இரகசிய தர்மங்கள்

இரகசிய தர்மங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்
பிறை... 4

இரகசிய_தர்மங்கள்.......

كان علي بن الحسين زين العابدين يحمل الصدقات والطعام ليلاً على ظهره، ويوصل ذلك إلى بيوت الأرامل والفقراء في المدينة، ولا يعلمون من وضعها، وكان لا يستعين بخادم ولا عبد أو غيره .. لئلا يطلع عليه أحد .. وبقي كذلك سنوات طويلة، وما كان الفقراء والأرامل يعلمون كيف جاءهم هذا الطعام .. فلما مات وجدوا على ظهره آثاراً من السواد، فعلموا أن ذلك بسبب ما كان يحمله على ظهره ، فما انقطعت صدقة السر في المدينة حتى مات زين العابدين

ஹள்ரத் ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் தன் முதுகில் உணவுப் பொருட்களை சுமந்து கொண்டு கிளம்பி விடுவார்கள்.ஊரில் இருக்கிற ஏழைகள், அனாதைகளின் இல்லங்களில் அதை வைத்து விட்டு வந்து விடுவார்கள். செல்கிற பொழுது பணியாளர்களையோ அடிமை களையோ உதவிக்கு அழைத்துக் கொள்வதில்லை. காலையில் அந்தந்த வீடுகளில் உணவு மூட்டைகள் இருக்கும். ஆனால் வைத்தது யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இப்படியே பல காலங்களாக பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்களது முதுகிலே கருப்புத் தழும்புகள் தென்படுகிறது. அது என்னத் தழும்புகள் என்று மக்களுக்கு அப்போது புரிய வில்லை. ஆனால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அதுவரை வந்து கொண்டிருந்த ரகசியமான இரவு நேர உதவிகள் தடைபட்ட பொழுது தான், அவர்களின் அந்தத் தழும்புக்கான காரணம் புரிந்தது. அதுவரை இரவு நேரங்களில் தங்கள் வீடுகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சென்றது ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொண்டார்கள்.