ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 13
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_13....
#அல்லாஹ்வின்_மன்னிப்பு
#விசாலமானது.
அல்லாஹ் அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும் மறைத்து அவர்கள் மீது அருள் புரிகின்றான்.
عن أنس بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله يقول: قال الله تعالى
(يا ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى وَرَجَوتَنِى غَفَرتُ لَكَ عَلى مَا كَانَ مِنكَ وَلاَ أُبَالِى
يَا ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّماءِ ثُمَّ استَغفَرتَنِى غَفَرتُ لَكَ
يَا ابنَ آدَمَ إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “ஆதமுடைய மகனே!
நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்!
நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே!
நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,
நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே!
எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன்”.
( நூல்: திர்மிதீ )