பத்ர் போர் வினா விடை பாகம் 1
......#பத்ர்_போர்.......
வினா_விடை
.....பாகம்_1.....
1 : பத்ர் என்ற இடம் எங்குள்ளது..?
*மதீனாவிலிருந்து 135_கி.மீ தொலைவிலும் மக்காவிலிருந்து 345_ கி.மீ.தொலைவிலும் உள்ளது.*
2 : இந்த இடத்திற்கு பத்ர் என்று பெயர் வரக்காரணம் என்ன.?
*பத்ர் பின் யக்லத் என்பவர் இந்த இடத்தில் வசித்ததால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது.*
3 : ஒன்றாவது பத்ர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சிறப்பித்து கூறும் நிகழ்வு எது.?
*குர்ஸு இப்னு ஜாபிர் அல் ஃபிஹ்ரி என்பவர் மதீனா வாசிகளின் விலங்குகளை கொள்ளையடித்து சென்றதை பிடிக்க சில நபர்களை நபி (ஸல்) அவர்கள் பத்ருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் ஃபிஹ்ரியை பிடிக்க முடியவில்லை..*
4 : பத்ர் போர் நடந்த ஆண்டு, மாதம், தினம் எது.?
*ஹிஜ்ரி : 2_ ஆண்டு ரமளான் மாதம் பிறை_17 வெள்ளிக்கிழமை தினம் நடைபெற்றது.*
5 :இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் எது.?
*பத்ர் போர்*
6 : வானவர்களும் வானிலிருந்து இறங்கி வந்து நபித்தோழர்களுடன் எந்த போரில் கலந்து கொண்டனர்.?
*பத்ர் போர்*
7 : முஸ்லிம் அணியிலிருந்து எத்தனை பேர் பத்ர் போரில் கலந்து கொண்டனர்.?
*313*
8 : எதிரி அணியிலிருந்து எத்தனை பேர் பத்ர் போரில் கலந்து கொண்டனர்..?
*1300_பேர் கலந்து கொண்டனர்.*
9 :பத்ர் போர் ஏற்படக் காரணம் என்ன.?
*முஸ்லிம்களை அடியோடு அழிக்க நினைக்கும் மக்கா காஃபிர்களின் இந்த வியாபார கூட்டத்தைப் பிடித்தால் தான் அவர்களின் பொருளாதார வலிமையை வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் புறப்பட்டார்கள்.*
10 :பத்ர் போரில் முஹாஜிர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர்.
*82_பேர் கலந்து கொண்டனர்.*
11 : பத்ர் போரில் அன்ஸாரிகள் எத்தனை பேர் கலந்து கொண்டனர்.?
*231_பேர் கலந்து கொண்டனர்.*
12 :முஹாஜிரீன்களின் படைக்கு தலைமை வகித்தது யார்.?
*அலி (ரலி) அவர்கள்..*
13 : அன்ஸாரிகளின் படைக்கு தலைமை வகித்தது யார்..?
*ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.*
14 : முஸ்லிம்களிடம் எத்தனை வாகனங்கள் இருந்தது..?
*ஒன்று அல்லது இரண்டு குதிரைகளும் எழுபது ஒட்டகங்களும் இருந்தது.*
15 : காஃபிர்களிடம் எத்தனை வாகனங்கள் இருந்தது..?
*100_ குதிரைகளும் 600 கவச ஆடைகளும் பெரும்பாலான ஒட்டகங்களும் இருந்தது.*
16 : பத்ருக்கு நபி (ஸல்) அவர்கள் எப்போது புறப்பட்டுச் சென்றார்கள்..?
*ரமளான் 12_சனிக்கிழமை.*
17 _பத்ரில் ஷைத்தான் யாருடைய வேடத்தில் வந்தான்.?
*கினானா குலத்திலே ஸுறாகத்துப்னு மாலிக்கின் வேடத்தில் வருகை புரிந்தான்..*
18 : பத்ர் போரில் காஃபிர்கள் தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்..?
*எழுபது பேர் கொல்லப்பட்டார்கள்.*
19 : பத்ர் போரில் முஸ்லிம் தரப்பிலிருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்..?
*14_பேர் கொல்லப்பட்டார்கள்.*
20 :பத்ர் போரில் காஃபிர்களின் தரப்பிலிருந்து எத்தனை பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள்..?
*எழுபது பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள்.*
21 :முஸ்லிம்களின் நீர்தேக்க தொட்டியை உடைத்தது யார்..?
*அஸ்வத்*
22 : அஸ்வதை கொலை செய்தது யார்.?
*ஹம்ஸா (ரலி) அவர்கள்.*
23 : பத்ரு போருக்காக சென்ற வேளையில் மதீனாவில் தொழுகைக்கு தலைமை வகிக்க நபி (ஸல்) அவர்கள் யாரிடம் சொன்னார்கள்..?
*அப்துல்லாஹி இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.*
24 : மதீனாவிலே ஆட்சிப் பொறுப்பை நபி (ஸல்) அவர்கள் யாரிடம் ஒப்படைத்தார்கள்..?
*அபூலுபாபாவிடம் (ரலி) ஒப்படைத்தார்கள்.*
25 : பத்ர் போரில் முஸ்லிம் தரப்பிலிருந்து கொடியை தாங்கி பிடித்து சென்றவர் யார்..?
*உமர் (ரலி) அவர்களின் அடிமையாக இருந்த மிஹ்ஜஃ (ரலி) அவர்கள்..*
*இன்ஷா அல்லா தொடரும்....*
*தகவல்:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி..*