இப்படி ஒரு படிப்பும் அதற்கு நுழைவு தேர்வும் இருக்கிறதா..
இப்படி ஒரு படிப்பும், அதற்கு நுழைவுத் தேர்வும் இருப்பது இன்று தான் தெரிந்து கொண்டேன்...
All India Institute of Speech and Hearing
AIISH நடத்திய பி.ஜி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் மலப்புறம் மஹ்தின் தஃவா கல்லூரி மாணவர் முஹம்மது ஸாலிஹ் அகில இந்திய அளவில் இரண்டாவது ரேங்கில் தேர்ச்சி பெற்று
M.Sc., Speech and Language Pathology எனும் படிப்புக்கான அட்மிஷன் பெற்றார்..
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பாடப்பிரிவில் சேர்ந்து இளங்கலை வகுப்பில் உயர் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற முஹம்மது ஸாலிஹ் மவுலவியும் கூட..
பட்டாம்பி, இரும்பகச்சேரி சேர்ந்த மவுலவி அபுபக்கர் பாகவி யின் மகன் முஹம்மது ஸாலிஹ்.. இவரது சகோதரர்கள் முஹம்மது சாதிக், முஹம்மது பாறூக் இருவரும் ஹாஃபிழ்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
கேரள மாநிலம்முழுவதும் மார்க்க கல்வியோடு உலகக்கல்வியை இணைத்து வழங்கும் கல்வி நிறுவனங்கள் மாவட்டம் தோறும் காணப்படுவது கூட கேரள முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கியமான காரணமாகும்..
Colachel Azheem