Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பாலஸ்தீனிய_முஃப்தியிடம்_பேசிய இந்தியன்_கிராண்ட்_முஃப்தி.

தற்போதைய போர் நிலைமை
மற்றும் பாலஸ்தீனியர்களின் கவலைகள் குறித்து விசாரித்து, இந்திய மக்களின் ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளை வெளிப்படுத்தினார்.

காசா மீதான இஸ்ரேலிய ஊடுருவல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாலஸ்தீனிய முஃப்தி
அறிஞர் ஷேக் முஹம்மது ஹுசைனுடன் இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏ.பி.#அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்கள் பேசும் போது தற்போதைய போர் நிலைமை மற்றும் பாலஸ்தீனியர்களின் கவலை குறித்து விசாரித்து இந்திய மக்களின் ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பாலஸ்தீனியர்களின் கவலைகள் மற்றும் உரிமைகளை மிகக் கவனமாகப் புரிந்துகொண்டவர்கள் இந்தியர்கள் என்றும்
அதன் தொடர்ச்சியை உறுதி செய்யும் நிலைப்பாடுகளைத்தான் நாம் இந்திய சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று ஷேக் முகமது ஹுசைன் இந்தியன்
கிராண்ட் முஃப்தியுடன்
பகிர்ந்து கொண்டார்.

உலகின் பெரும் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்து வரும் இந்தியா, தற்போதைய மேற்கு ஆசியப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்ப்பதில் ராஜதந்திரப் பங்காற்ற முடியும் என்றும், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கிராண்ட் முஃப்தி தலையிட வேண்டும் என்றும் முஃப்தி ஷேக் ஹுசைன் கூறினார்...

பாலஸ்தீனம் தங்கள் நாடு என்றும்,
இந்த நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் என்றும் கூறிய ஷேக் முஹம்மது ஹுசைன்
இந்திய மக்களின் ஆதரவையும் பிரார்த்தனையையும் கோரினார்.

அகில இந்திய ஜமியத்துல் உலமாவின் அனுசரணையில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் ஒற்றுமை பேரணிகள் குறித்து இந்தியன் கிராண்ட் முஃப்தி பாலஸ்தீன முஃப்தியிடம் நினைவூட்டினார்.

இந்திய அரசின் உடனடி நடவடிக்கைக்காகத் தான் தீவிரமாகத் தலையிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் பாலஸ்தீன முஃப்தியிடம் கூறினார்...

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி

https://m.facebook.com/story.php?story_fbid=715698627271292&id=100064934820717&mibextid=Nif5oz