலாளர்,
கேரள முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் மற்றும் மலப்புரம் மஃதின் அகாடமியின் தலைவர் ஸெய்யித் இப்ராஹிம்
கலீல் அல் புகாரி தங்கள் அவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் ❤️

ஸெய்யித் இப்ராஹிம் கலீல் அல் புகாரி🥰
--------–-----------------------------------–---------------------------
🔹பிப்ரவரி 22, 1964 அன்று கோழிக்கோட்டின் கடலுண்டியில் பிறந்தார்.

🔸 உலகின் செல்வாக்கு மிகுந்த 500_முஸ்லிம் திறமையாளர்களின் பட்டியலில் ஒருவர்.

🔹1986 ஆம் ஆண்டு பாக்கியத்தில் இரண்டாம் தரத்துடன்
மௌலவி ஆலிம் பட்டம் பெற்றார்.

சென்று சந்தித்த நாடுகள்...
--------–-----------------------------------–---------------------------
🔹ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரோம், வத்திக்கான், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, ஜோர்டான், ஈராக், ஏமன், சிரியா, எகிப்து, பாலஸ்தீனம், சீனா, பிஜி, தாய்லாந்து உள்ளிட்ட சுமார் ஐம்பது நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

#கலந்து_கொண்ட_நிகழ்வுகள்..

🔸ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் ஆண்டுதோறும் மலேசியாவில் நடைபெறும் சர்வதேச மத நல்லிணக்க மாநாட்டின் தலைமை விருந்தினராகவும்,
G20 மத நல்லிணக்க உச்சி மாநாட்டில் இந்தியாவிலிருந்து அறிஞர் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டுள்ளார்..

🔹ஏப்ரல் 2018 இல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைதியை உருவாக்குபவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான ஐக்கிய நாடுகளின் பிரச்சாரத்தில் இவர் இணைந்தார்.

🔸போப்பின் கட்டுப்பாட்டில் உள்ள
மத நல்லிணக்க உரையாடலுக்கான போண்டிஃபிகல் மையத்தின்
வத்திக்கான் தலைமையகத்தில்
மத நல்லிணக்க விவாத மன்றத்தில்
இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.

#தற்போது வகிக்கும்_பதவிகள்.
--------–-----------------------------------–---------------------------

🔹சிறுபான்மையினருக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் (I.A.M.E) புரவலர்
🔸1997 ஆம் ஆண்டு சலாத் நகர் மையமாக நிறுவப்பட்ட மஃதின் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைவர்.

🔸இந்திய இஸ்லாமிய கல்வி வாரியம்,
புது தில்லி (I.E.B.I)
ஆளும் குழு உறுப்பினர்.

🔹சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா முஷாவர உறுப்பினர்.

🔹கேரள முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர்

#இதுவரை பெற்ற விருதுகள்.
--------–-----------------------------------–---------------------------

🔸2012 சர்வமத நல்லிணக்க விருது.

🔹2014 இமாம் கஸ்ஸாலி விருது.

🔸2017 ஆம் ஆண்டு மொராக்கோவின் அகாதிர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.

தகவல்: M.சிராஜுத்தீன் அஹ்ஸனி...