ஹஜருல் அஸ்வதை தினமும் தொடும் பாக்கியசாலி
#ஹஜருல்_அஸ்வதை_தினமும்_தொடும் #பாக்கியசாலி*
மக்காவையும் மதீனாவையும் ஒன்று பார்க்க வேண்டும் என்பது எந்த விசுவாசியின் விருப்பமும் கனவும் ஆகும்.
மக்காவை சென்றடைந்தும் தவாஃப் பல முறை நிகழ்த்திய பிறகும் ஹஜருல் அஸ்வத்தை தொட முடியாதவர்கள் எத்தனையோ பேர் நம்மில் இருக்கிறார்கள்.
ஆனால் கேரள மாநிலம் காசர்கோடைச் சேர்ந்த #ஹனிஃபா மிகவும் அதிர்ஷ்டசாலி.
ஹஜருல் அஸ்வத்தை தினமும் துடைக்கும் நற்பாக்கியத்தை
அல்லாஹ் அவருக்கு கொடுத்தான்.
பச்சை நிற சட்டை அணிந்து பலதடவை மகாம் இப்ராஹிமைத் தொட்டு, ஸஃபா_மர்வா குன்று ஏறி
மத்தாஃப் வழியாக நடந்து ஸம்ஸம் தண்ணீரை ஒழுங்குபடுத்தி வைத்து
ஒரு நாளில் நிறைவான மன மகிழ்ச்சி அடைகிறார்.
ஒரு 'அரஃபா நாளில் பிறந்த ஹனீஃபா கடந்த 24 ஆண்டுகளாக மக்காவில் பணிபுரிந்து வருகிறார்.
இறந்தவர்களை மக்காவில் அடக்கம் செய்வதில் ஹனிபா முன் களத்தில் இருக்கிறார்..
இங்கு வரும் அனைவருக்கும் வழிகாட்டியாகவும் நண்பராகவும் மாறிடுவார்.
நோன்பு வைத்து ஸுஜூத் செய்த நிலையில் மட்டுமே ஹனீஃபா
மரணிக்க விரும்புகிறார்.
அரேபியாவில் வந்து செல்வத்தை குவித்துள்ள பல இந்திய உள்ளனர்.
ஆனால் ஹனீஃபா போன்ற இத்தகைய அதிர்ஷ்டசாலிகள் ரொம்பவும் அரிதானவர்களே!....