ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 4

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 4

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_4....

#ரமளானில்_செய்யும்_பிரார்த்தனை......

கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
( ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ )

மூன்று சாராரின் பிரார்த்தனைகளை அல்லாஹ் மறுப்பதில்லை.
அதில் ஒரு சாரார் நோன்பாளி.
அவர் நோன்பு துறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ, இப்னுமாஜா, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-294

அருமை நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
என் சமுதாயத்தினர் ரமளானில்
உள்ள மாண்புகளை முறையாக விளங்கிக் கொண்டால் வருடம் முழுவதும் ரமளானாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அறிவிப்பாளர்:- அபூ மஸ்ஊதுல் ஙஃப்ஃபாரீ (ரலி) அவர்கள்
நூல்:- ஷுஅபுல் ஈமான்