ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 3
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_3
..................#நிகரில்லா_வணக்கம்
அபீ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறப்போருக்கு ஒரு படையை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த படையில் நானும் ஒருவராக இருந்தேன். எனவே நான் அண்ணலாரிடம் வந்து
"நாயகமே! இந்த அறப்போரில் நான் (ஷஹாதத் எனும்) வீர மரணமடைய எனக்காக பிரார்த்தியுங்கள் என்று கோரினேன்.
அப்போது அண்ணலார்
( اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ )
“யா அல்லாஹ்!
இந்தப் படையினருக்கு எவ்வித உயிரிழப்பும் இன்றி மிகுதியாக
(கனீமத் எனும்) போர்ச் செல்வத்துடன் அனைவரும் திரும்பி வருவதற்கு அருள்புரிவாயாக!”
என்று பிரார்த்தித்தார்கள்.
அது போன்றே நடந்தது.
இது போன்றே மூன்றுமுறை படைகளை அனுப்பும்போது நானும் இவ்வாறே கோரினேன்.
அண்ணலாரும் முன்பு போலவே பிரார்த்தித்தார்கள்.
பிறகு நான் அண்ணலாரிடம்
"நாயகமே! என்னை சொர்க்கத்தில் நுழைய வைக்கும் ஓர் வணக்கத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்"
என்று விண்ணப்பித்தேன்.
அப்போது அண்ணலார்
( عَلَيْكَ بِالصِّيَامِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ )
"நோன்பைப் பற்றிப் பிடித்துக் கொள்! இதற்கு நிகரான எந்த ஒரு வணக்கமும் இல்லை" என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத்