நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் கொடுத்த மரம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் கொடுத்த மரம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல்
கொடுத்த மரம்.

الشجرة المباركة التي استظل بها رسول الله صلى الله عليه وسلم في الصفاوي

மக்காவிலிருந்து சிரியா செல்லும் வழியில் ஜோர்டான் நாட்டின்
#ஸஃபாவி என்ற பள்ளதாக்கில் இந்த மரம் நிலைகொள்கிறது..

மக்கத்து சீமாட்டி கதீஜா_அம்மையார் நாயகம் (ஸல்) அவர்களின் 25 வயதில் மைஸறா என்ற நபருடன் சிரியாவுக்கு வியாபாரத்திற்க்காக அனுப்புகிறார்கள்...

அவ்வேளையில் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மரச்சுவட்டில் ஓய்வெடுக்கிறார்கள்.

ஒரு புரோகிதர் மைஸறாவிடம் கேட்கிறார் இந்த மரத்தின் சுவட்டில் இருக்கும் மனிதர் யார்?

மைஸறா சொல்கிறார்.
இவர் முஹம்மது இப்னு அப்தில்லா.

உடனே அந்த புரோகிதர் சொன்னார். இந்த மரச்சுவட்டில் நபிமாரல்லாது
வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.

ஜோர்டான் நாட்டு அரசாங்கம் இதை அழகிய சுற்றுலாத்தலமாக்கி வேலிகள் அமைத்து நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர்..

இவ்விடங்களை சந்திக்கும் வாய்ப்பை இறைவன் நமக்கு தந்து அருள்புரிவானாக....

தகவல்.M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி