TMJ SSF சார்பில் மாவாட்டத்தின் 500 வீடுகள் மவ்லிது மஜ்லிஸ் அதன் துவக்க விழா
இன்ஷா அல்லாஹ்
நபிகள் நாயகம்
அவர்களின்
1,500 வது மீலாது விழாவை_முன்னிட்டு
TMJ _SSF KANYAKUMARl
மாவட்ட நிர்வாகம் சார்பில்
குமரி_மாவட்டத்தில்
500 இடங்களில் மவ்லித்_மஜ்லிஸ்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது..
அதன் துவக்க_விழா
இன்றைய தினம்
(25-8-2025 திங்கள்)
திருவிதாங்கோடு ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து
காலை 11.00 மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது..
இந்த மகத்தான நிகழ்வுக்கு
TMJ கன்னியாகுமரி மாவட்ட தலைவர்
மவ்லவி Z.அஹ்மத் கபீர் அல்தாஃபி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்..
அல்ஹாபிழ்
A.முஹம்மது முபீன் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு
குமரி மாவட்ட தலைவர்
மவ்லவி M.சிராஜுத்தீன் அஹ்ஸனி
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்..
TMJ குமரி மாவட்ட துணை தலைவர்
மவ்லவி S.அபூதாஹிர் சஅதி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்..
எல்லா காலங்களிலும் மாநபி புகழ்
எனும் தலைப்பில் குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர்
மவ்லவி Z. மாஹீன்
அபூபக்கர் அன்வரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
500 இடங்களில் நடைபெற இருக்கும் மவ்லித் மஜ்லிஸ்களின்
முதல் மவ்லித் மஜ்லிஸின்
துவக்க விழா நிகழ்ச்சிக்கு
திருவை அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி துணை முதல்வரும் TMJ குமரி மாவட்ட முன்னாள் தலைவருமான
மவ்லவி_அல்ஹாபிழ் M.நிஸாமுத்தீன் அஹ்ஸனி அவர்கள் தலைமை தாங்கினார்கள்..
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு தலைவர்
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி அவர்கள்
மொழிபெயர்ப்பு செய்த
உத்தம உம்மத் எனும் நூல் TMJ மாநில நிர்வாகி மெளலானா மெளலவி M.தாஜுத்தீன் அஹ்ஸனி
அவர்கள் வெளியிட
TMJ மாவட்ட
நிர்வாகப் பெருமக்கள் மற்றும் உமராக்கள்
பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக
திருவை முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னாள் இமாம்
மவ்லவி F.ஷாஹுல் ஹமீது அன்வரி அவர்கள்
துஆ ஓதினார்கள்.
தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட பொருளாளர்
ஜனாப் A.முஹம்மது சித்தீக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இந்த மகத்தான நிகழ்வுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: #இப்னு_முஹம்மத்_அப்துல் காதிர்