ஒரு தந்தையைப் போல் எங்களை நேசித்த உஸ்தாத்
ஒரு_தந்தையைப்_போல்_எங்களை நேசித்த A.P. உஸ்தாத்..
மனசு ரொம்ப வலிக்குது.
A. P. உஸ்தாதைப் பற்றிய நிறைய நினைவுகள் என்னை அலட்டிக்கொண்டே இருக்கிறது...
கண்ணியமிகு உஸ்தாதுடன் நேரடியாக தொடர்புக்கொள்ளக்கூடிய பாக்கியம்
2008_ முதல் எனக்கு கிடைத்தது..
ஆம்.. அந்த வருடத்தில்தான் நான் மேற்படிப்புக்காக மர்கஸில் சேர்ந்தேன்..
அல்ஹம்துலில்லாஹ்..
நிறைய தடவை உஸ்தாதுடன் பயணிக்கும் வாய்ப்பையும் அல்லாஹ்
வழங்கினான்....
ஒவ்வொரு பயணமும் மறக்க முடியாதவை..
ஏராளமான அனுபவங்களை பெற்றுத் தந்த யாத்திரைகள்..
அதில் ஒரு முறை தொடர்ந்து
நான்கு நாட்கள் உஸ்தாதுடன் பயணம் செய்யும் பேரருள் கிடைத்தது
உஸ்தாத் அவர்கள் தனது மாணவர்களுக்கு வெறும் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல..
சிறந்த ஒரு தந்தையாகவும்
நடந்து கொண்டார்கள்...
கருணை, அன்பு, இரக்கம், தண்டிப்பு,
ஊக்குவித்தல்.. இப்படி ஏராளமான பண்புகளை நாம் உஸ்தாத்திடமிருந்து பெற முடியும்...
உஸ்தாதைக் குறித்து எனக்கு நிறைய நிறைய அனுபவங்கள் உண்டு..
மூன்று ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.
இடது கையில் பலத்த காயம்..
இரண்டு மமாதங்கள் என்னால் சட்டை அணிய முடியவில்லை
மேனியில் ஒரு துண்டு போட்டு மறைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தேன்..
அந்த நேரத்தில் உஸ்தாத் திடீர் பயணமாக சென்னை வந்தார்கள்...
உஸ்தாத் அவர்களுக்கு அதொரு
அவசர பயணம்..
உஸ்தாதை பார்க்க வண்டி பிடித்து விமான நிலையத்திற்கு நண்பருடன் சென்றேன்...
என்னை பார்த்ததும் உஸ்தாதின் முகம் மாறிவிட்டது....
எந்தா மோனே சம்பவிச்சு.
(மகனே என்னாச்சு உனக்கு)
உஸ்தாதிடம் விஷயத்தை சொன்னேன்..
சூக்ஷிச்சு வண்டி ஓடிக்கணம்..
(கவனமாக வண்டி ஓட்ட வேண்டும்) என்றார்கள்...
அதுபோலவே மேலும் நிறைய அறிவுரைகள் சொன்னார்கள்..
அந்த அவசரத்திலும் எனக்காக நிறைய மந்திரித்து ஓதி ஊதினார்கள்..
இதில் என்னை நெகிழ வைத்த விஷயம்
என்னவெனில்...
நான் உடலில் போர்த்திய ஷாளை திறந்து காயம் எப்படி இருக்கு என்று பார்த்தார்கள்...
விமான நிலையம் என்பதால்
ஆட்கள் நிறைய நின்றார்கள்
உஸ்தாத் அதை கண்டுக்கொள்ளவில்லை
இறுதியாக உஸ்தாதின் கமீஸ் பாக்கெட்டிலிருந்து பணத்தை எவ்வளவு என்று கூட எண்ணி பார்க்காமல் எனக்கு தந்தார்கள்....
இதில் எனக்கு வியப்பு என்னவென்றால்
இந்த இரண்டு மாதங்களில் நான் ஷாளை வைத்து மறைத்து இருந்தேன். என் நெருங்கிய ஒருவர் கூட
உன் காயம் எப்படி இருக்கு என்று ஷாளை திறந்து காட்டு என கூறவோ, பார்க்கவோ சொல்லவில்லை..
உஸ்தாத் அவ்வளவு பிஸியாக இருந்தும்
ஷாளை திறந்து என் காயத்தை பார்த்து துஆ செய்துவிட்டுச் சென்றார்கள்...
தன் சொந்த பிள்ளைகள் போன்று ஒவ்வொரு மாணவர்களையும் கவனிப்பார்கள், நேசிப்பார்கள்.. பார்ப்பார்கள்..
கருணையாளன் அல்லாஹ்
மிக விரைவாக உஸ்தாத் அவர்களுக்கு பரிபூரண ஷிஃபா வழங்கி அருள் புரிவானாக
ஆமீன்
😭😭😭😭....
துஆவுடன்..
*M.#கமாலுத்தீன் ஸகாஃபி..*
மாநில தலைவர்:சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு..
*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி*