Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பரிபூரண_மனிதர்களின் சிறப்பம்சங்கள்.

#இமாம்_அப்துல்லாஹில்_ஹத்தாத் #தங்கள் அவர்கள் தனது #ஹிகம்
எனும் நூலில் ஒரு பரிபூரண மனிதனின் பண்புகளை பட்டியலிட்டுள்ளார்கள்.
அந்த பரிபூரண மனிதருக்கு
பிரதானமாக #மூன்று சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

சூழ்நிலைகள் சாதகமாக
இருந்தாலும் சரி,
பாதகமாக இருந்தாலும் சரி,
தனக்கு எதிரே உரையாடுபவர்
நண்பராக இருந்தாலும் சரி,
எதிரியாக இருந்தாலும் சரி
அவர்களோடு தனது பேச்சையும், நடத்தையையும் கடினமாக்கக் கூடாது என்பதுதான் அவற்றில் முதன்மையானது.
இந்த குணமுள்ளவர்கள்
பிறர் சொல்வதை அமைதியாகக் கேட்கவும்,
உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைகளைத் துல்லியமாகக் கையாளவும்,
என்ன ஆத்திரமூட்டல்கள் எழுந்தாலும் விவேகத்தை இழக்காமல் சூழ்நிலைகளை கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கும்..

ஒருவரின் பேச்சையும்,
நடத்தையையும் அருகில் அமர்ந்து கூர்ந்து மதிப்பீடு செய்தால் அவரைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று வாழும் அறிஞர்களில் சுல்தானுல் உலமாவை முழுமைப்படுத்துகிற ஒன்றாவது விஷயம் இதுவாகும்....

தான் மதிக்கப்பட வேண்டிய இடத்தில் புறக்கணிக்கப்பட்டாலும்,
அவமதிக்கப்பட்டாலும்
அந்த சந்தர்பத்தை சரியான நெகிழ்வுத் தன்மையுடனும், நிதானத்துடனும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியாக எதிர்வினையாற்ற முடியும் என்பதுதான் இரண்டாவது விஷயம்..

1983, கொட்டாபுரம் விவாதத்திற்குப் பிறகு கேரளத்தின் முக்கு மூலைகளில் எல்லாம் உஸ்தாத் பிரபலமான சமயம்
பிறகு கொஞ்சம் நாளுக்குள் நடைபெற்ற மலப்புறம் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு..

அன்று சிறுவர்களாக இருந்த நாங்கள் அனைவரும் ஷைகுனா சுல்தானுல் உலமாவின் சொற்பொழிவைக்
கேட்க மிகுந்த ஆர்வத்துடன் அந்த மாநாட்டுக்கு சென்றோம்.
ஆனால் மாநாட்டின் ஆரம்ப கட்டத்தில், உஸ்தாது அவர்களுக்கு போதிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற எண்ணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எல்லாம் ஏற்பட்டது..

இருந்தும் நான்கு நாள் மாநாட்டில் உஸ்தாத் தனது அசல் பாணியில் இருந்து ஒரு துளி கூட அசையாமல்,
தனது முகபாவனையைக் கூட மாற்றாமல்,
குற்றச்சாட்டுகள்,
பிரதிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் எவ்வளவு நிதானமாக விஷயங்களைக் கையாண்டார்கள் என்பது இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னைக் குறித்தான அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் கேட்டும்
கூட பொது வெளியில்
மற்றவர்களைப் பற்றி உஸ்தாத் ஒரு மோசமான வார்த்தைக்கூட
சொல்லாதது யதார்த்தத்தில்
நான் உட்பட உள்ள பலரையும்
உஸ்தாத் உடன் நிற்பதே சரி என்று
உறுதியாக நம்ப வைத்தது.

செயலும் சொல்லும் உண்மையாக இருப்பது.
ஒரு பரிபூரண மனிதனின் மூன்றாவது பண்பாகும்.
தேவையில்லாத விஷயங்களுக்கு உஸ்தாத் எதிர்வினையாற்றுவதை
நாம் பார்த்ததில்லை.
உஸ்தாத் அவர்களை இல்லாமை செய்வதற்காக பொய்ப் பிரச்சார பெருவெள்ளம் காட்டாறாக பொழிந்தபோதும் உஸ்தாத் உண்மையின் குடையை பிடித்து செருத்து நின்றார்கள்

அதனால்தான் உஸ்தாத் தனது 90 களில் கூட இந்த சுறுசுறுப்புடன் தீன் காரியங்களில் தலைமை ஏற்று
வழிநடத்த முடிகிறது,
மேலும் உலக நாடுகளின் அறிஞர்கள், அரசியல் மற்றும் கலாச்சார பிரதிநிதிகள் இந்த மர்கஸ் மாநாட்டு அரங்கிலும் மற்ற இடங்களிலும் உஸ்தாதைத் தேடி இங்கு குவிகிறார்கள்.

அல்லாஹ் நமக்கு நீண்ட ஆயுளை
தந்து அந்த நிழலை நீண்ட காலம் அனுபவிக்கும் பாக்கியத்தை தருவானாக.

✍️ஸெய்யித் இப்ராஹிம்
கலீல் அல் புகாரி.

தமிழில்:
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி