பத்ர் போர் பாகம் 2

பத்ர் போர் பாகம் 2

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பத்ர்_போர்.

வினா_விடை...

பாகம்_2....

26 :பத்ருப் போர்களத்தில் வியாபார கூட்டத்தின் தலைவர் யார்..?

*அபூ ஸுஃப்யான்*

27 :மக்கா காஃபிர் படையின் தலைவர் யார்..?

*அபூ ஜஹ்ல்*

28 :பத்ருப் போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹு அறிவித்த நற்செய்தி என்ன..?

அல்லாஹு வியாபார கூட்டம் அல்லது குறைஷிகளின் படை இரண்டில் ஒன்றை வெற்றி கொள்ளும் பாக்கியத்தை வழங்கினான்...
(*அல்குர்ஆன்_8=7*)

29 :தங்களது கூட்டத்தினரை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென கூற அபூ ஸுஃப்யான் மக்காவுக்கு யாரை அனுப்பினார்..?

*ளம்ளப்னு அம்ரில் கிஃபாரியா.*

30 :வியாபார சங்கம் தப்பித்தச் செய்தி அறிந்த குறைஷி அணியிலிருந்து ஒரு பிரிவினர் திரும்பி சென்று விட்டனர்.அவர்கள் யார்?

*அக்னஸுப்னு ஷரீக்கின் தலைமையிலுள்ள ஸஹ்றா குலத்தைச் சேர்ந்தவர்கள்..*

31 : நபி (ஸல்) அவர்களுடன் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டு பயணித்த சகபயணிகள் யார்..?

*அலி (ரலி),மர்ஸத் பின் மர்ஸத் (ரலி) அவர்கள்.*

32 :குறைஷித் தலைவன் அபூ ஜஹ்லை கொலை செய்தது யார்..?

*முஆத் பின் அம்ர் (ரலி),முஅவ்வித் பின் அஃப்றாஃ என்ற இரண்டு சிறுவர்கள்..*

33 :குறைஷி பிரமுகர் உமைய்யாவை கொலை செய்தது யார்..?

*முன் காலத்தில் உமைய்யாவின் அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்கள்.*

34 :காலாப்படையின் தலைவராக நபி (ஸல்) அவர்கள் யாரை நியமித்தார்கள்..?

*கைஸுப்னு அபீ ஸஃஸஃஅ (ரலி) அவர்களை நியமித்தார்கள்..*

35 : பதினாறு வயதுள்ள ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.அவர் அழத் தொடங்கினார்.நபி(ஸல்) அவர்கள் அவருக்கு போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார்கள்.கடைசியில் பத்ரு போரில் வீரமரணம் அடையவும் செய்தார்.அவர் பெயர் என்ன.?

*உமைருப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.*

36 :நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் புரிய யாருடைய கருத்தை அதிகம் எதிர்பார்த்தார்கள்...?

*முஸ்லிம்களின் படையில் அன்ஸாரிகள் அதிகம் இருந்த காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்ஸாரிகள் கருத்தை அறிவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்..முஸ்லிம் _3646.*

37 :பத்ருப் போரில் எதிரிகளிடம் அதிகம் வீரர்கள் இருக்கின்றனர் என்பதை நாயகம் (ஸல்) அவர்கள் எதை வைத்து கணித்தார்கள்..?

*எதிரிகள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்தார்கள்..*

38 :பத்ருப் போர் நடக்கும் முந்தைய இரவில் முஸ்லிம்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், பலம் பொருந்தியவர்களாகவும் எதனால் மாறினார்கள்..?

*அல்லாஹு முஸ்லிம்களுக்கு சிறிய நிம்மதியான தூக்கத்தையும்,மழை பொழியவும் வைத்தான்.*

39 :பத்ருப் போரில் எத்தனை வானவர்களைக் கொண்டு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி புரிந்தான்..?

*"நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புபாதுகாப்புக் கோரிய போது " உங்களுக்கு பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்..*

40 :பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் பத்ரிய்யி ஆனவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்...காரணம் என்ன..?

*தன்னுடைய மனைவியும் நபி (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கிய்யா (ரலி) அவர்கள் நோய்வாய்பட்டு இருந்த காரணத்தினால் அவர்களைக் கவனித்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள்..*

41 : வியாபார சங்கம் தப்பித்துக் கொண்டதை புரிந்து கொண்ட அபூ ஸுஃப்யான் குறைஷிகளை திரும்பி மக்காவுக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டார்.இதை அவர்களிடம் சொல்ல அபூ ஸுஃப்யான் யாரை அனுப்பினார்..?

*கைஸுப்னு இம்ரில் கைஸை அனுப்பினார்..*

42: பத்ருப் போர் களத்தில் நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் அல்லாஹு விடம் எவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்?

*(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) ”கிப்லா”வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.*

*👉”இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். 👈*

*எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, ”அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.)
(முஸ்லிம் 3621)*

43: நபிகள் நாயகம் { ஸல்} அவர்கள் பத்ருப் போருக்கு முந்தைய நாளிலேயே இன்ன இடத்தில் இன்ன மனிதர் மாண்டுள்ளார் என்று சொன்னது உண்மையா?

*உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள். பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். ”அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்” என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.*
*(முஸ்லிம்:5511)*

44: பத்ருப் போரில் எத்தனையாவது வானத்தில் இருந்து வானவர்கள் உதவி செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்?

*இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் ”ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நீர் சொன்னது உண்மையே.*

*இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள்.*
(முஸ்லிம் :3621)

45: அல்லாஹ் வானவர்களுக்கு எவ்வாறு வஹி அறிவித்தான்?

*"நான் உங்களுடன் இருக்கிறேன் நம்பிக்கை கொண்டோரை பலப்படுத்துங்கள் ! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்து களுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! " என்று அல்லாஹ் வானவர்களுக்கு வஹி அறிவித்தான்.*
*குர்ஆன்( 8:12)*

46: பத்ருப் போர்களத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கண்டார்கள்?

*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.*
*(ஷஹீஹ்புகாரி :3995*.)

47: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களுமு பத்ருப் போரில் கலந்து கொண்டதைப் பற்றி எவ்வாறு பேசிக் கொண்டார்கள்?

*நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்.(புகாரி:3992).*

48 :எத்தனை காஃபிர்களின் சடலங்கள் பத்ருப் போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் போடப்பட்டது..?

*_24 காஃபிர்களின் சடலங்கள் போடப்பட்டது.*

49 : பத்ருப் போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து எத்தனை பங்கு ஒதுக்கப்பட்டது..?

*100_ பங்கு ஒதுக்கப்பட்டது.*

50 :பத்ருப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்ததா..?

*ஆம்__ முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது....*

ஆக்கம்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..