அறிவுகளின் ஆழங்கள் தேடி ஒரு நீண்ட பயணம்
அறிவுகளின்_ஆழங்கள்_தேடி
ஒரு_நீண்ட_பயணம்..
அஸ்ஸெய்யித் ஹஸன் புகாரி
அல் பாகவி.
புகழ்பெற்ற கொன்னார் புகாரி ஸெய்யித்
(தங்கள்) குடும்பத்தின் உறுப்பினர்.
ஷெய்குனா பஹ்ருல் உலூம் உஸ்தாதுல் அஸாதீத் O.K உஸ்தாதின் அபிமான சீடர்.
வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் முதல் மதிப்பெண்ணுடன் பாகவி பட்டம் பெற்றவர்.
ஆங்கிலம், நவீன அரபி,உருது, ஹிந்தி, பார்ஸி, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் அசாதாரண நிபுணத்துவம் பெற்று விளங்குபவர்.
ஆன்மீக கல்வி, உலகக் கல்வி,
அதி நவீன தொழில் நுட்ப அறிவுகள் போன்ற எல்லா துறைகளிலும் தன் பொன்னான நேரங்களை செலவழித்து கொண்டிருக்கும் மஹா மனுஷி. இப்படி ஏராளமான சிறப்புகளை தன்வசம் வைத்து முத்தஅல்லிம்களை வெகுவாக ஈர்க்கும் நபர் தான் இஹ்யாஉஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியின் முக்கியமான பேராசிரியர் ஹஸன் பாகவி தங்கள் அவர்கள்.
உஸ்தாத் சொல்வார்கள்.
பஹ்ஸ் என்றால் சுரண்டி எடுப்பதாகும்.அதாவது
எல்லா கல்விகளையும் அதன் ஆழத்தில் சென்று ஆய்வு செய்து படிக்க வேண்டுமென அடிக்கடி கூறுவார்கள்.
உண்மையிலேயே அதுதான் உஸ்தாதின் வாழ்க்கையும்.
எல்லா விஷயத்தையும் ஆழமான கண்ணோட்டத்தில் அணுகுவது உஸ்தாத் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.
உஸ்தாத் அவர்களின் ஒவ்வொரு நொடியும் விஞ்ஞான தேடலின் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும்.ஓரு நிமிடம் கூட வீணாக்காமல் வாழ்க்கையின் எல்லா விஷயத்திலும் punctuality கடைபிடிப்பதுடன் பிறரையும் கடைபிடிக்க தூண்டுவார்கள்.
உஸ்தாத் இப்போது இஹ்யாஉஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியின் முக்கியமான பேராசிரியராக திகழ்வதுடன் வகுப்புகள் கழிந்தவுடன் முக்கியமான தேவைகளை தவிர்த்தால் எல்லா நேரங்களையும் கிதாப் எழுதுவதற்காக செலவழிக்கிறார்கள்.
இல்முஸ் ஸர்ஃபை முழுமையாக விளக்ககூடிய மகத்தான நூல்தான் "நஃபாயிஸுத்துறர்" இந்த நூலுக்கு பிறகு வெளியிட்ட "தஷ்வீக்குல் ஆனி" ஸஞ்சான் கிதாபிற்கு எழுதப்பட்ட மிக விரிவான அழகிய விளக்கவுரையாகும். இந்த கிதாப் எழுதுவதற்காக ஸஞ்சானுக்கு எழுதப்பட்ட பல்வேறு விதமான 13- க்கும் மேற்பட்ட பிரதிகளை பார்த்தேன் என்று இந்த கிதாபின் துவக்கத்தில் (முகவுரையில்) எழுதியுள்ளார்கள்.
ஒவ்வொரு கிதாபும் எழுதுவதற்கு பின்னால் உஸ்தாத் எவ்வளவு நேரங்களையும், கடினஉழைப்பையும் செலவழிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஊரடங்கு காலத்தில் தன் நேரங்களை கிதாப் எழுதுவதற்காக செலவழிக்க உஸ்தாத் அவர்கள் மறக்கவில்லை. அல்லாமா இப்னு ஹிஷாமின் "கத்றுன்னதாவுக்கும்" பொன்னானி ஷெய்க் உஸ்மான் என்பவரின் "ஐனுல் ஹுதாவுக்கும்" ஒரு அழகிய விரிவான விளக்கவுரை நூல் எழுதியுள்ளார்கள்
"ஜாமிஉன்னதா அலல் ஹுதா" என்று ரயீஸுல் உலமா
(E.ஸுலைமான் முஸ்லியார்) பெயர் வழங்கிய இந்நூல் வெகு விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
இந்நூல் மிகவும் பயன் தரக்கூடிய நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை வழங்கி அருள்புரிவானாக!
தகவல்:M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி