அரபு பத்திரிகைகளில் தடம் பதிக்கும் இளம் ஆலிம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அரபு_பத்திரிகைகளில்
தடம் பதிக்கும்
ஒரு இளம் ஆலிம்...
சமீபத்தில் ஒரு இளம் ஆலிமை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவர் பெயர் முஹம்மது #ராஃபி..
மலப்புரம் மஃதின் அகாடமியின் முதல் ஆண்டு பட்டதாரி மாணவர்.
அரபு உலகின் முன்னணி நாளிதழ்களில் கதைகள்,கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார்..
குவைத்திலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகை #அல்_ஜரீதாவில் ராஃபியின் சிறப்பு நேர்காணல் வெளிவந்தது..
ராஃபி அரபியில் மொழி பெயர்ப்பு செய்த இளம் கவிஞர் விபின் சாலியபுரத்தின் சில கவிதைகளை சவூதியின் பிரபல பதிப்பாளர்கள் வெளியிட உள்ளனர்..
மத்திய கிழக்கின் காற்றை சுவாசிக்காமல் இதெல்லாம் சாத்தியமானது ஆச்சரியமான
ஒன்று தான்...
எழுத்து உலகில் மேலும் வளர்ச்சி அடைய ராஃபிக்கு நமது நெஞ்சார்ந்த
நல் வாழ்த்துக்கள்...
தகவல் :
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி.