ஹிஜாப் தடை
*.....#ஹிஜாப்_தடை...*
ஃபாஸிஸ்ட்டுகளின் சில ஹிடன் அஜண்டாக்கள்...
*✍️Adv.#Muhammad_shamveel_Nurani...*
நான் பார்த்த கன்னி மரியாவின் எல்லா புகைப்படத்திலும் அவர் தலையை மூடுயிருப்பதை பார்க்க முடிந்தது..
கிருஷ்ணனின் தோளிலும் மடியிலும் காதல் பார்வை வீசும் ராதையின் புகைப்படங்களிலும் தலை மூடியிருப்பதை பார்க்கலாம்.
உலகப் புகழ் பெற்ற அன்னை தெரசா அழகிய வெண்ணிற ஆடையில் நீல நிற பார்டருடன் தலையை மூடிய நிலையில் காணப்படுவதை பார்க்க முடியும்.
வட இந்திய இந்து திருமணங்களில் பெண்கள் தலையை மூடிக்கொண்டு மேடைக்கு வருவார்கள்.
ஸ்வேதாம்பர ஜெயின் பெண்கள் தங்கள் தலையை வெள்ளை ஆடைகளால் மூடிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
திகம்பரர் ஒரு நூலால் கூட தங்கள் உடலை மறக்காமல் இருப்பதில்லை..
ஒவ்வொரு நபரும் மத, சமூக, பிராந்திய மற்றும் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்கிறார்கள்.
*முஸ்லீம் பெண்களுக்கு, தலை உட்பட முழு உடலையும் மறைப்பது ஒரு மத கட்டளையாகும். அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். இருப்பினும், இந்தியாவில்,மத விதிகளின்படி வாழ அரசியலமைப்பு சட்டம் அனுமதி உள்ளது.
ஆக இந்தச் சந்தர்ப்பத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன என்பது அறிவாளிகளுக்குத் தெளிவாகத் தெரிகிறது!
*சீக்கியர்கள் தலையில் டர்பன் அணிய அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள நாட்டில், அத்தகைய (ஹிஜாப் அணிய தடை) சட்டம் எந்த நேரத்திலும் இயற்றப்படாது என்பது உறுதி.*
*அப்படியானால், தென்னிந்தியாவில் இதுபோன்ற பிரச்சனையை சங்கிகள் கையில் எடுக்க காரணம் என்ன.?*
*இந்தியாவின் ஆட்சியை கட்டுப்படுத்த வல்லமை கொண்ட உத்தரபிரதேச தேர்தல் இன்று தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக வட இந்தியாவில் எரிபொருள் நிரப்பும் வேலை (பிளவுப்படுத்தல்) செய்தாக வேண்டும்..*
*மதவாதத்தை விற்று ஓட்டாக மாற்ற நல்ல முயற்சி நடக்கிறது.*
*கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் *ஜெய் ஸ்ரீராம்* என்ற கோஷமிட்டு செல்லும் வன்முறைக் கும்பலை தென் இந்தியாவில் பார்க்கவோ முடியாது.
அப்படி நாம் கேள்விப்பட்டதும் இல்லை...*
*முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே கல்லூரிக்கு வருகிறார்கள் என்ற வதந்திகளை அவர்கள் அங்கே பரப்புரை செய்வார்கள்..*
*கடந்த லோக்சபா தேர்தலின் போது,
ராகுல் காந்தியின் ரோடு ஷோக்களில் முஸ்லிம் லீக்கின் பச்சைக்கொடி பறந்தது.*
*தென்னிந்தியாவில் பாகிஸ்தான் கோடி பறக்கிறது என்று அந்நேரம் வட இந்தியாவில்
பரப்பப்பட்டது.*
*சங்பரிவார் தீவிரவாதிகள் இந்த வாய்ப்பை வெறுப்பு மற்றும் குரோதத்தின் பின்னணியில் வாக்குகளை தேட மட்டுமே பயன்படுத்துவார்கள்.*
*இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் தங்களது மெளனத்தை துறக்க வேண்டிய நேரம் இது.*
*தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...*
https://m.facebook.com/story.php?story_fbid=10208928293160246&id=1703149681&sfnsn=wiwspwa